

Post No. 8704
Date uploaded in London – –18 SEPTEMBER 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
some pictures are sent by lalgudi veda; thanks.
கோவில் கோபுரம் எதற்காக ?
தமிழ் நாட்டில் மட்டும் சிறிதும் பெரிதுமாக 40,000 கோவில்கள் இருக்கின்றன. இந்தியாவில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான கோவில்கள் இருக்கின்றன. தமிழ் நாட்டைப்போல ஆந்திரம் கர்நாடகம், கேரளம், ஒரிஸ்ஸா வரை உயர்ந்த கோபுரங்கள் இருக்கின்றன. வடக்கே செல்லச் செல்ல கோபுர உயரம் குறைந்து கொண்டே வரும். இதற்கு முக்கிய காரணம் முஸ்லிம்களின் படை எடுப்பாகும். அவர்கள் வேண்டுமென்றே இடித்தது பாதி; மீதிப்பாதி இந்துக்களுக்கு நேரமின்மை; வெளி நாட்டானை விரட்டுவதிலேயே முழு நேரமும் போய்விட்டது. தென்னகத்தில் இந்து மத விரோதிகளின் தாக்குதல் குறைவு. மாலிக்காபூர் என்ற வெறியன் படையெடுப்பைத் தவிர மற்ற பெரிய தாக்குதல் இல்லை. அவன் போகாத இடத்திலுள்ள பெரிய கோவில்கள் பிழைத்தன. அவன் அழித்த பல கோவில்களையும் தெலுங்கு தேச மன்னர்கள் புனரமைத்து புகழ்க்கொடி நாட்டிச் சென்றனர்.
உயர்ந்த கோபுரங்களுக்குப் பின்னால் உயர்ந்த தத்துவங்கள் உள்ளன.இதை ஆகம நூல்கள் விளக்குகின்றன. சில விளக்கங்களை இன்று காண்போம் .

கோபுரம்- ஸ்தூலலிங்கம்,
கொடிமரம் – நேர்மை,
பலிபீடம்-பாசம்,
நந்திதேவர்-பசு,
விநாயகர் – பிரணவம்,
திரைச் சீலை – மாயை,
சிவலிங்கம் – பதி,
பிரகாரங்கள் ஐந்து- பஞ்ச கோசங்கள்,
படிகள் – ஐந்தெழுத்து,
நடராஜர் – பஞ்ச்கருத்ய ஸ்வரூபி,
தக்ஷிணா மூர்த்தி- ஆனந்த ரூபி,
சோமாஸ்கந்தர் – சத், சித், ஆனந்தம்,
பார்வதி தேவி – சக்தி .
இது சிவன் கோவில் அமைப்பை நன்கு விளக்கும்.
இதைத் திருமூலரும் பாடி இருப்பதால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்த தத்துவம் இருந்தது தெரிகிறது .

ஆய பதிதா னருட் சிவலிங்கமா
மாய பசுவுமடலே றென நிற்கு
மாய பலிபீட மாகுநற் பாசமா
மாய வரநிலை யாய்ந்துகொள்வார் கட்கே
–திருமூலரின் திருமந்திரப் பாடல்
சுவாமியும் அம்மனும் கர்ப்பக் கிருகத்தில் இருப்பர். இதற்கு மேல் விமானம் என்னும் அமைப்பு இருக்கும். நல்ல வருவாயுள்ள கோவில்களில் இந்த விமானம் தங்கக் கலசத்தால் மூடப்பட்டிருக்கும்.
இந்த விமானத்தை சிவாகமங்கள் பினருமாறு விளக்குகின்றன :-
உபபீடம் – பாதம்
அதிஷ்டானம் – முழந்தாள்
கும்பம் – நாபி
பஞ்சரம் – வயிறு
பாதவர்க்கம் – கை
பிரஸ்தரம்- தோள் மூட்டு
கண்டம் – கழுத்து
சிகரம் – முகம்
உஷ்ணிசவகை – சிகை
மஹாநாஸி மூக்கு
க்ஷுத்ர நாஸி – கண்
—-விஸ்வ கர்மீய வாஸ்து சாஸ்திரம்
****

ஸ்தபதி வை.கணபதி , மதுரை மீனாட்சி கோவில் கும்பாபிஷேக மலரில் எழுதிய கட்டுரையில் சொல்கிறார் –
1.நமது கோவில் அமைப்பை பிரபஞ்சத்தின் மாதிரி உருவம் ‘UNIVERSE IN MINIATURE’ என்பர்.
2.பஞ்ச பிரகாரங்களை பஞ்ச பூதங்கள் என்பர்.; அதற்குள் நுண்ணிய உருவில் இறைவன் இருக்கிறான் .
.
3.கருவறை என்று சொல்லப்படும் விமானத்தைப் பெண் வடிவம் என்றும் அதற்குள் உள்ள மூர்த்தியை உதரத்தில் உள்ள கர்ப்பம் என்றும் விசுவகர்மீயம் என்ற நூல் வருணிக்கிறது .இதனால்தான் இதை கருவறை/ கர்ப்பக் கிருகம் என்று அழைக்கிறோம்.
4. இதை கோழி முட்டை வடிவிலும் — குக்குடாண்ட — வடிவிலும் அமைக்கலாம்; காஞ்சி புரத்திலுள்ள ‘ஜ்வர ஹரேஸ்வரம்’ இப்படி அமைக்கப்பட்டது. இது ஏகாம்பரேஸ்வர் கோவிலின் தெற்கு வீதியில் இருக்கிறது.
5.சிற்ப நூல்களில் கருவறை விமானத்தை ஸ்தூல லிங்கமென்றும் கருவறைக்குள் இருக்கும் நிஷ்கள வடிவத்தை சூக்ஷ்ம லிங்கம் என்றும் கூறப்படுகிறது.
6.மானுட உடல் உறுப்புகளை அங்கம், மஹாங்கம், உபாங்கம், பிரத்யங்கம் என்று நான்காகப் பிரித்துக் கூறுவது போல விமானத்தில்

