ருத்ராட்சம்! – 1 (Post No.8725)

WRITTEN BY KATTUKKUTY

Post No. 8725

Date uploaded in London – –23 SEPTEMBER 2020    

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஒவ்வொரு திங்கள்கிழமை தோறும் லண்டனிலிருந்து ஞானமயம் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் இரண்டு மணிக்கும் இந்திய நேரம் மாலை 6.30 மணிக்கும் ஒளிபரப்பாகிறது. கேள்வி- பதில் நிகழ்ச்சியும் இதில் ஒரு பகுதி.21-9-2020 அன்று ஒளிபரப்பான கேள்வி பதில் நிகழ்ச்சியில் ருத்ராட்சம்!  பற்றிய கேள்விக்கு அளித்த பதிலை இங்கு காணலாம்.

கேள்வியை அனுப்ப விரும்பும் அன்பர்கள் facebook.com/gnanamayam -க்கு அனுப்பலாம்.

                                                               By Kattukutty

மாலைகளின் வகைகள்!

கழுத்திற்கும், ஜபம் செய்வதற்கும் பலவித மாலைகள்,உபயோகப்படுத்தப்

படுகின்றன.

1)பொன் மணி மாலை 2)வெள்ளி மணிமாலை 3)ருத்திரட்ச மாலை

4)தாமரை மணி மாலை5) துளசி மணி மாலை 6)பூமியிலிருந்து

தோண்டி எடுக்கப் பட்ட கல் மணி மாலைகள் 7) ஸ்படிக மணி மாலை

8) சங்கு மணி மாலை

  1. எந்தக் காரணம் கொண்டும் பிளாஸ்டிக் மாலைகளை ஜபம்

செய்ய உபயோகப் படுத்தக் கூடாது.

  • ஜபம் செய்ய சிறந்த மாலை ருத்ராட்ச மாலையே ஆகும்

*****

ருத்ராட்சம் biological name

ELAEOCARPUS GANITRUS ROXB.( latin name)

ருத்ராட்ச மரவகையான ELAEO CARPUS மரவகைகளில் சுமார்

300 வகைகள் உண்டு!!!

அவைகளில் சில இந்தியாவில் உள்ளன.

******

ருத்ராட்சம் CHEMICAL. COMBINATION

CARBON. 0.024%

HYDROGEN. 17. 798%

NITROGEN. 9.9461%

OXYGEN. 0.4531%

Following elements are also present , but in very less quantity.

Aluminum, calcium,chlorine, coper, cobalt,nickel, iron, magnesium

Manganese, phosphorus, potassium,sodium,zinc,and silicon oxide.

*****

ருத்ராட்சத்தின் அதிசய உண்மைகள்

ருத்ராட்ச மணிகள் DI ELECTRIC ஆக உள்ளது் அதாவது

மின் சக்தியை தன் உள் சேமித்து வைக்கும் தன்மை உள்ளது.

இந்த தன்மையினால் இதயத் துடிப்பு சீராகிறது.

நரம்பு மண்டலம் புத்துணர்ச்சி பெறுகிறது.

உடலை எப்பொழுதும் சீராக இயங்க உதவுகிறது.

ருத்ராட்சத்திற்கு MAGNETIC குணம் உண்டு.

மேற்கண்ட குணாதிசயங்களினால்,

ரத்த ஓட்டம் சீராகிறது.

“மூளை”எப்போதும் வேலை செய்யும் நிலைக்கு ஆட்படுகிறது.

நரம்பு மண்டலம் எப்போதும் சீராகவும் , துடிப்பாகவும் வேலை

செய்ய உதவுகிறது.

ருத்ராட்சத்தை சோதனை செய்யும் விதம்

ருத்ராட்ச மணிகள் தண்ணீரில் போட்டால் அது தண்ணீரில்

முழுகவேண்டும்.

மிதந்தால் அது நல்ல ருத்ராட்சம் இல்லை அல்லது “PLASTIC”

ஆக இருக்கும்

இரு செப்புக் காசுகளுக்கிடையே வைத்தால் அது சுழல வேண்டும்.

ஏக முக ருத்ராட்சத்தை தண்ணீரில் விட்டால் “எதிர்த்து “ஓடுமாம்.

