நிலத்திற்கு அழகு விவசாயம் (Post No.8584)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8584

Date uploaded in London – – –28 August 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

நிலத்திற்கு அழகு விவசாயம்! பெண்ணுக்கு அழகு நல்ல கணவன்!!

ச.நாகராஜன்

கடினமான சில கேள்விகளுக்கு விடை தரும் இரண்டு சம்ஸ்கிருத சுபாஷித ஸ்லோகங்கள் இதோ:

நிலத்திற்கு அழகு என்ன?

ஒரு பெண்ணிற்கு அழகு என்ன?

ஒரு தந்தைக்கு செய்ய வேண்டிய கடமை என்ன?

ஒரு பிராமணனுக்கு எது அழகு?

கேள்விகள் நல்ல கேள்விகள் தான்! பதில்? இதோ:-

க்ருஷ்யா பரிஷ்க்ருதா பூமிர் பர்த்ருபக்ஷேண கன்யகா |

பிதா பரிஷ்க்ருத: ச் ரார்த்தே சௌசாசாரேண ப்ராஹ்மணா: ||

நல்ல விவசாயம் செய்வதால் நிலம் அலங்கரிக்கப்படுகிறது.

ஒரு கன்னிக்கு அழகு நல்ல கணவன் வாய்ப்பதாகும்.

இறந்து போன ஒரு தந்தைக்கு கௌரவம் அவருக்கு உரிய வருஷாந்திர ச்ரார்த்தத்தைச் செய்வது தான்!

ஒரு பிராமணனுக்கு அழகு செயலில் தூய்மையும் ஆசாரமும் தான்!

Land is adorned by good farming,

A maiden by getting a good husband,

A (deceased) father is honoured by annual religious rite (sraddha) and

The Brahmana-s are honoured by their purity and good actions.

                                                              (Translation by A.A.R)

                                              ****

பஞ்சத்தை ஒழிக்க வழி என்ன?

வியாதிகளைப் போக்க வழி என்ன?

பெண்ணை அவளிடத்தில் இருக்கச் செய்ய வழி என்ன/

சபையில் ஒருவன் புகழ் பெறச் செய்ய வேண்டியது என்ன?

கஷ்டமான கேள்விகள்; ஆனால் சுலபமான பதில்கள் இதோ ஒரு சுபாஷித ஸ்லோகம் தருகிறது :

க்ருஷ்யா ஜயதி துர்பிக்ஷம் கோமிராமயிதா ஜிதா |

ஜிதா பலவதா நாரி வஸ்த்ர சாஸ்த்ர ஜிதா சபா ||

துர்பிக்ஷத்தை – பஞ்சத்தை – உழுது பயிரிடுவதால் ஜெயிக்க வேண்டும்.

பசுவினால் (அதன் பால்,நெய், தயிர் முதலியவற்றால்) வியாதிகளை ஜெயிக்க வேண்டும்.

ஒரு பெண்ணை பலவானாக இருப்பதால் ஜெயிக்க வேண்டும்.

நல்ல ஆடைகளாலும், சாஸ்த்ர  ஞானத்தாலும் அறிஞர்கள் கூடும் சபையை ஜெயிக்க வேண்டும்.

Famine is overcome by care in farming,

Diseasesn are vanquished by cows (dairy products),

A woman is kept in her position by a strong man, and,

One shines in an assembly by good clothes and learning.

                                                                     (Translation by A.A.R)

                                              ****

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: