

Post No. 8592
Date uploaded in London – 29 August 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
செப்டம்பர் 2020 ‘நற்சிந்தனை’ காலண்டர்
நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி, இந்த நாடே இருக்குது தம்பி;
சத் புத்திரர்கள்/ நல்ல குழந்தைகள் பற்றி 30 பொன்மொழிகள் செப்டம்பர் (சார்வரி 2020) காலண்டரை அலங்கரிக்கின்றன. 2014-ம் ஆண்டு முதல் இதுவரை 5000 க்கும் மேலான தமிழ், சம்ஸ்கிருத , இந்து மத மேற்கோள்கள் இந்திய நூல்களில் இருந்து தரப்பட்டுள்ளன. பொருள் வாரியாக மேற்கோள்கள் தரப்பட்டுள்ளதால் மாணவர்கள், பேச்சாளர்கள் , கட்டுரை எழுதுவோருக்கு மிகவும் பயன்படும். விரைவில் புத்தக வடிவிலும் வெளிவரும் .
பண்டிகை நாட்கள் – செப்டம்பர் 5- ஆசிரியர் தினம்/டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாள் ; சுவாமி சிவானந்தா பிறந்த தினம் ;
11- பாரதியார் நினைவு தினம் ; 16-விஸ்வகர்ம பூஜை 17 – மஹாளய அமாவாசை ;
பவுர்ணமி -1; அமாவாசை -17; ஏகாதசி விரதம் – 13, 27
முகூர்த்த தினங்கள் – 4, 14, 16

Xxxxxx
செப்டம்பர் 1 செவ்வாய்க்கிழமை
நல்ல குழந்தைகளைப் பெற்றால் ஏழு பிறப்பும் தீயவை தீண்டா–குறள் 62 –
மநு 21 தலைமுறைகளை தீயவை தீண்டா என்கிறார் .
xxx
செப்டம்பர் 2 புதன் கிழமை
ஆணை அடித்து வளர்க்க , பெண்ணைப் போற்றி வளர்க்க – தமிழ்ப் பழமொழி
xxx
செப்டம்பர் 3 வியாழக்கிழமை
உங்கள் குழந்தைகள் நீங்கள் செய்த கர்ம வினைப்படி வந்து பிறப்பர், தீதும் நன்றும் பிறர் தர வாரா –குறள் 63
XXX
செப்டம்பர் 4 வெள்ளிக்கிழமை
குழந்தைகள் பிஞ்சுக் கரங்களால் அளாவிய கூழ் , தேவ லோக அமிர்தத்தைவிட இனியது.–குறள் 64
XXX
செப்டம்பர் 5 சனிக்கிழமை

‘புத்’ என்னும் நகரத்தில் விழாதபடி தாய் தந்தையரைக் காப்பதால் மகனுக்கு புத்ர (தமிழில் புதல்வன்) என்ற பெயர் வந்தது – மநு நீதி நூல் , 9-138
xxx
செப்டம்பர் 6 ஞாயிற்றுக்கிழமை
(தொல்காப்பியம் , மநு ஸ்மிருதி சொல்லும்) எட்டு வகைத் திருமணங்களில் முதல் 4 வகித்த திருமணம் மூலம் பிறக்கும் குழந்தைகள் தேஜஸுடன் விளங்குவர்; கற்றோரால் மதி க்கப்படுவர் – மநு 3-39
xxxx
செப்டம்பர் 7 திங்கட் கிழமை
பிரம்ம விவாஹம் மூலம் பிறந்த மகன் நல்லது செய்தால் முந்தைய 10 தலைமுறைகளையும், தனக்குப் பிந்தைய பத்து தலை முறைகளையும் (நரகத்தில் விழாமல் ) கடைத்தேற்றுவான்; அவன் 21ஆவது ஆளாக சுவர்க்கம் புகுவான்.மநு 3-37
XXX

செப்டம்பர் 8 செவ்வாய்க்கிழமை
சாண் பிள்ளையானாலும் ஆண்பிள்ளை இருக்க வேண்டும்- தமிழ்ப் பழமொழி
xxx
செப்டம்பர் 9 புதன் கிழமை
குழந்தைகளை அணைத்தால் உடலுக்கு இன்பம்; மழலையைக் கேட்டால் காதுக்கு இன்பம்- குறள் 65
xxxx
செப்டம்பர் 10 வியாழக்கிழமை
மழலையைக் கேட்டு அனுபவிக்காதவர்கள் புல்லாங்குழலும் வீணை வாத்யமும் இனியது என்பர்– குறள் 66.
XXX
செப்டம்பர் 11 வெள்ளிக்கிழமை
தந்தையின் கடமை – மகனைக் கல்வி கேள்விகளில் சிறந்தவனாக்குதல் – குறள் 67

BHARATI ANNIVERSARY DAY
xxxx
செப்டம்பர் 12 சனிக்கிழமை
தந்தையை விட மகன் அறிவு பெறுவது, குடும்பத்துக்கு மட்டுமின்றி மன்னுயிர்க்கெல்லாம் இனிது- குறள் 68.
XXX
செப்டம்பர் 13 ஞாயிற்றுக்கிழமை
தந்தைக்கு மகன் செய்யும் உதவி- இவனைப் பெற இவன் தந்தை என்ன தவம் சசெய் தாரோ என்று வியக்க வைப்பதாகும் —
xxx
செப்டம்பர் 14 திங்கட் கிழமை
மக்கட்பேறுதான் இல்வாழ்வானின் செல்வங்களில் பெரிய பேறு – குறள் 61
XXX
செப்டம்பர் 15 செவ்வாய்க்கிழமை
மகனுக்குப் பிறந்த மகனுக்கும், மகளுக்குப் பிறந்த மகனுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை . மகள் வயிற்றுப பிள் ளையும் மூதாதையர்களைகே காப்பாயேற்றுவா;ன் — மனு 9-139
xxx
செப்டம்பர் 16 புதன் கிழமை
நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி, இந்த நாடே இருக்குது தம்பி
சின்னஞ்சிறு கைகளை நம்பி, ஒரு சரித்திரம் இருக்குது தம்பி.
–பெற்றா ல் தான் பிள்ளையா திரைப்படப் பாடல்
xxxx
செப்டம்பர் 17 வியாழக்கிழமை
ஆத்மா புத்ரஹ , ஸகா பார்யா – ஸம்ஸ்க்ருத பழமொழி
தானே மகன் உருவத்தில் வருகிறான்; மனைவி அதற்குத் துணை செய்கிறாள்
XXX
செப்டம்பர் 18 வெள்ளிக்கிழமை
அபைதி நைகபுத்ராணாம் ஸந்தான க்ஷயஜம் பயம் – பாரத மஞ்சரி
ஒரே பிள்ளை உடையோர், தமது பரம்பரை முடிந்துவிடுமோ என்ற பயத்தில் வாழ்கிறார்கள் .
XXX

செப்டம்பர் 19 சனிக்கிழமை
கஸ் மை ந ரோசதே புத்ரோ யோ தனா ர்ஜன க்ருதகுணீ .–ஸம்ஸ்க்ருத பழமொழி
நல்ல, பணம் சம்பாதிக்கும் மகனை யார்தான் விரும்ப மாட்டார்கள்
XXX
செப்டம்பர் 20 ஞாயிற்றுக்கிழமை
கெட்டவனாக இருந்தாலும் சொந்த மகனை எந்த புத்திசாலி விட்டுக்கொடுப்பான்
துர்வ்ருத்தமபி கஹ புத்ரம் த்யஜேத் புவி விசக்ஷனஹ – வால்மீகி ராமாயணம் 2-64-64
XXX
செப்டம்பர் 21 திங்கட் கிழமை
மகனைச் சான்றோன் என்று மற்றவர் பாராட்டுகையில் ஒரு தாய்க்கு, ஈ ன்ற பொழுது கிடைத்த இன்பத்தைவிட கூடுதல் இன்பம் கிடைக்கும் -குறள் 69
XXX –
செப்டம்பர் 22 செவ்வாய்க்கிழமை
நாஸ்தி புத்ரஸமஹ பிரியாஹ- வால்மீகி ராமாயணம் 2-74-24
மகனைப் போல பிரியமானவான் வேறு உளதோ
XXX
செப்டம்பர் 23 புதன் கிழமை
குணமே இல்லாதவன் ஆனாலும் எப்படி ஒருவன் சொந்த மகனை நிராகரிக்க முடியும்
நிர்குணஸ் யாபி புத்ரஸ்ய கதம் ஸ்யாத்வினிவாஸனம் – வால்மீகி ராமாயணம் 2-33-11
XXX
செப்டம்பர் 24 வியாழக்கிழமை
குழந்தைகளற்ற வாழ்க்கை இன்பமில்லாத வாழ்க்கையே
விநாத் மஜேனாத்ம வதாம் குதோ ரதிஹி – வால்மீகி ராமாயணம் 2-12-111
XXX
செப்டம்பர் 25 வெள்ளிக்கிழமை
புத்ரஹ சத்ருரபண்டிதஹ – சாணக்ய நீதி
முட்டாள் மகன் எதிரியே ஆவான்
XXX
செப்டம்பர் 26 சனிக்கிழமை
தூய குலத்தில் பிறக்கும் மகன் இப்பிறப்பிலும் மறுபிறப்பிலும் நன் மைகளைக் கொணர்வான் – காளிதாசனின் ரகுவம்சம் – 1-69
ஸந்ததிஹி சுத்தவம்ஸ்யா ஹி பரத்ரேஹ ச சர்மனே

XXX
செப்டம்பர் 27 ஞாயிற்றுக்கிழமை
நல்ல செயல்களால் தந்தைக்கு மகிழ்ச்சியை உண்டாக்குவோனே நன்மகன் ஆவான்
யஹ ப் ரிணயே த் சுசரிதைஹி பித்தாராம் ஸ புத்ரஹ — நீதி சதகம் -59
XXX
செப்டம்பர் 28 திங்கட் கிழமை
புத்ரோத்ஸவே மாத்யதி கா ந ஹர்ஷாத் – ஸம்ஸ்க்ருத பழமொழி
ஈன்ற பொழுது பெ ரித்துவக்காத தாய் எவள் இருக்கிறாள்
XXX
செப்டம்பர் 29 செவ்வாய்க்கிழமை
ஒரு நல்ல பெருமை மிகு வீட்டுக்கு மகனை விட வெளிச்சம் தரும் விளக்கும் உளதோ
ஸத் புத்ர ஏவ குலசத்மனி கோபி தீபஹ – சுபாஷித ரத்ன கண்ட மஞ்சுஷா
XXX
செப்டம்பர் 30 புதன் கிழமை
புத்ர பாசம் என்பதைத் துறப்பது மிகவும் கடினம் – கதா சரித் சாகரம் / கதைக் கடல்
துஸ் த்யஜோ ஹி சுத ஸ்னேஹஹ
XXX
சுபம்
TAGS – நல்ல பிள்ளை, சத் புத்திரர்கள், நல்ல குழந்தைகள் ,30 பொன்மொழிகள், செப்டம்பர் 2020