பாரதியார் ஜாதகம் – ஒரு அலசல் ! (Post No.8691)

WRITTEN BY KATTUKKUTY

Post No. 8691

Date uploaded in London – –16 SEPTEMBER 2020    

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பாரதியார் ஜாதகம் – ஒரு அலசல் !

கத்துக்குட்டி

லண்டன் மாநகரத்திலிருந்து வாரம்தோறும் திங்கட்கிழமைகளில் லண்டன் நேரம் பிற்பகல் 2 மணிக்கும், இந்திய நேரம் மலை 6-30 மணிக்கும் பேஸ்புக், ஜூம் மூலமாக ஞானமயம் நிகழ்ச்சி ஒலிபரப்பாகிறது அதை  நேரடியாக கேட்க முடியாதோர் எந்த நாளும்  எந்நேரமும்  facebook.com / gnanamayam அரங்கத்தில் கேட்கலாம்.

14-9-2020 ஒளிபரப்பில் பாரதியார் ஜாதகம் – பற்றிஒரு நேயர் கேள்விக்கு கத்துக்குட்டி சீனிவாசன் சென்னையிலிருந்து பதில் தந்தார். இதோ பதிலை எழுத்து வடிவில் படியுங்கள்

அன்பர்கள் அனைவருக்கும் அன்பான மாலை வணக்கம்.

என் முன் இருக்கும் கேள்வி

பாரதியார் கவிதை மழை பொழிய ஜாதகத்தில்

உதவிய அம்சம் எது ???

சாகும் வரை வறுமையும், இறந்த பின் உலகப் புகழும் கிடைத்தது

எப்படி ???

இதோ பதில் :-

மானுடம் பாட வந்த மகா கவி, புது நெறி காட்டிய புலவன்,

எண்ணத்தாலும் எழுத்தாலும் இந்திய விடுதலைக்கு வளம்

சேர்த்த மா மனிதன் பாரதி……

இவர் கவிதை வளத்தை கேட்க வேண்டும் என்றால் திரு நாக

ராஜனிடம்தான் கேட்க வேண்டும். கடந்த இரண்டு வாரங்களாக

மாரி பெய்தாற் போல் வாரி வழங்கி விட்டார் அவர் !!!!

மஹாகவி பாரதியாரின் கவிதைகளையும் கவிதை நயங்களையும் பற்றி அதிகமாகப் பேசப் போவதில்லை.

அவருடைய ஜாதகம் கடக லக்ன ஜாதகம். மூல நட்சத்திரம் தனுர்

ராசி. ஜாதகம் பற்றி தெரியாதவர்களுக்குக் கூட தெரியும் – ஆண்மூலம்

அரசாளும்!!!

எந்த ஓருஜாதகத்தை எடுத்துக் கோண்டாலும் லக்னம், லகனாதிபதி முக்கியம்.

பண வரவிற்கு……2- ம் பாவம்

தொழிலுக்கு……..10- பாவம்

முதலில் லக்னத்தை எடுத்துக் கொள்வோம். லக்னாதிபதி

6- ல் மறைவு.விரோதிகளினால் தொந்திரவு….போலீஸ்

  • விரட்ட …..அவர் பாண்டிச்சேரிக்கு ஓட ஒரே கண்ணாமூச்சி

ஆட்டம் தான்…..

இளம் வயதிலேயே இவரிடம் வாக்கு வன்மை துள்ளி

விளையாடியது.அதற்கு காரணம் சூரியன் சுக்கிரன் புதன்

அனைவரும் செவ்வாய் வீட்டில், செவ்வாயுடன்!!!!

உதாரணமாக எட்டயபுர சமஸ்தானத்தில் காந்திமதி நாதன் என்ற

புலவர் இவரை அவமானப் படுத்தும் நோக்கத்தில், ஈற்றடி

கொடுத்து அனைவர் முன்னிலையிலும் பாடச்சொன்னார்

என்ன ஈற்றடி தெரியுமா???

“பாரதி சின்னப் பயல்……. பாரதி விட்டாரா லேசில்?

“ஆண்டில் இளையவன் என்ற‌ந்தோ அகந்தையினால்  

ஈண்டிங்கு இகழ்ந்தென்னை ஏளனம்செய் ‍- மாண்பற்ற‌ காரிருள்போல் உள்ளத்தான் காந்திமதி நாதனைப்  

பாரதி (பார்+அதி) சின்னப் பயல்”

 என்று முடிக்க அனைவரும்

கைதட்டி ஆரவாரம் செய்தனர். எட்டயபுர சமஸ்தானம் வழங்கிய

பட்டமே “பாரதி.

அடுத்ததாக இவரது வறுமைக்குக் காரணம் இவரது பாக்யாதிபதி

12-ம் இடமான விரையஸ்தானஸ்த்தில் அதாவது செலவின

ஸ்தானத்தில் அமர்ந்ததுதான்….

பாரதி வீடு…மனைவி செல்லம்மாள் அரிசியில்,கல் நெல்

பொறுக்கிக் கொண்டிருக்கிறாள்.

முற்றத்தில் குருவிகள் கீச் கீச் என சப்தம்……செல்லம்மாளிடமிருந்து அரிசியை

வாங்கி இறைத்தார் முற்றம் முழுவதும்……

மேலுலகிலிருந்து பார்த்தாள் லட்சுமி தேவி…. இவரிடம் எவ்வளவு கோடுத்தாலும் பணால்தான்….

உடனே போன் phone  அடித்தாள் அக்கா ஜேஷ்ட்டா தேவிக்கு

இங்கே ஓரு அருமையான செலவாளி கிடைத்திருக்கிறார்

உன் பையன் வசிக்க அருமையான இடம்!!!

அந்த அக்கா மூதேவியும் அவன் பையனை அனுப்பினாள்.

அவன் பெயர் “தரித்திரம்

வாழ்நாள் முழுவதும் தனக்கென சேர்த்து வைத்துக் கொள்ளாத

தகமையாளனாக வாழ்ந்தார் அவர். தரித்திரம் ஆட்டிப் படைத்தது அவரை!

அவர் கடவுளிடம் கேட்கும் போது கூட காணி நிலம் வேண்டும்

ஒரு சின்ன வெள்ளை மாளிகை 10/12 தென்னை மரங்கள்

ஒரு பத்தினிப் பெண், குயிலோசை, கடைசியில் தேவை

உன் காவல்!!!! அவ்வளவு தான்….

ஸ்விஸ் பேங்க் அக்கவுண்ட்டில் பணமோ 4 டாஸ் மாக் கடையோ

கேட்கவில்லை.

அடுத்ததாக அவர் பெயர் கீர்த்தி வானளாவ பரவக் காரணம் அவர்

ஜாதகத்தில் குருவும் சந்திரனும் பார்த்து கஜ கேசரி யோகத்தை

உண்டு பண்ணியதால் தான்!!!!

வாக்கு வன்மைக்கு இரண்டாம் பாவாதிபதி சூரியனுடன் சுக்கிரன்,

புதன், சேர்ந்து அவருக்கு கவிதை என்ற கற்பனைக் குதிரையை

சவாரி செய்யக் கொடுத்தது. செவ்வாயும் சேர்ந்து கம்பீரத்தைக்

கொடுத்தது.

மேலும் இந்த 4 கிரகங்களும் சேர்ந்து மனம் என்னும் 5 ம் பாவத்தில்

இருந்தது. அதாவது “உள்ளம்.அவர் பாடிய பாட்டிலிருந்தே

அதைக்காணலாம். உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின் வாக்கினிலே ஒளி உண்டாகும்

வெள்ளத்தின் பெருக்கைப் போலே கலைப் பெருக்கும்

கவிப் பெருக்கும் மேவுமாயின்

பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடெரெல்லாம் விழி பெற்றுப் பதவி

கொள்வார்

மேலும் 4 கிரக கூட்டு வரும் பொருள் உரைத்தலையும் கொடுத்தது.

Fore telling the Future or intuition.

உதாரணமாக

எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு…

நாம் எல்லோரும் சமம் என்பதே உறுதியாச்சு

சங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே

இதைத் தரணிக்கெல்லாம் எடுத்து ஓதுவோமே

ஆடுவோமே பள்ளு பாடுவோமே

ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று……..

மனோ தைரியம்!

நாளை யமன் வரும்போது என்ன செய்யப் போகிறாய் – இப்போதே

ராமா கிருஷ்ணா என்று சொல்லிப் பழகு என்றார்கள் முனிவர்கள்.

இப்படி ‘அதி பீஷண கடு பாஷண யம கிங்கர படலியை’

காலா உனைச் சிறு புல்லென மதிக்கிறேன் என்

காலருகே வாடா உனை சற்றே நான் மிதிக்கிறேன்

அதாவது ஓங்கி மிதித்தால் நீ செத்து விடுவாய் என்றார்!

இது மாதிரி யாருமே பாடவில்லை திருநாவுக்கரசரைத் தவிர

நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம் என்றார் நாவுக்கரசர்!

இப்படி வாக்கினில் உறுதி, மனதினில் உண்மை ஒளி, வரும்

பொருளுரைத்தல், அதீத மனோதைரியம் இவைகளே

அவரை இன்றும், என்றும் மகா கவி என உரைத்து அவர் புகழ் பாடுகிறது, உலகம் !!!

வாழ்க நீ பாரதி, உன் புகழ் பெற்ற பாட்டால்

இந்தியத் திரு நாட்டை வாழ்விக்க வந்த மகான் நீ

என வாழ்த்தி அவரை வணங்குகின்றோம்.

நன்றி! வணக்கம்!


tags — பாரதியார் ஜாதகம் ,  அலசல் ,

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: