தமிழ் மொழியின் அண்ணன் கிரேக்க மொழி-3 (Post No.8693)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8693

Date uploaded in London – –16 SEPTEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

கடந்த சில நாட்களில் வெளியான பகுதி-1, பகுதி-2 ஆகியவற்றைப் படித்துவிட்டு இதைப்படிப்பது நலம் பயக்கும்

அலெக்ஸாண்டர் படையெடுப்புக்குப் பின்னர் கிரேக்க மொழி மிகவும் மாறியது

உச்ச ஸ்தாயி (High pitch, low pitch) , நீச ஸ்தாயி பிரயோகம் மறைந்தது. அசை(Syllables are stressed)  மீது அழுத்தம் கொடுக்கப்பட்டது. உயிர் எழுத்துக்களின் உச்சரிப்பும் மாறியது. இப்போதைய கணக்குப்படி 5 உயிர் எழுத்துக்களும் 22 மெய்யெழுத்துக்களும் உள்ளன. பல சொற்களை அயல் நாடுகளிடமிருந்து கடனாகப் பெற்றது..

19ம் நூற்றாண்டில் மொழித் தூய்மையாளர்கள் மொழியைப் புதுக்கி பள்ளி கல்லூரிகளில் பயிற்றுவித்து அரசுப்பணிகளிலும் பயன்படுத்தினர். ஆனால் இலக்கிய படைப்புகள் வெகுஜன மொழியில் எழுதப்பட்டன.

ரோமானிய சாம்ராஜ்யத்தில் லத்தின் மொழியும் கிரேக்கமும் பயன்படுத்தப்பட்டன. கல்வி கற்றவர்கள் என்று சொன்னால் அவர்களுக்கு கிரேக்கமும் லத்தினும் தெரியும் என்று பொருள். அடிமைகளும்கூட இரண்டாவது மொழியாக கிரேக்க மொழியைப் பயன்படுத்தினர்.

அராபிய , லத்தின் மொழிகள் மீது இது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. மருத்துவத் துறை, இரசாயனப் பொருட்களின் பெயர்களில் இதைக் காணலாம்.

கிரேக்க ,மொழிப் பெரும்பான்மை உள்ள இடங்கள் – கிரீஸ் , சைப்ரஸ் .

கிரேக்க ,மொழிச் சிறு பான்மை உள்ள இடங்கள் – ஜார்ஜியா, எகிப்து, அல்பேனியா, தெற்கு இத்தாலி, இன்னும் சில பகுதிகள் .

எகிப்தில் கெய்ரோ, அலெக்ஸ்சாண்டிரியா , உக்ரைனில் ஒடிஸா , அமெரிக்காவில்  சிகாகோ, பிரிட்டனில் லண்டன் ஆகிய நகரங்களில் கிரேக்கர்கள் பெருந்தொகையில் வசிக்கின்றனர். சைப்ரஸ் தீவு கிரேக்க சைப்ரஸ்- துருக்கி சைப்ரஸ் என்று இரண்டு துண்டாகப் பிரிந்தவுடன் வெளியேறியவர்கள் இவர்களில் பெரும்பாலோர் ஆவர் ; லண்டனில் மட்டும் சைப்ரஸ் தீவு கிரேக்கர்கள் ஒரு லட்சத்துக்கும் மேல் உள்ளனர்.

கிரேக்கர்களின் வட்டார (local dialects)  வழக்கு மிகப்பல.

ஏதென்ஸ் (Attic) நகர வழக்கு மொழியில், சாக்ரடிஸ், பிளாட்டோ, அரிஸ்டாட்டில் முதலிய தத்துவ அறிஞர்களின் படைப்புகள் இருக்கும்.

ஒவ்வொரு நகரமும்  செய்திகள், சட்டங்களை அந்தந்த வட்டார மொழியில் கல்வெட்டுகளில் பொறித்தன.

சாப்போ (Sappho) என்னும் பெண் கவிஞர் தனது தீவு மொழியில் காதல் கவிதைகள் இயற்றினார்.

நாடகங்கள் ஏதென்ஸ் (Attic) வட்டார மொழியில் எழுதப்பட்டன.

கி.மு.500 வாக்கில் ஹிப்போக்ரட்டிஸ் (Hippocrates)  காஸ் (Cos) நகரில் போதித்தார். ஆகவே மருத்துவ நூல்கள் காஸ் நகர அயோனியன்/ யவன (Ionian) மொழியில் இருக்கும்.

கிரேக்க மொழியின் முதல் படைப்புகளான இலியட், ஆடிஸி /ஒடிஸி இதிஹாசங்கள் அயோனியன்- அயோலிக்  (Ionian- Aeolic) கலப்பு மொழியில் இருக்கும்.சைப்ரஸ் தீவில் வேறு வழக்கு புழங்குகிறது.

சுருங்கச் சொன்னால் பேட்டைக்குப் பேட்டை ஒரு (Dialect) கிளை மொழி.

கொய்னே (Koine)  என்னும் புது பேச்சு வழக்கு வந்தவுடன் வட்டார வழக்குகள் மறைந்து வருகின்றன.

இதைத் தமிழ் மொழி கன்னடம், தெலுங்கு, மலையாளம், துளு என்று பிரிந்ததற்கும், சம்ஸ்கிருதம் இந்தி மராட்டி, குஜராத்தி முதலிய மொழிகளாககப் பிரிந்ததற்கும் ஒப்பிடலாம். கிரிஸில் பெலப்பனிஸ் மலையில் யாருக்கும் தெரியாத சாக்கோணியன் (Tsakonian)  என்ற ஒரு கிளை மொழி. பேசப்படுகிறது.

நாம் சிந்து- சரஸ்வதி தீர எழுத்துக்கள் பற்றி 60 விதமாக உளறுவதுபோல லீனியர் – பி எழுத்துக்கள் பற்றியும் 12 ஆண்டுகளுக்கு வெளிநாட்டுக்கு கோமாளிகள் வாய்க்கு வந்தபடியெல்லாம் உளறினர்.18 வயதான போது (Michel Ventris) மைக்கேல் வென்ட்ரிஸ் என்னும் பிரிட்டிஷ்காரர்  லீனியர் -பி எழுத்தைப் படித்து உலகப் புகழ் பெற்றார்.

கிரேக்கர்கள் செய்த தமிழ்க்கொலை !

மற்ற நாட்டு மொழிகளில் உள்ள பெயர்களை அயல்நாட்டுக்காரர்கள் மனம்போன போக்கில்  உச்சரித்தனர்

இதோ தமிழ்ப் பெயர்களையும்  சம்ஸ்கிருதப் பெயர்களையும் கிரேக்கர் உச்சரித்த விதம்:–

அரிசி – ஒரைசா

கருவ – கர்ப்பியோன் (Cinnamon)

இஞ்சிவேர் – ஜிக்கிபேரோஸ்

பிப்பாலி – பெர்பெரி (Long Pepper)

சிந்து – இந்து (Indus)

தொண்டி – தொண்டிஸ்

முசிறி – முசிறிஸ்

பாருகச்ச – ப்ரோச் Broach – பரேகைச்ச

பலேசி மௌண்டு – பர சமுத்திர – ஸ்ரீலங்கா

பாண்டிய – பாண்டேயா

புருஷோத்தமன் –  போரஸ்

எல்லாப் பெயர்களிலும் ஒரு’ ஸ்’ சேர்த்துக்கொள்வர்

சந்திரகோட்டஸ் – சந்திரகுப்த

பசோதியோ – வாசுதேவ

தெமெட்ரிஸ் – தேவ மித்ர

இது ஒரு நீண்ட பட்டியல் . பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரி எழுதிய வெளிநாட்டுப் பயணிகளின் பயணக் குறிப்புகளைப்  படித்தால் எப்படியெல்லாம் இந்தியப் பெயர்கள் திரிக்கப்பட்டன என்பதை அறியலாம் .

Xxxxx

கிரேக்க மொழியில் எண்கள்

Ena -1

Dhio-2

Thria-3

Tessera-4

Pende-5

Exe-6

Efta-7

Ohto-8

Enya-9

Dheka -10

Dialects in Greece

Aeolic of Lesbos

Doric of  Sparta

Attic of Athens

Ionic of Cos

Ionic -Aeolic dialect in Iliad and Odyssey

–subham—

 தமிழ் மொழி, அண்ணன் கிரேக்க மொழி-3

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: