
Post No. 8706
Date uploaded in London – –19 SEPTEMBER 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
சங்கே முழங்கு!!!!
Kattukutty
இப்பூவுலகில் நாம் பிறந்தவுடன் நம் வாயில் நுழையும் முதல்
அன்னியப் பொருள் சங்குதான்( தாயின் முலையைத் தவிர )
நாம் இறந்த பிறகும் நம்மை எரிக்கும் வரை சங்கு தான்!!!
இந்த சங்கைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.
சங்கு (ஆங்கிலத்தில் ) SHANK-CONCH
தாவர இயற் பெயர்- ஜங்கஸ் பைரம் ZHUNGUS PYRUM
(Latin name GENUS STROMBUS)
தோன்றிய இடம்— பாற் கடல்
நமது ஐதீகம் கடலிலிருந்து தோன்றிய அனைத்தும் புனிதமானவை.
(முத்து, பவழம், பல் விதமான கிளிஞ்சல்கள் , சிப்பிகள்)
நிறம்-
வெண்மையாக இருந்தால் – லட்சுமி சங்கு
பழுப்பு நிறமாக இருந்தால் – விஷ்ணு சங்கு.

சங்கில் வசிக்கும் தெய்வங்கள்
சங்கின் நடுவில். குபேரன்
சங்கின் சுழி முனையில் சூரிய, சந்திரர்கள்
குழிப் பகுதியில் வருண பகவான்
குறுகிய முனையில் பிரஜாபதி
அகன்ற முன் பகுதி. கங்கை, யமுனை, சரஸ்வதி
சங்கு நல்லவையா என்று எப்படி சோதிப்பது???
காதில் வைத்துக்கொண்டால் “ஓங்காரத்வனி” கேட்கும்.
கடவுளர் வசிக்கும் இடங்கள்
ருத்ராக்ஷ்த்தில் சிவ பெருமன்
சாளக்ரமத்தில். விஷ்ணு
ஸ்படிக லிங்கத்தில். சிவன் , பார்வதி, மும்மூர்த்திகள்
வலம்புரி சங்கில். மகா லட்சுமியும் , குபேரனும்
பசுவின் பின் பகுதியில். 33 கோடி. தேவர்களும் மும் மூர்த்திகளும்
அவர்கள் மனைவியரும்.
சங்கின் பிளவுப் பகுதியினை நம் வலது கையினால் பிடிக்க முடியுமானால்
அது “ வலம்புரி சங்கு”
இடது பக்கம் பிளவு இருந்து இடது கையினால் பிடிக்க முடியுமானால்
அது இடம் புரி சங்கு.

ஆயிரம் இடம்புரி சங்குகள் சூழ்ந்து இருக்குமாம் ஒரு “வலம்புரி”
ஆயிரம் வலம்புரி சங்குகள் சூழ்ந்து இருக்குமாம் ஒரு “சலஞ்சலம்”
ஆயிரம் சலஞ்சலம் சங்குகள் சூழ்ந்து இருக்குமாம் ஒரு “பாஞ்ச ஜன்யம்”
அபூர்வமான இந்த சங்கு கிருஷ்ணர் கையிவிருந்தது.
சங்கின் உணவு
சங்கு ஒரு புலால் உண்ணி!!!! கூட்டம் கூட்டமாக வாழும். பாறை ஓரத்தில்,
திடமற்ற மணற் பகுதியில் வாழும்
சங்கினால் என்னென்ன பயன்கள்????
சங்கு “ஜீவ சக்தி “ பெற அதில் நீர் விட்டு பச்சைக் கற்பூரத்தையும்
ஏலக்காய் பொடியையும்சேர்த்து கரைத்து அபிஷேகத்திற்க
உபயோகிக்கலாம்.
சங்கிலிருந்து அபிஷேகத்திற்கு நீர் விடும்போது
“ஓம் பாஞ்ஜ ஜன்யாய தீமஹி பவன ராஜாய தீமஹி
தன்னோ ஷங்கப் ப்ரசோதயாத்”
என்று சொல்லி அபிஷேகிக்க வேண்டும்.செல்வம் கொழிக்கும்.
பால் ஊற்றி அபிஷேகம் செய்தால் இடம், நிலம் சொத்துகள் சேரும்.
தேன் விட்டு அபிஷேகம் செய்தால் தெய்வ அருள் கிட்டும்.
பன்னீர் விட்டு அபிஷேகம் செய்தால். வழக்குகளில் வெற்றி ஏற்படும்.
பூஜை அறையில் வெள்ளித்தட்டில் அரிசியை பரப்பி அதில் வலம்புரி சங்கு
வைத்து சந்தன குங்குமம் இட்டு பூ சார்த்தி
வணங்கினால் உணவிற்கு பஞ்சமே இருக்காது!!!!
வலம்புரி சங்கை பூஜையில் வைத்தால் பில்லி சூனியம் அகலும்.
வலம்புரி சங்கில் பால் விட்டு செவ்வாய் தோறும் அபிஷேகம்
செய்தால் செவ்வாய் தோஷம் விலகும்
அதிக கடன் உள்ளவரகள் பவுர்ணமி தோறும் வலம்புரி சங்கிற்கு
குங்கும அர்ச்சனை செய்தால் கடன் கண்டிப்பாக நீங்கும்.
16 சங்கு கோலம் நடுவில் தீபம் ஏற்றி வணங்கினாலும்
கடன் போகும்.
வாஸ்து தோஷம் உள்ள வீட்டில் வலம்புரி சங்கில் துளசி, நீர்
விட்டு வீடு முழுக்க தெளித்தால் வாஸ்து தோஷம் நீங்கும்.

எங்கே சங்கு ஊதப்படுகிறது ??? ஏன்??
கோவில்களில் ஒவ்வொரு பூஜா காலத்திலும் கண்டிப்பாக
சங்கு ஊதப்படும்
வீட்டு பூஜையிலும், திருமணத்திலும், சாவிலும் சங்கு ஊதப்படுகிறது.
ஏன் தெரியுமா??? விஞ்ஞான பூர்வமாக மெயப்பிக்கப் பட்ட
உண்மை.சங்கினுடைய சப்தத்தினால் எல்லா கிருமிகளும்
அழிந்து விடுகின்றனவாம்!!!சங்கு சப்தத்தில் துர்தேவதைகள்
தீய ஆவிகள் ஓடி விடுகின்றனவாம்.
சில சங்கு விஷயங்கள்
திருமாலின் கையில் உள்ள சங்கிற்குப் பெயர் பாஞ்ச ஜன்யம்
அர்சுனன் – தேவ தத்தம்
தர்மன் – அனந்த விஜயம்
பீமன் – பவுண்ட்ரம்
நகுலன் – சுகோஷம்
சகாதேவன் – மணி புஷ்பகம்
மருத்துவத்தில் சங்கு
சங்கு ஒரு சிறந்த மருந்தாகவும் உபயோகப்படுகிறது.
உதாரணமாக “சங்கு பஸ்பம் “ சிறு குழந்தைகளுக்கு
டான்ஸிலுக்கு சிறந்த மருந்தாகும்.மேலும்மஞ்சட் காமாலை
வயிற்று வலி போன்ற நோய்களுக்கும் பயன்படுகிறது.
சங்கு , கிளிஞ்சல், சிப்பி இவைகளிலிருந்து சுத்தமான
கால்சியம் கிடைக்கிறது. மாத்திரைகளாக செய்து
விற்பனையும் செய்யப்படுகிறது
வெளிநாட்டினர் எல்லா விதமான சங்குகளையும் வாங்கி
அலங்காரப்பொருளாக அலமாரியில் வைத்திருக்கிறாரகள்

பாடல்களில் சங்கு
மத்தளம் கொட்ட வரி சங்கம் முழங்க ………ஆண்டாள்
சங்கம் முழங்கும் திரு மதுரை நகர்…………..TMS பாடல்
சங்கு சுட்டாலும் வெண்மை தரும்…………….ஒளவையார்
மருப்பொசித்த மாதவன்தன் வாய்ச்சுவையும்
நாற்றமும் சொல்லாழி வெண்சங்கே!!!………ஆண்டாள்
சங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே………பாரதி
செங்கண் அங்க…சங்கு அணங்கிய
சலஞ்சலம் அலம்ப தவள கங்கணங்……….கம்பன்
20th june 2016 லண்டன் திரு சுவாமி நாதன் எழுதிய tamilandvedas ஐப் பார்க்க-
“கம்ப ராமாயணத்தில் ஒரு அதிசய சங்கு”
நன்றி வணக்கம்.
tags- சங்கு ,வலம்புரி சங்கு, சங்கே முழங்கு
****