
Post No. 8652
Date uploaded in London – –9 SEPTEMBER 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஶ்ரீ ராமர் காட்டிற்கு கிளம்பிய நேரம் சீதை நானும் உங்களுடன்
காட்டிற்கு வருவேன், “நீங்கள் இருக்கும் இடம்தான் எனக்கு
அயோத்தி என்று அந்த உத்தம பத்தினி சொன்னாள்.செய்தாள்.
அதன்படி அனுபவித்தாள். சகோதரன் லடசுமணன் அண்ணாவுடன்
எப்போதும் பாதுகாப்பாக இருப்பேன், என்ற அவனம்காட்டிற்கு
கிளம்பினான். தம்பியுடையான் படைக்கு அஞ்சான் என்பதற்கேற்ப
ராமனின் வெற்றிக்குஅவனும் காரணமானான்?
கடைசியில் முடிவுக்கு வருவோம்
இதற்கெல்லாம் மேலாக இவரது ஜாதகத்தை பூஜையில் வைத்து
வணங்க முக்கிய காரணம் என்ன ???? முதலாவதாக
பெருங்கடவுளர்களகிய நாரயணன், மற்றும் பரம சிவன்.
நாராயணன் என்னும் நாமத்தின் முக்கய எழுத்து “ர”.
பரம சிவன் நாம ம் நமச்சிவாய என்னும் நாமத்தின் முக்கிய
எழுத்து “ம”.
இந்த இரண்டு எழுத்துக்கள் சேர்ந்து எழுப்பிய ஒலியே “ராம”.
அந்த தெய்வீக ஒலியை நாம மாக கொண்டதினால், அவரே
தெய்வம் என உலகுக்கு உணர்த்தியது அந்த நாம ம்.
இரண்டாவதாக ஶ்ரீ மகாவிஷ்ணுவே திரோதயுகத்தில்
ஶ்ரீ ராமனாக அவதரித்து பின் வரும் கலியுகத்தில் தர்ம ம் சிதைந்து
போகும். மக்கள் பாதை தவறி செல்வார்கள் .அந்த கலியுக மக்கள்
எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று முன் உதாரணமாக தானே
மனிதப்பிறவி எடுத்து நடந்து காண்பித்த அவதாரமே ஶ்ரீ ராமாவதாரம்
கலியுகத்தில் பிறந்த அனைவரும்
தாய் தந்தை சொல்படி கேட்க வேண்டும்
சகோதர ரக்கள் ஒற்றுமையாகவும் பாசத்துடனும் இருக்க
வேண்டும்
எல்லோரிடம் வித்யாசம் பாராமல் நடந்து கொள்ள வேண்டும்.
உதாரணமாக வயதான காட்டு வாசி சபரி, ஓடம் ஓட்டிய குகன்,
குரங்கினமான அனுமன் , சுக்ரீவன், கரடி இனமான ஜாம்பவான்,
படசி ராஜாவான ஜடாயு, ஏன் அணிலிடம் கூட அன்பு காட்டினார்
ஶ்ரீ ராமர்.
ஒரு சொல், ஒரு இல் , ஒரு வில் என வாழ்ந்து காட்டினார்.

பார்வதி கேட்டாளாம் பரம சிவனிடத்தில், இந்த ஶ்ரீ விஷ்ணு
சகஸ்ர நாமத்தை சொல்ல முடியாதவர்கள் என்ன சொன்னால்
ஶ்ரீ விஷ்ணு சகஸ்ர நாம ம் சொன்ன பலன் உண்டாகும்???
அதற்கு பரம சிவன் கூறிதாவது
“ ஶ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே
ஸகஸ்ர நாம தத்துல்யம் ஶ்ரீ ராம நாம வரான னே”
ராம நாமத்திற்கு அவ்வளவு பெருமை என பரம சிவனும் பார்வதியும்
சேர்ந்து உணர்த்தினார் உலகிற்கு.
கவிச் சக்ரவர்த்தி கம்பர் கூறியதாவது
“நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தேயுமே
இம்மையே ராம என்ற இரண்டெழுத்தினால்”
மேலும்
குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர் ஒன்று கூடுவார்கள்
முக்கியமாக கணவனும் மனைவியும்
பகைவர்கள் இருக்க மாட்டார்கள்.பகைவர்களாக இருந்தவர்கள்
மனம் மாறி நண்பர்களாவர்கள்
குழந்தைப் பேறு இல்லாதவர்களுக்கு புத்திர பாக்யம் கிட்டும்
தொலைந்து போன பொருள்கள் கிடைக்கும்
குடும்ப நலம் பெருகி பணியும் வறுமையும் விரைந்தோடும்
நவகிரக தோஷங்களும், அறியாமல் செய்த பாவங்களும் விலகும்
இந்த ராம நாமத்தை இடைவிடாது ஜெபித்து ஶ்ரீ ராமருடைய
அருளுக்கு பாத்திரமாகி எல்லாப்பேறுகளும் பெறுமாறு அந்த
ஶ்ரீ ராமச்சந்திர மூர்த்தியை வேண்டிக் கொண்டு விடை
பெறுகிறேன் ஶ்ரீனிவாசன்……நன்றி வணக்கம்.

tags – 5 கிரகம் உச்சம் – 2, – ராமன்,