******

ருத்ராட்சம் உண்டான கதை

திரி புர அசுரர் (தாருகாட்சன் ,கமலாட்சன் ,வித்யுன் மாலி)களால்

தேவர்கள் அவதிப்பட்டு.சிவனிடம் வந்து முறையிட்டார்களாம்.

அப்போது சிவனின் கண்களில் வழிந்த நீரே ருத்ராட்சமாக மாறியதாம்

ருத்ர— ருத்ரன் அட்சம்- கண்

சிவனின் வலது கண்- சூரிய ரூபம் 12 மணிகள் கபில நிறம்,

பொன்னிறம் , சென்னிறம்

நடுக்கண்-அக்னி ரூபம் 10 மணிகள் /கரு நிறம்

இடக்கண்- சந்திர ரூபம் 16 மணிகள்/வெண்ணிறம்

******

விளையும் இடம்

இமய மலைச்சாரல், குஜ்ராத், பீஹார், மத்திய

பிரதேசம்

நேபாளம் , தென் கிழக்கு ஆசியாவில் உள்ள கொரியா, மலேசியா,

ஜாவா, தைவான் , முக்கியமாக இந்தோனேஷியா, சைனா.

உபயோகப்படுத்தப்படுபவை

பூ, பிஞ்சு, காய், பழம்

தரம் பிரிக்கப் படுவது

அதன் மேலுள்ள கோடுகளால்.

கமலா ஆரஞ்சு பழத்தை உரித்தால

எவ்வாறு சுளை காணப்டுபிறதோ அது போல.

அவைகளை முகம் என்று சொல்கிறோம்

மொத்தம் 18 முகங்கள் சாதாரணமாக.

சில இடங்களில் 24 முகங்கள் வரை கிடைக்குமாம்.

மாலை அணிவதற்கும் ஜபத்திற்கும் ஒரே size ல் இருக்க வேண்டும்.

SIZE

அளவு – நெல்லிக்காய் அளவு- உத்தமம்

இலந்தைப் பழ அளவு – மத்திமம்

கடலைப் பருப்பு அளவு- அதமம்

அந்தக் காலத்தில் பெரியோர்கள் ருத்ராட்சம் அணிந்த இடங்கள்-11

தலை முடி-1, சிரசு- 1, காதுகள்- 1+1, கழுத்து -32, மார்பு-54 or 108

பூணூல்- 1, இரு புயங்கள்- 16+16, மணிக்கட்டு- 12+12

ஜபம் செய்ய-54 மார்பில்-அணிய- 51

மார்பில் அணியும் மாலையை ஜபத்திற்கும், ஜபத்திற்குள்ள மாலையை

மார்பிலும் அணியக் கூடாது.

                                                        **      (தொடரும்)

Leave a comment

1 Comment

  1. R Nanjappa

     /  September 23, 2020

    ருத்ராக்ஷத்தை சோதனை செய்ய மற்றொரு முறையை நான் பார்த்திருக்கிறேன். ருத்ராக்ஷத்தை நூலில் கோர்த்து காய்கறிகளுக்கு சற்று மேலே தூக்கிப்பிடிக்கவேண்டும். தேங்காய், வாழைக்காய் ,வாழைத்தண்டு, அவரைக்காய்போன்ற [ பொதுவாக பிராமணர்கள் தெவசத்திற்குப் பயன்படுத்தும்] காய்களுக்குமேல் ருத்ராக்ஷம் வலமாகச் சுற்றும். பூண்டு, வெங்காயம், கத்திரிக்காய் போன்றவற்றின் மீது இடமாகச் சுற்றும்!. ( இதனால் சில யோகமுறைகளில் பூண்டு, வெங்காயம் போன்றவை நிராகரிக்கப் படுகின்றன- அவற்றில் பிராணசக்தி எதிர்மறையாகச் செயல்படுகிறது என்று அவர்கள் சொல்கிறார்கள்.]
    ஆனால் ஒரு விஷயம். சிலருக்கு உடலில் ஒருவித காந்த சக்தி இருக்கிறது. அதனால் அவர்கள் கையில் எதைப் பிடித்தாலும் ( உ.ம்: துளசிமாணி மாலை) அது சுற்றும்! அவர்கள் மூலம் இந்த ருத்ராக்ஷப் பரீக்ஷை சரிவராது!

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: