

Post No. 8631
Date uploaded in London – –5 SEPTEMBER 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
குழந்தை பாக்கியம் இல்லையா? இதோ பரிகாரங்கள் பல..! -1
Kattukutty
நான் பெற்ற செல்வம் நலமான செல்வம்
தேன் மொழி பேசும் சிங்கார செல்வம்
தொட்டால் மணக்கும் ஜவ்வாது
சுவைத்தால் இனிக்கும் தேன்பாகு.
என் முன் அமைதியாய் உட்கார்ந்திருந்தனர் தம்பதியினர்.
ஆணுக்கு சுமார் 40. வயதிருக்கும், அந்தபெண்ணிற்கு
சுமார் 35 வயதிருக்கும்.
என்ன விஷயமாய் வந்தீர்களோ??? ஜாதகம் இருக்கிறதா????
ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
ஆண் மகன் பேசலானார் : “சார் எங்களுக்கு கல்யாணம் ஆகி
12 வருடம் ஆகிறது…. ஆனால்…….”
அந்தப். பெண்ணின் கண்களிலிருந்து கண்ணீர் பெருகியது.
முதல் ஐந்து வருடங்கள் ஜாலியாக இருந்து விட்டோம்
பிறகு அப்பா அம்மா இருவரும் தொந்திரவு செய்ய செய்ய
போகாத கோவில் இல்லை, குளிக்காத கடல் இல்லை….
இருக்காத விரதம் இல்லை………இப்போதுஎங்கள்
பொழுது போக்கு என்ன தெரியுமா??? கோவில் இல்லை
குளம் இல்லை ஸ்தோஸ்திரம் இல்லை…..
பின்ன என்ன என்று கேட்கிறீர்களா???? உங்களை மாதிரி
ஜோஸ்யர்களை பார்ப்பதுதான்’ என விரக்தியாக சிரித்தார்.
“எங்களை யார் பார்த்தாலும் எதாவது விசேஷம் உண்டா
என்று கேட்பது போலவே தோன்றுகிறது. இதனால் எந்த
கல்யாணம் காது குத்து சீமந்தம் வளைகாப்பு எதறகுமே
அவள் போவதில்லை, அதனால் நானும் போவதில்லை……”.
ஒரு புதுக்கவிதை
“நான் இறந்தால் என்னை எரிக்காதீர்கள்
புதைத்து விடுங்கள்
அப்பொழுதாவது என் வயிற்றில் புழு நெளியட்டும்”
என்னன்ன பாதிப்பு
1)குழந்தை பேறு இல்லை என்றால் ஆண்களை விட பெண்களே
அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.
2)எதிர் வீடு பக்கத்து வீடு குழந்தைகளைப் பார்க்கும் போதெல்லாம
துக்கம்
3)எல்லோரும் என் குழந்தை இப்படி படிக்கிறான்
அப்படி விளையாடுகிறான் என்னும்போது ஏக்கம்…..
4)சொந்தக்கார ர் முன் நடமாட முடிவது இல்லை.
5)எக்கச்சக்கமான சொத்து ….. வாரிசு இல்லை
சம்பாதித்து என்ன பயன்???
6)வேண்டாத சொந்தக்காரர்களினால் நமது சொத்துக்காக
சூழப்படும் நிலை.
7)மறைமுகமாக மலடி, ஆண்மையற்றவன் எனக்கேட்டு
வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் மன நிலை, மனோவியாதி
அதைத்தொடர்ந்த மற்ற வியாதிகள்
இது எதனால்.??.
குல தெய்வ சாபம்- நமது குடும்பத்தில் உள்ள அனைவரும்
சாமி கும்பிடுவது என ஒரு பழக்கம் உண்டு். அது ஒரு முக்கிய
நாளாக இருக்கும் .தை வெள்ளி, தை பொங்கல் ஆடி வெள்ளி.
சொந்தக்காரர்கள் எந்த ஊரிலிருந்தாலும் வந்து விடுவார்கள்.
இதைச் செய்யத் தவறினால் பரம்பரையே முடிந்துவிடும்.
பித்ரு சாபம்- முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய திதி,
தர்ம காரியங்களைச் செய்யாமலிருத்தல்.
முக்கியமாக வீட்டிலுள்ள மிக வயதானவர்களை உதாசீனப்
படுத்துதல், அவமானப்படுத்துதல், வீட்டை விட்டு ஒதுக்கி வைத்தல் –
இதனாலும் குழந்தை பிறந்து இறத்தல்
கோசாபம்- அந்தக் காலத்தில் ஒவ்வொருவர் வீட்டிலும் பசு மாடு
இருந்தது. மரத்து போன பசுவை வெட்டக் கொடுப்பது,பசுவிற்கு தண்ணீர்
காட்டாமல் இருப்பது, கன்றுக்கு பாலில்லாமல் செய்வது –
இதைச் செயவதினால் பரம்பரையே அற்று போகும்
ரிஷிசாபம்- ஆச்சார்ய புருஷர்களையும், உண்மையான சாதுக்களையும்,

பக்தர்களை கேலி செய்வது, அவமதிப்பது –
கரு உண்டாகி உண்டாகி அழிவதற்கு இதுதான் காரணம்.
சர்ப்ப சாபம்-சர்பங்களை கொல்லுதல்,புற்றுக்களை இடித்து வீடு கட்டுதல் –
கருவே உண்டாகமலிருக்க இதுவே காரணம்
பெண்சாபம்-பெண்களை பொய்சொல்லி ஏமாற்றுவது, கைவிடப்பட்ட
பெணகளைச் சீரழிப்பது, சொந்த மனைவியை கைவிடுவது,
துன்புறுத்துவது
இயற்கை சாபம்- நிழல் தரும் மரங்கள், பால் தரும் மரங்களை
வெட்டுவது, கன்று ஈனாத வாழையை வெட்டுவது
மருத்துவ காரணங்கள்-
குழந்தைகள் பிறக்காமல் இருக்க ஆண்கள் 45 % காரணம்
பெண்கள். 55% காரணம்
இருவரும் சரியாக இருந்தும் குழந்தைகள் பிறக்காமலிருக்க
சுற்றுப்புற சூழல். மற்றும் சில மன, உடல் ரீதியான
காரணங்கள் -15%.
ஆண்சார்ந்த கோளாறுகள்
ஆணுக்கு தரமான உயிரணுக்கள் உற்பத்தியாவதில் பிரச்சினை
உடலுறவில் ஏற்படும் பிரச்சினைகள்
உடலுறவு கொள்ளும் கால அவகாசத்தில் உள்ள பிரச்சினைகள்
தவறன முறை, தவறான நேரம்
ஜனன உறுப்பில் கோளாறு
பெண் சார்ந்த கோளாறுகள்
பெண் கரு முட்டை வெளியாகாமை
கரு உண்டானாலும் கரு பெலோப்பியன் டயூப்பிலிருந்து
கருப்பைக்கு வராமை

வந்தாலும் கரு. வளர முடியாத சூழ்நிலை
பெண்ணின் கரு விலக்கான 14 வது நாள் கரு உயிரணு
வீர்யமாக இருக்கும்24 மணி மட்டுமே. அதற்குள் உடலுறவு
கொண்டால் கரு உண்டாகும்.
கரு வராமலிருக்க உடலில் உற்பத்தியாகும் ஹாரமோன்களும் காரணம்
மன அழுத்தமும் ஒரு காரணமாகலாம்.
கரப்ப பை பலஹீனத்தினால ஹார்மோன்கள் உண்டாகாது,கருவும்
உண்டாகாது/கர்ப்பப் பை வாயே சில பேர்களுக்கு திறந்திருக்காது.
கர்ப்ப பையில்உண்டகும் அமிலத்தினால் கரு உண்டாகாது
மற்றும் பல காரணங்களும் உண்டு.மருத்துவரிடம் கேட்டுத்
தெரிந்து கொள்ளலாம்
சரி ஜோதிட ரீதியாக குழந்தை பிறக்காமலிருக்க என்னன்ன
காரணங்கள் என ஆய்வோம்
*** (அடுத்த கட்டுரையுடன் முடியும்)
tags- பரிகாரங்கள், குழந்தை பாக்கியம் , இல்லை
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx