லட்சாதிபதியாக 4 சுலபமான வழிகள் !!! (Post No. 8602)

WRITTEN BY KATTUKKUTY

Post No. 8602

Date uploaded in London – 31 August 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

கால் காசுக்கு ஒரு குதிரை வேண்டும்……

அது கொள்ளும் திங்கக் கூடாது புல்லும் திங்கக் கூடாது

ஆனா காத்ததாகவும் பறக்கணும்…….

எலோருக்கும் பணக்காரனாக வேண்டும், ஆனால் ஒன்றுமே

செய்ய மாட்டேன்…..

சரி, சரி அதற்கும் ஒரு வழி இருக்கத்தான் இருக்கிறது…..

பணம் வேண்டும் , ஆனால் பணம் செலவழிக்க மாட்டேன்

வாங்க PLAN. “A”

நீங்க வைத்துஇருக்கும் சுவாமி ரூமை (room)  சுத்தமாக டெட்டால், சிறிதளவுஉப்பு, பசுஞ் சாணி, ஒரே ஒரு ஸ்பூன் டெட்டால் அல்லது

ஒரே ஒரு ரஸ்பூன் மஞ்சள் தூள் வாளித் தண்ணீரில்

நன்றாக கலந்து கீழே மெழுக வேண்டும் தினசரி……

வீட்டிற்கு விலக்கமான நாட்களில் சுவாமி அறைக்குள்

நீங்கள் செல்லாமல் பையனையோ, பெண்ணையோ

விளக்கேற்ற சொல்லி கொடுக்கவும்

சுமங்கலிகள், காலைக் கடன்களை முடித்துக் கொண்டு நெற்றி வகிட்டில்  , குங்குமம்இட்டுக் கொண்டுதான் அடுப்பு ஏற்ற வேண்டும்

(குளிக்கவில்லை என்றாலும் சரி)

தினசரி வாசல் (பசுஞ்சாணத்துடன் )தெளித்து கோலமிட வேண்டும்

என்ன முனகல் சத்தம் கேட்குது????

பணம் வேண்டுமென்றால்,

இதையெல்லாம் செய்துதான ஆக வேண்டும்.

ஸ்வஸ்திக்கா (Swastika Sticker) ஸ்டிக்கர் இருந்தால் சுவாமி ரூம் வாசல் கதவிலோ

அல்லது வெளி வாயில் கதவு வெளிப்புறமாகவோ ஒட்ட வேண்டும்

குளித்து விட்டு தான் சுவாமி அறைக்குள் செல்ல வேண்டும்

உங்கள் குடும் த்தினர் அல்லாதவர்களை எந்தக் காரணம்

கொண்டும்   சுவாமி அறைக்குள் அனுமதிக்க வேண்டாம்

காலையிலேயும் மாலையிலேயும் (சந்தி காலத்தில்)பூ வைத்து

தீப விளக்கு ஏற்ற வேண்டும்.

தினசரி ஊதுபத்தி அல்லது கம்ப்யூட்டர்

சாம்மிபிராணி பத்தி ஏற்றவும்

வெள்ளியன்று ஐந்து முக விளக்கேற்றி உங்கள்

குல தெய்வத்தை வேண்டி, பின் லட்சுமி ஸ்தோஸ்திரம்

குறைந்த பட்சம் ஐந்து நிமிடமாவது சொல்ல வேண்டும்.

ஏதாவது கல்கண்டு, திராட்சை வைத்து நிவேதனம்

செய்யவும்.

தினசரி 5 நிமிடமாவது காலை அல்லது மாலை வெயில்

வீட்டிற்குள் வருமாறு பார்த்துக் கொள்ளவும். வாயில்

மூலமாகவோ, ஜன்னல் மூலமாவோ……

பாத்ரூம் கதவு எப்பொழுதும் தாழ்ப்பாளிட்டே

இருக்க வேண்டும். உள்ளே சென்றால் வெளியே வந்தால்

காலை அலம்பி விட்டுதான் வர வாண்டும்.

செருப்புகள் எப்பொழுதும் வாயில் படிக்கு வெளியில் தான்

வைக்க வேண்டும் ; வசதி இல்லாதவர்கள் உள்ளேயே

ஒரு மேடை அமைத்து அதன் மேல் வைக்க வேண்டும்்

பூனை, நாய் தூசுகள் எப்போது ம்  மேலே படக்கூடாது.

அப்படியே பட்டாலும் கை, கால் கழவி விட்டே சுவாமி

ரூமிற்குள் வர வேண்டும்

சரி சார்! கிட்டத்தட்ட முக்கால் வாசி நீங்க சொன்ன

மாதிரிதான் எங்க வீட்டில் நடக்குது. ஆனாலும்……

நாங்க கொஞ்சம் செலவானாலும் சரி இன்னும் கூட

கொஞ்சம் பணம் வந்தால் சரி….

xxxx

சரி. வாங்க PLAN “B” க்கு போவோம்

வெள்ளருக்கு வேரில் செய்த விநாயகரை வாங்கி வைத்து

பூஜை செய்யலாம்.

வெள்ளி விநாயகரை வைத்தும் பூஜை செய்யலாம்

வலம்புரி சங்கு பூஜை அறையில வைக்கலாம்

தினசரி தாமரை பூ வைத்து பூஜை செய்யலாம்

சுவாமி பாட்டு ரெகார்ட் செய்து ஸ்லோகங்கள் போடலாம்

வெள்ளி செவ்வாய் அன்று சுண்டல்

போட்டு நிவேதனம் செய்து எல்லோருக்கும் வினியோகிக்கலாம்.

இன்னும் பணம் வருவதற்கு வேறு எதாவது வழியிருந்தால் சொல்லுங்க சாமி!

xxx

சரி வா PLAN “C” க்கு போவோம்

“GARNET” அல்லது “கோமேதகம்” என்னும் கல்லை

வைத்துக். கொண்டால் பணம் வரும்

அல்லது 7 ரதி எடையுள்ள நல்ல வைரம் வாங்கி வைத்ததுக்

கொண்டால் போதும் பணம் நிறைய பணம் வரும்

சாமி இன்னும் நிறைய பணம் வர

Xxxx

280 KILO GOLDEN THROWN IN MYSORE PALACE; IT BELONGS TO PANCHA PANDAVAS.

PLAN. “D” ஏதாவது இருக்கா????

இருக்கடா ….இருக்கு…..துப்பாக்கிய எடுத்திட்டு போயி பேங்கில

காமி! நிறைய பணம் வருண்டா வரும்!!

ரத்தம்கொதிக்க ஜோதிடர் பாடிக் கொண்டே போகிறார்

அஎவுக்கு மேலே பணம் வைத்திருந்தால்

அவனும் திருடனும் ஒன்றாகும்

வரவுக்கு மேலே செலவு செய்தால்

அவனும் குருடனும் ஒன்றாகும்

களவுக்கு போகும் பொருளை எடுத்து

வறுமைக்கு தந்தால் தருமமடா

பூட்டுக்கு மேலே பூட்டை போட்டு

வைத்தால் அது கர்ம மடா

காசே தான் கடவுளடா

அந்த கடவுளுக்கும்அது தெரியுமடா

கைக்கு கை மாறும் பணமே

உன்னை கைப்பற்ற நினைக்கது மனமே!!!

நன்றி வணக்கம்.

Tags –

பணம், சுலப வழிகள் , குறுக்கு வழிகள்

—subham–

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: