அவதூதர் கொண்டிருக்கும் 24 குருக்கள் – 1 (Post No.8629)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8629

Date uploaded in London – – 5 SEPTEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

அவதூதர் கொண்டிருக்கும் 24 குருக்கள் – 1

ச.நாகராஜன்

பாகவதத்தில் பதினொன்றாம் ஸ்கந்தத்தில் கிருஷ்ணருக்கும் உத்தவருக்கும் நடக்கும் சம்வாதம் ஒன்று இருக்கிறது.

அதில் யதுவுக்கும் அவதூதருக்கும் நடந்த ஒரு சம்பாஷணை வருகிறது.

அவதூதர் தான் இருபத்துநான்கு குருக்களைக் கொண்டதாகக் கூறுகிறார்.

அந்த 24 குருமார்கள் யாவர்?

  1. பூமி : எல்லா ஜீவராசிகளும் தங்கள் கர்மத்திற்குத் தக பூமியில் ஜெனிக்கிறார்கள். பூமியை வெட்டி உழுது பயிரிட்டு வளர்க்கின்றனர். அதில் தீயை மூட்டுகின்றனர். ஆனால் பூமியோ தனது பாதையிலிருந்து இம்மியளவும் நகர்வதில்லை. உண்ண உணவும், இருக்க இடமும் அது தருகிறது. ஆகவே பூமியிடமிருந்து ‘ஞானவானான ஒருவன் தன் பொறுமை என்னும் விரதத்தை ஒரு போதும் விடக்கூடாது’ என்பதை கற்றுக் கொண்டேன். மற்றவர்க்கு சேவை செய்வதையே விரதமாகக் கொள்ள வேண்டும் என்பதை பூமி காட்டுகிறது. ஆகவே மலை, நதி அனைத்தும் உள்ள பூமியை என் குருவாகக் கொள்கிறேன்.
  2. காற்று : காற்று சுத்தமானது. நாற்றமில்லாதது. ஆனால் அது இனிமையான மற்றும் நாற்றமான வஸ்துக்களின் மீது பாரபட்சமின்றிப் பாய்ந்து செல்கிறது. அந்தக் கணத்தில் அது அந்த வஸ்துக்களின் மீது பட்டு அவற்றின் பண்பை ஏற்றாலும் கூட சிறிது நேரத்திலேயே தன் இயல்பை மீண்டும் அடைகிறது. இதிலிருந்து நான், ஆன்மீக வழியில் ஈடுபாடைய ஒருவன் இந்த உலகில் வாழும் போது இன்ப துன்பம் தரும் புலன்களுக்குரிய பொருள்களினால் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்பதைக் கற்றுக்  கொண்டேன்.
  3. ஆகாயம் : ஆன்மா ஆகாயம் போல எங்கும் நிறைந்தது. சில சமயம் ஆகாயம் மூடி இருப்பது போலத் தோன்றும். தூசியினாலும் புகையினாலும் நிரம்பி இருப்பது போல இருக்கும். சூர்யோதய காலத்திலும் அஸ்தமன காலத்திலும் வெவ்வேறு வண்ணங்களில் அது விகசிக்கும். ஆனால் உண்மையில் அது எந்த வண்ணமும் இல்லாதது. இதிலிருந்து உண்மையான ஞானி ஒருவன் எப்போதுமே ஆகாயம் மற்றும் வெளி போல எதனாலும் பாதிக்கப்படாமல் தூய்மையானவனாக இருக்க வேண்டும் என்பதைக் கற்றுக் கொண்டேன்.
  4. அக்னி : சில சமயம் கொழுந்து விட்டு அது எரியும். சில சமயம் சாம்பல் பூத்து உள்ளடங்கி இருக்கும். ஆனால் எப்போதும் அது இருக்கும். நல்லவனோ கெட்டவனோ எவன் கொடுத்தாலும் அதை ஏற்றுக் கொண்டு அவனது பாவங்களை அது போக்குகிறது; அதே சமயம் தன் தூய்மையை இழக்காமல் இருக்கிறது. அது போலவே ஞானி ஒருவன் யார் கொடுத்த உணவை ஏற்றாலும் கூட அவனது பாவத்தைப் போக்கி அவனை ஆசிர்வதிக்க வேண்டும். ஆன்மா, வடிவம் இல்லாமல் இருந்த போதும் கூட தேவதைகளாக  மனிதர்களாக மிருகங்களாக தாவரங்களாக வடிவம் எடுக்கிறது. இவை பிறப்பதும் இறப்பதும் பிரபஞ்சத்தில் மர்மமாகவே இருக்கிறது. ஆரம்ப ஆதாரமும் முடிவும் ஆன்மாவே. அக்னியும் இது போன்றதே.
  5. சூரியன் : நாம் பார்க்கும் சூரியன் ஒருவனே. ஆனால் பல்வேறு நீர் நிலைகளில் அது பிரதிபலிக்கும் போது அது பலவாக ஆகிறது. ஒரே ஆன்மாவே இது போல பல்வேறு ஜீவராசிகளில் பிரதிபலிக்கிறது. நாம் பார்க்கும் சூரியன் வெவ்வேறு வடிவம் நம் பார்வைக்குத் தக எடுப்பது போல ஒரு  ஞானியும் தனது பக்தர்களுக்காக அனைத்து வடிவையும் எடுக்கிறான்.
  6. புறா : ஒரு சமயம் இரு புறாக்கள் ஒரு மரத்தில் வசித்து வந்தன. ஒரு நாள் ஒரு வேடன் அவற்றின் குஞ்சை எடுத்து விட்டான். அதைத் தீயில் வாட்டினான். பெண் புறா திரும்பி கூட்டிற்கு வந்து பார்க்கையில் குஞ்சைக் காணோம். குஞ்சு கிடந்த அக்னியில் அதுவும் விழுந்து தன் பிராணனை விட்டது. ஆண்புறா திரும்பி தன் கூட்டிற்கு வந்து நடந்ததைப் பார்த்தது. அதுவும் அதே அக்னியில் விழுந்து தன் உயிரை விட்டது. இதை சற்று எண்ணிப் பார்த்தால் புத்திசாலித்தனம் நிரம்பிய மனிதனனாலும் கூட தனது பற்றினால் அழிவை அடைகிறான். பற்றற்ற ஆன்மா உடல் புலன்களுடன் சேர்ந்தவுடன் முடிவில்லா ஜனன மரண சுழற்சியில் சிக்குகிறது. இதைக் கற்றுக் கொடுத்த புறாவே என் ஆறாவது குரு.
  7. மலைப்பாம்பு : தன் இரைக்காக மலைப்பாம்பு ஒரு போதும் இருந்த இடத்தை விட்டு நகர்வதில்லை. அதன் எதிரில் எந்த ஜீவராசி வருகிறதோ அதை இரையாகப் பிடித்துத் தின்னுகிறது. இதிலிருந்து ஞானத்தைத் தேடும் ஒரு மனிதன் இன்ப சுகத்தை நாடித் தானாகச் செல்லக் கூடாது என்பதை நான் கற்றுக் கொண்டேன். எது அவன் வழியில் தானாக வருகிறதோ அதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதையும் கற்றுக் கொண்டேன். மலைப்பாம்பைப் போல உறக்கத்தையும் விழிப்பையும் நீக்கி விட்டு ஆன்ம தியானம் ஒன்றையே மேற்கொள்ள வேண்டும் என்பதை அறிந்து கொண்டேன்.
  8. கடல் : பிரம்மாண்டமான சமுத்திரத்திலிருந்து நான் கற்றுக் கொண்டது அநேகம். எவ்வளவு நதிகள் அதில் வந்து சேர்ந்தாலும் கூட அது தன் (நீர்)மட்ட அளவை மீறாமல் இருக்கிறது. கோடைகாலத்தில் நதிகள் வறண்ட போதும் அது தன் அளவைக் குறைப்பதில்லை. அதே அளவு தான் இருக்கிறது. அது தன் எல்லையை மீறி எங்கும் புகுவதில்லை. அதே போல ஞானியானவன் தனது உயரிய நிலையிலிருந்து ஒரு போதும் தாழ்வதில்லை. கடல் போல அவன் ஜெயிக்க முடியாமல் இருக்க வேண்டும். ஆழம் காண முடியாத கடல் போல அவனது இயல்பான இயற்கை குணம் யாராலும் சுலபத்தில் உணரமுடியாதபடி இருக்க வேண்டும். கடலே எனது எட்டாவது குரு.
  9. பூச்சி: வெட்டுக்கிளி தீயைப் பார்த்தவுடன் அதில் தாவிக் குதிக்கிறது. அதில் எரிந்து சாம்பலாகி அழிகிறது. அது போலவே ஞானமற்ற மனிதனும் கூட மாயத்தோற்றம் அளிக்கும் புலன் இன்பங்களில் ஈடுபட்டு  முடிவற்ற பிறப்பு- இறப்புச் சுழலில் சிக்குகிறான். இதற்கு மாறாக ஞானியான ஒருவனோ மற்ற அனைத்தையும் விட்டுவிட்டு மாயையையே எரிக்கிறான். வெட்டுக்கிளியே என் ஒன்பதாவது குரு.
  10. யானை : ஆண் யானையைப் பிடிக்க மனிதர்கள் போலியான பொதி வைத்து அடைக்கப்பட்ட பெண் யானை போன்ற ஒன்றைக் காண்பிக்க மோகத்தினால் ஆண் யானை அவர்களிடம் சிக்குகிறது. அதே போல மனிதனும் கூட பெண்களைக் கண்டு மயங்கி மோகத்தினால் தளைப்படுகிறான். முக்தியை விரும்பும் ஒருவன் மோகத்தை விட வேண்டும் என்பதைத் தெரிவிக்கும் யானையே எனது பத்தாவது குரு.
  11. எறும்பு :  எறும்பானது தனக்கு வேண்டிய உணவைச் சேமித்து வைத்துக் கொள்கிறது. அது சேமித்த வைத்த அனைத்தையும் தானும் உண்ணுவதில்லை; தான தர்மமும் செய்வதில்லை. ஆனால் இதர ஜீவராசிகள் அவற்றை எடுத்துக் கொள்கின்றன. அது போலவே செல்வத்தைச் சேர்த்து வைக்கும் ஒருவன் கொள்ளை மற்றும் கொலைக்கு ஆளானவன் ஆகிறான். எறும்பு நமக்கு சில நல்ல விஷயத்தையும் போதிக்கிறது. எப்போது ஓயாத சுறுசுறுப்பைக் கொண்டு அது உழைக்கிறது. எந்தத் தடை வந்தாலும் அதை மீறி அது முன்னேறிக் கொண்டே இருக்கிறது; தனக்கு வேண்டியதைச் சேமித்துக் கொள்கிறது. அது போலவே ஞான மார்க்கத்தில் ஈடுபடும் ஒருவன் தளர்வின்றிச் சுறுசுறுப்புடன் ஆன்மாவை அறிதலில் ஈடுபட வேண்டும். இந்த அரிய உண்மையை விளக்கும் எறும்பே என் பதினொன்றாவது குரு.
  12. மீன் : மீன் பேராசைப் பட்டுத் தூண்டிலில் இருக்கும் இரையை உண்ணுகிறது. தூண்டிலில் அகப்பட்டு உயிரை இழக்கிறது. இதிலிருந்து அதிகச் சுவை தரும் உணவு வகைகளில் ஆசைப்படக் கூடாது என்பதை நான் கற்றுக் கொண்டேன். நாக்கை வெல்லும் ஒருவன் அனைத்தையும் வென்றவனாகிறான். ஒரு நல்ல விஷயத்தையும் மீன் கற்றுத் தருகிறது. அது தனது இருப்பிடத்திலிருந்து அதாவது ஜலத்திலிருந்து ஒரு போதும் வெளியேறுவதில்லை. அதே போலவே மனிதனும் கூட தனது இருப்பிடமான உண்மையான ஆன்மாவை ஒரு போதும் விட்டு அகலக்கூடாது. இதை போதிக்கும் மீனே எனது பன்னிரெண்டாவது குரு.

TO BE CONTINUED

tags —  தத்தாத்ரேயர் , இயற்கை குரு , பாகவதம்

OLD ARTICLES



தத்தாத்ரேயர் | Tamil and Vedas

tamilandvedas.com › tag › தத்த…

  1.  

Translate this page

9 Nov 2013 – இயற்கையில் 13 ‘குரு’க்கள். இந்து சந்யாசிகள் வாழ்நாள் முழுதும் பாடம் கற்கும் மாணவர்கள். அவர்கள் எதிலிருந்தும் பாடம் …



கலீலியோ | Tamil and Vedas

tamilandvedas.com › tag › கலீல…

  1.  

Translate this page

23 May 2019 – தத்தாத்ரேயர் | Tamil and Vedas · https://tamilandvedas.com/tag/தத்தாத்ரேயர்/. 1. … பாகவத புராணத்தில் தத்தாத்ரேயர் என்பவர் இயற்கையிடம் தாம் …



தவளை | Tamil and Vedas

tamilandvedas.com › tag › தவளை

  1.  

Translate this page

25 Nov 2018 – தத்தாத்ரேயர் | Tamil and Vedas · https://tamilandvedas.com/tag/தத்தாத்ரேயர்/. 1. … பாகவத புராணத்தில் தத்தாத்ரேயர் என்பவர் இயற்கையிடம் தாம் …

The Connection between William Wordsworth and Dattatreya …

tamilandvedas.com › 2011/11/10 › the-connection-bet…

  1.  
  2.  

10 Nov 2011 – Let Nature be Your Teacher ”–William Wordsworth and Dattatreya William Wordsworth was an English poet who lived from 1770 to 1850 in …



Nature is our Teacher | Tamil and Vedas

tamilandvedas.com › tag › nature-is-…

  1.  

Translate this page

7 Nov 2013 – The motto is LET NATURE BE YOUR TEACHER. Now I give below an interesting poem by an anonymous author. Sri Adi Shankara is the …

அடுத்த கட்டுரையுடன் நிறைவுறும்.

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: