21-9-20 உலக இந்து செய்தி மடல் (Post No.8722)

Bollywood Ram Leela planned  for Ayodhya 

WRITTEN BY LONDON SWAMINATHAN (News Editor)

Post No. 8722

Date uploaded in London – –22 SEPTEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

இது ‘ஆகாச த்வனி’யின்  உலக இந்து சமய செய்தி மடல்

நேயர்கள் அனைவருக்கும் வணக்கம், நமஸ்காரம்

செய்திகள் வாசிப்பது VAISHNAVI ANAND

எங்கள் நிகழ்ச்சிகளை திங்கட்கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல் 2 மணிக்கும்,

 இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் நேரடியாகக் கேட்கலாம்.

உலக இந்து சமய செய்தித் தொகுப்புடன் நேயர்களின் கேள்விகளுக்கும் விடை அளிக்கப்படுகிறது

உங்கள் பேட்டை, நகரத்தில் நடைபெறும் விழாக்கள், உற்சவங்கள் பற்றி எங்களுக்கு செய்தி அனுப்புங்கள்

எங்களை எந்நேரமும் தொடர்பு கொள்ள  facebook.com/gnanamayam  முகவரியில் அணுகவும்

Xxxxx

பிரம்மோற்சவ விழா

திருப்பதியில் பிரம்மோற்சவ விழா செப்டம்பர் 19ம் தேதி கோலாகலமாகத் துவங்கியது.

இந்த ஆண்டு உலகப் புகழ் பெற்ற திருப்பதி- திருமலை பாலாஜி கோவிலில் இரண்டு பிரம்மோற்சவங்கள் நடை பெ றும்.மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் அதிக மாசத்தால் இப்பொழுதும், அக் டோபர்  16ம் தேதியும் உற்சவங்கள் நடை பெறும்

சூரிய – சந்திரர்களின் இயக்கத்தின் அடிப்படையில் கணிக்கப்படும் இரண்டு பஞ்சாங்கங்களை இந்துக்கள் பின்பற்றுவதால் இரண்டுக்கும் இடையில் கால வேறுபாடு ஏற்படும் . இதைச் சரிக்கட்ட இந்துக்கள்  சுமாராக மூன்று ஆண்டுக்கு ஒருமுறை  அதிக மாசம் என்னும் 13 ஆவது மாசத்தை அறிமுகப்படுத்துவர்

இந்த புரட்டாசி மாதம்  ஒரு அதிக மாதம்

புருஷோத்தம மாதம் என்று ஆன்றோர் அழைக்கும் இந்த மாதத்தில் சிறப்பு வழிபாடுகளும் நடைபெறு ம்

Xxxxxx

இதோ காஞ்சிபுரத்திலிருந்து ஒரு செய்தி

காஞ்சி காமகோடி பீ ட சங்கராசார்ய சுவாமிகள் ஆசியுடன் இந்த மாதம் முழுதும் முல்லைவாசல் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி  சாஸ்திரிகள் உபன்யாசம் செய்கிறார். அவர் 30 நாட்களும் ஆதி சங்கரரின் 30 துதிகள் பற்றி சிறப்பு சொற்பொழிவு ஆற்றி வருகிறார். இதை காமகோடி கைங்கர்ய ஸபா ZOOM  வழியாக ஒளிபரப்புகிறது என்று நடராஜன் சுந்தர் அறிவிக்கிறார்.

Xxxx

கோவில் நகரமான ஸ்ரீரங்கத்தில் புகழ்மிகு ரெங்கநாத பெருமாள் கோவில் இருக்கிறது . புரட்டாசி சனிக்கிழமைகளில் பெரும் பக்தர் கூட்டம் வரும் என்பதால் இன்டர்நெட் மூலமாக பதிவு செய்வோர் மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவர் என்று அறநிலையத் துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். கட்டண தரிசனமும் , இலவச தரிசனமும் உண்டு

Xxxx

இலங்கையில் யாழ்பா ணம்

ஸ்ரீ வெங்கடேச வரதராஜ பெருமாள் கோவில் உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கி விட்டது .

ஜெர்மனியில் ஹம் நகர காமாட்சி அம்மன் தேர்த் திருவிழா சிறப்பாக நடைபெற்றது

தமிழ் நாடு எங்கிலும் பெருமாள் கோவில்களில் புரட்டாசி உற்சவம் நடைபெற்று வருகிறது

xxxxx

லவ் ஜிஹாத்

உத்தர பிரதேசத்தில் லவ் ஜிஹாத் (Love Jihad) என்னும் பலவந்த மத மாற்றத்தைத் தடுக்க புதிய சட்டம் வருகிறது.

இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பலவந்த காதல் திருமணங்கள் மூலம் மத மாற்றம் அதிகரித்து வருகிறது . முஸ்லிம்கள் இந்துப் பெண்களை வசப்படுத்தி இஸ்லாமுக்கு மதம் மாற்றுவதைத் தடுக்க உத்தர பிரதேச முதலமைச்சர் யோகிஜி புதிய சட்டம் கொண்டுவரப்போகிறார்.

xxxxx

சென்னை கலாஷேத்ரா அமைப்பின் சார்பில் இசைக்குயில் ரமணன் தெய்வத்தின் குரல் என்னும் நிகழ்சசியைத் துவங்கியுள்ளார்.

சென்னை கலா க்ஷேத்ரா நிறுவனத்தின் சார்பில் இசைக்குயில் ரமணன் தெய்வத்தின் குரல் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். காஞ்சி பராமசர்ய சுவாமிகள் 100 ஆண்டுகள் வாழ்ந்து 1994–ல் சமாதி அடைந்தார் . அவரது சொற்பொழிவுகள் தெய்வத்தின் குரல் என்ற நூல் வாடிவில் 7 பாகங்களாக வந்திருப்பதை அனைவரும் அறிவர் ..

xxxxxxx

செப்டம்பர் 17 மாளய  அமாவாஸையன்று லட்சக்கணக்கான ஹிந்துக்கள் நீத்தார் நினைவு நாளை அனுஷ்டித்தனர்.  கல்கத்தாவில் ஹூக்ளி நதியில் மட்டுமே பல லட்சம் இந்துக்கள் நீராடி முன்னோர்களுக்கு எள்ளும் நீரும் இறைத்தனர்.

xxxx

உத்தர பிரதேச மாநிலத்தில் சம்ஸ்க்ருத ஆசிரியர்கள் கிடைக்காததால் பல சமம்ஸ்கிருதப் பள்ளிகளை முட்டும் அவல நிலை ஏற்பட்டுள்ளது

xxxxx

அயோத்தி மாநகரில் OCTOBER 17ம் தேதி முதல்  ஒன்பது நாட்களுக்கு பாலிவுட் நடிகர்கள் பங்கேற்புடன் நவராத்ரி- ராம்லீ லா உற்சவம் நடைபெறும்

புதிய ராமர் கோவில் எழும்பிவரும் உத்தரப் பிரதேச மாநிலத்தின் அயோத்தி நகரில் ராமலீலா உற்சவத்தில், முன்பு ராமாயண திரைப்படம், டெலிவிஷன் சீரியல்களில்  நடித்து புகழ் பெற்ற நடிக்க, நடிகையர் பங்கேற்கின்றனர்  .

நேயர்கள் கேட்டுக்கொண்டிருப்பது திங்கட் கிழமை தோறும் லண்டனிலிருந்து ஒலிபரப்பாகும்

ஆகாசத் த்வனியின்

உலக இந்து சமய செய்தி மடல்

Xxx

கல்கத்தாவிலிருந்து ஒரு நல்ல செய்தி

மேற்கு வங்க மாநிலத்தில் 8000 க்கும் அதிகமான இந்து மத புரோகிதர்கள் , பூஜாரிகள் குறைந்த வருவாயில் வாழ்ந்து வருகின்றனர். முஸ்லிம்  மத குருமார்கள்  மட்டுமே அதிக சலுகையை பெறுகிறார்கள் என்ற குற்ற ச் சாட்டுகள்  எழுந்து வந்தன. இதற்கிடையில் மேற்கு வாங்க மாநில முதலமைச்சர் மமதா பானர்ஜி ஒவ்வொரு பூஜாரி, அர்ச் சகருக்கும் மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்தார். இதை பு ரோகிதர் அர்ச்சகர் சபை   வரவேற்றுள்ளது.

Xxx

இத்துடன் உலக இந்து சமய வார செய்தி மடல் நிறைவு பெறுகிறது

செய்திகளை உங்களுக்கு வழங்கியவர் வைஷ்ணவி ஆனந்த்.

–subham–

tags — உலக இந்து,  ,செய்தி மடல், 21-9-2020

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: