

Post No. 8642
Date uploaded in London – –7 SEPTEMBER 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
கிரகணங்களும் ராசிகளும்!
BY Kattukutty
“ சூரிய அல்லது சந்திர கிரகணம்
தேதி, பிறகு கிரகணம் ஆரம்பிக்கும். மணி,
நடு நேரம், கிரகணம் விடும் நேரம்
என்னன்ன நடசத்திரங்களுக்கு பிடிக்கிறது???
தர்பபணம் / பரிகாரம் செய்ய வேண்டிய நேரம்
எந்தந்த நாடுகளுக்கு தெரியும்…….
பிறகு நிறைய குறிப்புகள்……..
8 மணி நேரத்திற்கு முன்பே சாப்பிட லேண்டுமாம்
கண்டிப்பாக கர்ப்பிணி ஸ்திரிகள் , குழந்தைகள்
வெளியே வரக்கூடாது…………..இதையெல்லாம் மீறி
ரோடில் சிறுவர்கள் மையடிக்கப் பட்ட கண்ணாடிகள்
X -ray ஷீட்டுகளுடன் நிற்பார்பர்கள்.
வியாதியஸ்தர்கள்…….வெளியே வரக்கூடாது………”
இன்னும் …………பேப்பரில் நிறைய …..கிரகணம் முடியும் வரை
நியூஸ் போட்டுக்கொண்டே இருப்பார்கள்.
சூரியகிரகணம்/சந்திர கிரகணம் எப்படி உண் டாகிறது???
காண்க……விளக்கமே தேவையில்லை……
இந்த கிரகணங்களினால் நமக்கு என்ன உண்டாகிறது என்று
கவலைப் படுவோமே தவிர நாட்டிற்கு என்ன ஆகும் என்று
கவலைப்பட்டு எச்சரித்திருக்கிறர்கள் நமது முன்னோர்கள்.
மேஷ ராசியில் கிரகணம் ஏற்பட்டால்
கலிங்கம்,பஞ்சாப், ஒரிசா மாகாணத்தில் உள்ளவர்கள்
மழை வெள்ளம் பூகம்பம் , போலீஸ், ராணுவம் முதலியோர்
தொல்லைக்கு ஆளாவார்கள்
ரிஷப ராசியில் கிரகணம் உண்டானால்
சினிமா, நாட்டியம், நாடகம், தியேட்டர் போன்ற பொழுது
போக்கு அம்சங்களுக்கு விபத்து , ஆபத்து?…..
மிதுன ராசியில் கிரகணம் ஏற்பட்டால்
ரயில், பஸ் முதலியவற்றில் விபத்துக்களும்,
சேதங்களும் உண்டாகும்.
கடக ராசியில் கிரகணம் உண்டானால்
விவசாயம், தானிய வகைகள், பெண சம்பந்தப்பட்ட
நோய்கள், ஜன நாயகத்தில் மாறுதல்கள் உண்டாகும்.
சிம்ம ராசியில. கிரகணம் ஏற்பட்டால்,
பிரதம மந்திரி,குடியரசு தலைவர்களுக்கும், அரசியல் தலைவர்களுக்கும்
கம்பெனி C E O, களுக்கும் M D க்களுக்கும்
ஆபத்து
கன்னி ராசியில் கிரகணம் உண்டானால்
பிரசுரகர்த்தர்கள, புத்தக வியாபாரிகள், ஆசிரியர்கள்
பத்திரிக்கையாளர்கள், வெளியீட்டாளர்கள் முதலியோர்
கடுமையாக பாதிக்கப்படுவார்கள்
துலாம் ராசியில் கிரகணம் உண்டானால்,
கலைகள், விழாக்கள், நடிகர்கள், நடிகைகள் பாதிக்கப்படுவார்கள்
விருச்சிக ராசியில் கிரகணம் ஏற்பட்டால்
எஞ்சினியர்கள், சேனைத் தலைவர்கள், அறுவை சிகிச்சை
நிபுணர்கள் பாதிக்கப்படுவார்கள்.
அரசியலில் கொலை, பலத்காரங்கள் ஏற்படும்.
தனசு ராசியில் கிரகணம் ஏற்பட்டால்
மத தலைவர்கள் ஆன்மீக வாதிகள், எல்லா மத ஆலயங்கள்
கஜானா…. ஆபத்து
மகர ராசியில் கிரகணம் ஏற்பட்டால்
விவசாயம், நிலம், பூமி, இரும்பு , நிலக்கரி , மற்றும் எல்லா
சுரங்கங்களுக்கும் ஆபத்து.
கும்ப ராசியில் கிரகணம் உண்டானால்
ஆயுள் இன்ஷ்யூரன்ஸ்,கல்லறை , புதைக்கும், மற்றும் மரணம்
சம்பந்தப பட்ட அனைத்து தொழிலாளர்களும் கஷ்டப்படுவார்கள்
மீன ராசியில் கிரகணம் ஏற்பட்டால்
இடி, மின்னல், வெள்ளம் , மின்சார தடங்கல்கள், சங்கடங்கள்
மக்கள் வெகுவாக கஷ்டப் படுவார்கள்.
tags— கிரகணம், ராசி


–subham–