
WRITTEN BY KATTUKKUTY
Post No. 8591
Date uploaded in London – 29 August 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com


குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும்…….
குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடாஇது
கொள்ளை அடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டு உலகமடா
தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா
தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா (ப.கோ.க.சு)
ஒருஜோக்!
கேள்வி -ஆசைக்கும் பேராசைக்கும் உள்ள வித்யாசம் என்ன???
பதில். -பணக்காரனாக வேண்டும் என்பது – ஆசை
நாமே நோட்டு அடித்து பணக்காரனாக வேண்டும்
என்பது – பேராசை!!!
என்னிடம் வரும் எல்லோரும் கேட்பது
எப்போது நான் எப்போ கோடீஸ்வரன்ஆவேன்????
சில கிரக ஸ்தானங்களில், சில பார்வைகளில் சிலருக்கு பண வரவு
இருக்கும்.பணவரவு என்பது ஒரு “relative term”
உதாரணமாக ஒரு பிச்சைகாரனுக்கு ரூ 100/- கிடைத்தால்
இன்னும் 5 நாட்களுக்கு கவலை இல்லை கடவுள் கண் திறந்தி
ருக்கிறார்.இன்று எனக்கு “தன யோகம்”என சந்தோஷப்படுவான்.
இதே மாதம் ரூ 15,000/- சம்பாதிப்பவருக்கு பாக்கெட் மணி!!!
மாதம் ரூ 50,000/- சம்பதிப்பவருக்கு ஹோட்டலில் சாப்பிட்ட
பின் கொடுக்கும் டிப்ஸ்….. ரொம்ப பணக்கார்ரருக்கு இது
10 பைசா நாணயம்( இப்போது புழக்கத்தில் இல்லை)பிச்சை
காரனுக்கு 50 பைசா போட்டால்.நீ பிச்சைகாரனா, அல்லது
நான் பிச்சைகாரனா என்பது போல் பார்ப்பானே ஒரு பார்வை…
ஆகையால் வரும் மனிதனின் வருமானத்திற்கு தகுந்த மாதிரி
“தன யோகத்தை “அட்ஜஸ்ட் செய்ய வேண்டியிருக்கிறது!!!!
வருகிற ஆட்களோ சாதாரண குறைத்து கேட்கிற ஆசாமிகள்
இல்லை.அவருடைய வருமானம் பிடித்தம் போக 30 k தான்
இருக்கும்…….ஆனால்
வந்தவுடன் கேட்பதோ நான் எப்ப கோடீஸ்வரன் ஆவேன்????
இவரகளை எல்லாம் கோன் பனேகா குரோர் பதியில்உட்கார
வைத்தால் 4 வது கேள்வியிலேயே 3 options( life line)ம் இழந்து தலை தெறிக்க ஓடி விடுவார்கள்!!!!
நான் அந்த மாதிரியெல்லாம் கேட்கவும் முடியாது , கேட்கவும்
தெரியாது….அதெல்லாம் தெரிந்தால் நான் கடையை விரித்துகொண்டு இங்கு ஏன் உட்கார்திருக்கிறேன்????
சும்மா கதை அளக்காதீர்கள் கத்து குட்டி சார்….
நான் எப்போ கோடீஸ்வரன் ஆவேன்????
முசப் பிடிக்கற நாய் மூஞ்சியப்பார்த்தா தெரியாது?.?
உனக்கெல்லாம் லட்சம் கிடைப்பதே கஷ்டம் இதுல கோடி
வேணுமா உனக்கு???எந்திரிய்யா என்று சொல்லத்தான் ஆசை.
அந்த வெற்றிலை பாக்குடனே வைச்சிருக்கிற பச்சை நோட்டு
தடுக்கறதே????
சரி ஜாதகத்தை எடு
லகனாதிபதியும், 9-ம் அதிபதியும் கூடினாலும் ஒன்றுக்கொன்று
வீடு மாற்றிக் கொண்டாலும் தர்ம யோகம்
இருக்கிறதா??? இல்லை….
கும்பத்தில் சூரியன் இருந்து சிம்ம ராசியைப் பார்த்தால்
லாவண்ய யோகமாம் அதாவது திடீர் பணக்கார்ர் ஆவார்
இருக்கிறதா ???? இல்லை…..
மேஷம்,அல்லது ரிஷபம் அல்லது கடகம் இவற்றில். ஏதேனும்
ஓரு இடத்தில் ராகு இருந்துகுருவும் சுக்கிரனும் எங்கிருந்தாவது
ராகுவைப் பார்க்கிறததா?..
இல்லை
சரிபுதனும், சுக்கிரனும், சேர்ந்து மீனத்திலாவது கன்னியிலாவது
(மகா லட்சமியோகம்)இருக்கிறதா???
இல்லை
9-ம் இடத்தில் கிரகம் உச்சம் பெற்று 5 க்குடையவனுடன் கூடினால்
மிகுந்த செல்வத்திற்கு அதிபதியாவான்( பதும யோகம்)
இருக்கிறதா???? பதில் இல்லை
9-ம் இடத்தில் சுபர் இருக்க 9-ம்இடத்து அதிபதி சந்திரனுக்கு
9-ல் இருக்க செல்வம் பெருகிக் கொண்டே போகுமாம்
(தன யோகம்)
லகனாதிபதி 2க்குடைய தனாதிபதி,9.க்குடைய பாகயாதிபதி
11க்குடைய லாபாதிபதி இந்த நால்வரும் கேந்திரத்த்திலேயாவது
திரி கோணத்திலேயாவதுஇருக்கிறார்களா???
இல்லை அய்யா இல்லை
மெதுவாக எழுந்தார் அப்போ நான் போய் வருகிறேன்…..
இருங்கள மிச்சம் இருக்கும் 11 காம்பிநேஷன்களையும்
பார்த்து விடுவோமே…..
இல்லை அவசர ஜோலி இருக்கிறது வருகிறேன் என்று
தட்டை கையில எடுத்தார் பச்சை நோட்டை எடுத்து விட்டு பாக்கெட்டில்
வைத்துக் கொண்டு மஞ்சள் நோட்டை வைத்து என்னிடம் கொடுத்தார்.
பின்னால் யார்மூலமாகவோ கேள்விப்பட்டேன் “இ வனல்லாம்
ஒரு ஜோஸ்யனா??? நான் நினைத்ததை சொல்ல முடியவில்லை”
நான்வேறு “நல்ல “ஜோஸ்யனைப பார்த்துக் கொள்கிறேன்!!!


BILLIONAIRE AMBANI
இவர் கோடீஸ்வரன் நினைத்துக் கொண்டு வந்தால் நான்
இவரை கோடீஸ்வரன் ஆகிவிடுவாய் எனச்சொல்ல வேண்டுமாம்.
அந்த மாதிரி இவர் “கட்டம் “இல்லையே???
நான் நினைத்துக் கொண்டேன் அப்படி கோடீஸ்வர ஜாதகமாய்
இருந்தால் இவர் என்னிடம்வருகிறார்??? B M W காரையல்லவோ
அனுப்பிருப்பார்!!!
ஜோஸ்யம் பார்க்க அனைவரும் தான்நினைத்ததை அப்படியே
சொல்ல வேண்டும். அவர்கள் தன் தகுதியை ஆண்டவன்
இப்படித்தான் நிர்ணயித்திருக்கிறான் என்று நினைப்பதே
இல்லை ஜோஸ்யன் தப்பு வேறு “நல்ல “ஜோஸ்யனை பார்ப்போம்
என நினைக்கிறார்களே தவிர தன் (ஜாதகத்தின் )மொத்த
தகுதியே இவ்வளவு தான்என உணருவதில்லை.ஆனால்
போனவுடன்,நீ கோடீஸ்வரன் நீ தான் , அடுத்த மந்திரி நீதான்
எனப்பொய்யையே விரும்புகிறார்கள்
ஏமாற ஆட்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள்
இருக்கத்தான் செய்வார்கள்
குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா
தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா
தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா!!!!

TAGS– குறுக்கு வழி, கோடீஸ்வர ஜாதகம், கோடீஸ்வரன் ,ஜோஸ்யன்