அதிஷ்டானம் என்பது மஹாங்கம்- BASEMENT
ஸ்தம்பம் அல்லது சுவர்ப்பகுதி – அங்கம் – SUPER STRUCTURE
பிரஸ்தரம் – உபாங்கம் – ENTABLATURE
சிகரம் – பிரத்யங்கம் – DOME OR ROOF ஆகும்.
7.இதையே படுத்திருக்கும் நிலையில் – சயன கோலத்தில் — பார்த்தால் ,
கர்ப்பக்கிரம – சிரஸ் / தலை
அந்தராளம் – முகம்
சுகநாசி – கழுத்து
அர்த்த மண்டபம் – புஜம்/தோள்கள்
மகாமண்டபம் – வயிறு
பிரகாரம் – கால்கள்
கோபுரம் – பாதம்
இவ்வாறு பல நூல்கள் பல விளக்கங்களைக் கூறுவதற்கு காரணம் இந்தப் பிரபஞ்சமும் , மனித உருவமும் இறைவனின் வடிவங்களே என்பதை உணர்த்துவதற்கே .
பாமர மனிதனிடம் பெரிய தத்துவங்களை சொற்பொழிவாற்றினால் விளங்காது . ஆனால் கோவிலைச் சுற்றுகையில் விளக்கினால் மனதில் பதியும். கற்றோருக்கும் கூட இக்கருத்துக்களை மனதில் பதிக்கும் MODELS / REPLICAS மாதிரிகள் இவை.
பள்ளிக்கூட, கல்லூரி சோதனைச் சாலைகளில் பல மாதிரி வடிவங்களை வைத்து இரசாயன, பெளதிக , உடற்கூறு தத்துவங்களை விளக்குவார்கள். அது போல பெரிய தத்துவங்களை விளக்கும் வடிவங்களே கோவிலின் அமைப்புகள்.
உதவிய நூல்கள் —
நால்வர் நெறி , லண்டன், 2002
கவசக் கொத்து , காரைக்குடி, 1981
மதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருப்பணி மலர், 1963
*****

முந்தைய கோவில் ஆராய்ச்சிக் கட்டுரைகள்
கோவில் வகைகள் | Tamil and Vedas
tamilandvedas.com › tag › கோவ…
1 Apr 2015 – ஆயினும் மதுரை மீனாட்சி கோவில், ஸ்ரீரங்கம் ராஜகோபுரம், தஞ்சைப் பெரிய கோயில், திருவண்ணாமலைக் கோவில் கோபுரங்கள் …
தஞ்சாவூர் பெரிய கோவில் …
tamilandvedas.com › 2015/06/09
9 Jun 2015 – வானளாவிய கோபுரம்; 216 அடி உயரம்; எல்லா ஊர்களிலும் கர்ப்பக்கிரகத்துக்கு மேல் சின்ன கோபுரம்/விமானம் இருக்கும்.
உள்ளம் பெருங் கோயில் … – Tamil and Vedas
tamilandvedas.com › 2017/04/06
6 Apr 2017 – மனமே இறைவன் இருக்கும் கருவறை/கோயில். கோபுர வாசல் நம்முடைய வாய். இதற்குள் குடி கொண்டிருக்கும் கடவுள் நமக்கு அருட் …
இடிதாங்கி | Tamil and Vedas
tamilandvedas.com › tag › இடித…
30 Mar 2017 – கோபுரக் கலசம் விழுந்தாலும், கோபுரம் இடிந்து விழுதாலும் … நானே மதுரை மீனாட்சி கோவிலின் தெற்கு கோபுரத்தின் …
திரயம்பகேஸ்வரம் … – Tamil and Vedas
tamilandvedas.com › tag › திரய…
10 Dec 2015 – அங்கிருந்து திரயம்பகேஸ்வர் கோவில் சென்றோம். இது 12 … திரயம்பகேஸ்வர் கோவில் கோபுரம் தன் பழமையைக் காட்டுகிறது.
கர்நாடக அதிசயங்கள்-1 | Tamil and Vedas
tamilandvedas.com › tag › கர்ந…
27 Aug 2017 – மீனாட்சி கோவிலில் 14 கோபுரங்கள் 14 ஏக்கர் கோவில் பரப்பில் 30000 சுதைகளைக் காணலாம்; ஹலபீடிலோ அரை மணி நாரப் பார்வையில் …
புத்தர் கோவில் | Tamil and Vedas
tamilandvedas.com › tag › புத்…
6 Feb 2016 – ஆஸ்திரேலியாவில் ஒரு அற்புத புத்தர் கோவில்! (Post No.2514). IMG_3108 … (for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact. swami_48@yahoo.com).
—subham—