தமிழ், சம்ஸ்க்ருத, ஆங்கில இலக்கண அகராதி -2 (Post.8713)

தமிழ், சம்ஸ்க்ருத, ஆங்கில இலக்கண அகராதி -2 (Post.8713)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8713

Date uploaded in London – –20 SEPTEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஸ்ரீ மாதவ சிவஞான யோகிகள் அருளிச் செய்த தொல்காப்பிய சூத்திர விருத்தியை, திருவாவடுதுறை ஆதீனம் 1968-ல் வெளியிட்டது அதன் பிற்பகுதியில் ஆதீன மஹாவித்துவான் ச. தண்டபாணி தேசிகர் விளக்கக் குறிப்புகளை அளித்துள்ளார்.

பிரத்தியயம் என்றால் என்ன ?

பிரகிருதி – இயல்பின் நிற்பது .

பிரத்தியயம் – பால், எண் , இடம், காலம், பொருள் இவற்றான்  பிரக்கிருதியை

வேறுபடுத்தும் இடைச் சொற்கள்

பிராதிபதிகம் – வேற்றுமையுருபு முதலிய ஒன்றையும் ஏலாது . அவற்றை ஏற்கும் நிலையில் தனித்து நிற்கும் பெயர்ச் சொல் பொருளொடு கூடியும்  வினைச் சொல்லன்றி முதலியவற்றை ஏலாது நிற்பது .

பிராதிபதிகம் என்னும் கருத்துடைய “அர்த்தவது தாது:” அப்பிரத்தியாயமாகித் திருத்தக  நிற்பது   பிராதிபதிகம்  என்னும் பிரயோக விவேக உரைச் சூ த்திரத்தானும் அறிக

‘அர்த்தவது…..பிராதிபதிகம்’  என்பது வரையிலுள்ள பகுதி பாணினீய சூத்திரம்.

XXXX

தத்திதம் – பெயர்ச் சொல்லின் பொருள்பட வரும் விகுதி.

XXX

சுப் – என்பது வேற்றுமை உருபு

முதல் வேற்றுமை உருபாகிய  ‘சு’ என்பதில் தொடங்கி ஏழாம் வேற்றுமை பன்மை உருபாகிய ‘சுப்’ என்பதன் இருபத்தொரு  வேற்றுமையுருபுகளின் தொகுப்பால்  உண்டாக்கிய பெயர் .

திங் – வினை முற்று விகுதி . இது ‘தி’ என்னும் ஒருமை விகுதியும் ‘அங்’ என்னும் பன்மை விகுதியும் கூட்டி அமைத்த குறியீட்டுத் தொகுப்புப் பெயர்  ‘திங்’ என்பது

XXXX

ஆத்மனே பதம்

வடமொழியில் வினைச் சொற்கள், ஆத்மனே பதம் என்றும் பரஸ்மை  பதம் என்றும் இருவகைப்படும் . அடித்தான் என்ற வழி , அடித்தலாகிய தொழிற்பயனையுறுவான் பிறன் ஆதலின் அது பரஸ்மை  பதம் என்றும் அடித்துக்கொண்டான் .என்ற வழி , அடித்தலாகிய தொழிற்பயனையுறுவான் தான் ஆதலின் அது ஆத்மனே பதமாம்  என்க.

((சுருக்கமாகச் சொன்னால் பிறர் செய்யும் செய்கை பரஸ்மை ; தமக்குத் தாமே செய்யும் செய்கை ஆத்மனே பதம் .))

xxxx

விகரணி — பெயர் வினைகளின் பொருளைக் காலத்தொடும் , பொருளொடும்  கூட்டி வேறுபடுத்துவது .

XXXX

மாபாடியம்

பாணினி செய்த அஷ்டாத்யாயீ வியாகரண சூத்திரங்கட்குப் பதஞ்சலி முனிவர் செய்த அகலவுரை . இது ஆரிய  வழக்கில் மாபாடியம் என்று அடைமொழியின்றியே வழங்கப்பெறும்.

அம் மாபாடியத்துக்கு கையட னார் , ‘பிரதீபிகா’ என்னும் பெயரால் விளக்க உரை எழுதினார். அவ்வுரையில் வேத மொழி வைதிகம் என்றும் , உலக மொழி லெளகிகம் என்றும் வழங்கப்பெற் றுள்ளது .

மாபாடியம் = மஹா பாஷ்யம்

To becontinued……………………………….

tags– பிரத்தியயம், ஆத்மனே பதம்,தத்திதம், சுப் திங்

XXX subham xxxxx

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: