தமிழ், சம்ஸ்க்ருத, ஆங்கில இலக்கண அகராதி – 3 (Post No.8717)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8717

Date uploaded in London – –21 SEPTEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

THIS IS THE THIRD PART ; FIRST TWO PARTS WERE PUBLISHED IN THE PAST TWO DAYS.

தமிழ், சம்ஸ்க்ருத, ஆங்கில இலக்கண அகராதி – 3

ரூடி

குறியிட்டாளுதல் – பெயரிட்டு வழங்குதல் .

வடநூலார் காரணம் பற்றிப் பெயரிடுதலை ‘யோகம்’ என்றும்,

காரணமின்றி பெயர்வைத்து வழங்குதலை  ‘ரூடி’ என்றும் கூறுவர் .

*****

பாகதம் -இழிசனர் வழக்கு

பிராகிருத மொழி, சமூகத்தின் கீழ் மட்டத்திலுள்ளோர் பேசும் மொழி.

சம்ஸ்க்ருதம் , சமூகத்தின் உயர் மட்டத்திலுள்ளோர் பேசும் மொழி.

அதாவது இலக்கிய வழக்கு, பேச்சு வழக்கு என்றும் பிரிக்கலாம்.

காளிதாசர் நாடகங்களில் பெண்களும், வேடர்கள், குயவர்கள், நகைச் சுவை நடிகர்கள் பாகதம்/பிராகிருதம் பேசுவர் .

அரசவை சம்பந்தப்பட்ட எல்லோரும் சம்ஸ்கிருதம் பேசுவர்

தமிழிலும் முற்காலத்தில் எழுந்த பாடல்களும் உரை நடையும் இலக்கிய வழக்கு .

பிற்காலத்தில் எழுத்தில் எழுதப்பட்ட நாட்டுப்புற பாடல்களும் பத்திரிக்கை நாவல்களும் பேச்சு வழக்கு.

திருவிளையாடல் என்னும் சினிமாவில் பல வேடங்களில் தோன்றும் சிவாஜி கணேசன் சம்ஸ்க்ருதம் போலவும் பிராகிருதம் போலவும் தமிழ் மொழியைப் பயன்படுத்துவத்தைக் காணலாம். நக்கீரனைக் கேள்வி கேட்கையில் இலக்கிய நடையிலும்/சம்ஸ்க்ருதம், விறகு வெட்டியாக வருகையில் கொச்சைத் தமிழ் நடையிலும் /பாகதம் பேசுவதை பார்க்கிறோம்.

ஒரே வித்தியாசம் தமிழில் மிகவும் பிற்காலத்தில் இந்த கொச்சைத் தமிழ் இலக்கிய வடிவம் பெற்றது. வடக்கிலோ அதற்கு முன்பாகவே கல்வெட்டிலும், நாடகத்திலும், கவிதையிலும் இடம் பெற்றது.

ஆயினும் பாகதம் புரியாத சம்ஸ்க்ருத அறிஞர் கிடையாது

ஆனால் சம்ஸ்க்ருதம் விளங்காத  இழிசனர் உண்டு.

இதோ ச. தண்டபாணி தேசிகரின் கூற்று —

“சிறப்பெழுத்து –

தமிழிற்குரிய சிறப்பெழுத்து எ , ஒ என்னும் குற்றெழுத்துக்கள் வடமொழியில் இல்லாமை காண்க.

ஆயினும் இழிசனர் வழக்காகிய பாகத /பிராகிருத மொழியில் வழங்குகிறதென்பது .

வடமொழியிற் கூறப்படும் ஏனை எழுத்துக்கள், உயிருள்

ரு ,ரூ ,லு லூ , அம் , அ : என்பனவும், மெய்யுள் ஒவ்வொரு வருக்கத்தும் இடைநின்ற  — மெலிந்தும், உரப்பியும், கனைத்தும்

சொல்லப்படுவனாகிய மும்மூன்றும்  ,

ஸ , ஷ , ஹ , க்ஷ  என்பனவுமாம் . அவை தமிழில் எழுத்தெனக்கொள்ளப்படா என்பது.”

*****

ஆஹ்னிகம் என்றால் என்ன ?

ஆஹ்னிகம் என்பதை தமிழில் ‘ஆனிகம்’ என்பர்.

இது ஸம்ஸ்க்ருத்ச் சொல்லின் சிதைவு

.

பதஞ்சலி முனிவர் தம் மாணாக்கர்களுக்கு ஒவ்வொரு நாளும் பயிற்றுவித்த பகுதிகளைப் பின்னர்,

 ஒரு பிரிவாகக் கோத்தார் . ஆதலால் ‘ஒரு நாட் பாடம்’ என்பது ‘ஆனிகம்’ என்று அறிக .

******

அளபெடை

அளபெடையை வேறு எழுத்தாகக் கோடல் வடநூலார் முடிபு.

தொல்காப்பியர் கருத்து அஃ து அன்றென்பார் , அளபெடை வேறு பொருள் தராமையின் தனியே 

எழுத்தாக எண்ணப் படுவதின்றாயிற்று என விளக்கந் தந்தனர் .

*****

ஹ்ரஸ்வம் , புலுதம் என்றால் என்ன ?

வட நூலார் குற்றெழுத்தை ‘ஹ்ரஸ்வம்’ என்றும்,

நெட்டெழுத்தை ‘தீர்க்கம்’ என்றும்,

அளபெடையை ‘புலுதம்’ என்றும் சொல்லுவர் .

இவை ஒவ்வொன்றும் தனித்தனியே எடுத்துக் கூறலாகிய உதாத்தமும் , படுத்துக் கூறலாகிய அநுதாத்தமும்,

நலிந்து கூறலாகிய ஸ்வரிதமும் என்ற மூவகை ஒலி  வேறுபாடுடைமையின் எழுத்துக்கள் மும்மூன்று ஒன்பது வகைப்பட்டன.

****

அநு நாசிகம்

மூக்கின் வளி –  அநு நாசிகம்

மூக்கின் வளியோடு சாராதது அனநுநாசிகம் .

இதனால் ஒன்பது எழுத்துக்களும் ஒன்றிரண்டாகப் பதினெட்டாயிற்று என்பது வடநூலார் கொள்கை .

Tags- புலுதம், அளபெடை , ஆஹ்னிகம், பிராகிருதம், இலக்கண அகராதி – 3

To be continued……………………………………………..

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: