தமிழ் சம்ஸ்க்ருத ஆங்கில இலக்கண அகராதி – 6 (Post. 8731)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8731

Date uploaded in London – –24 SEPTEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

உலகில் இந்துக்கள் போல இலக்கணத்தை மதிப்பவர்கள் வேறு எவருமிலர். சம் ஸ்கிருதத்தில் 3000 ஆண்டுகளுக்கும் முன்னரே இலக்கணம் பூஜிக்கத்தக்க நிலையை அடைந்தது என்பதைப் பார்க்கையில் உலகின் மூத்த சமுதாயமும் இந்துக்கள் என்று காட்டுகிறது. உலகில் நாகரீகத்தின் உச்சத்தை அடைந்தவர்களும் இந்துக்களே என்று காட்டுகிறது. அது மட்டுமல்ல சம்ஸ்கிருதத்தில் யாப்பு இலக்கணம், சொல் இலக்கணம் வளர்ந்தபோது உலகில் தமிழோ, லத்தினோ, எபிரேயம் எனப்படும் ஹீப்ருவோ , சீன மொழியோ, பாரசீக மொழியோ இலக்கியப்படைப்பு எதுவும் படைக்கவில்லை. இந்தப் பழைய மொழிகளில் தமிழ் இலக்கியம்தான் கடைசியாக வந்தது. அதாவது கடைக்குட்டி. ஆனாலும் மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது. பிற் காலத்தில் தென் கிழக்காசிய நாடுகள் முழுவதிலும் கொ கட்டிப் பறந்தது தமிழ் மொழி. ஆயினும் இவையெல்லாம் 2000 ஆண்டுகளுக்குட்பட்டதே.

இங்கே இலக்கணம் (GRAMMAR) பற்றி மட்டும் காண்போம் . இது ஆறாவது பகுதி.

உலகிலேயே மிகவும் வியப்பான விஷயம் !

இந்துக்களின்  பகவத் கீதையில் இலக்கணம்!

ஆதி சங்கரரின் பஜ கோவிந்தம் துதியில் இலக்கணம்!

ஐயர்கள் நாள் தோறும் முக்காலமும் செய்யும் சந்தியா வந்தனத்தில் இலக்கணம்!!

இதற்கு மூலம் உலகிலேயே பழமையான ரிக்வேதத்தில் உளது .

அதைவிட பெரிய அதிசயம் 2700 ஆண்டுகளுக்கு முன்னர் 1970 வினைச் சொற்களின் பட்டியல்!

அதைவிட பெரிய அதிசயம் பத்துவகையான பெயர்ச் சொல் பட்டியல்.

ஆனால் தமிழிலோ சங்க இலக்கியத்தில் ‘இறந்த காலம்’ , ‘இறந்த காலம் இல்லாத காலம்’ என்ற இரண்டுதான்.

அதாவது அப்போதுதான் மொழி துளிர்விடத் துவங்கியது.

நான் சொல்வதெல்லாம் இலக்கணம் (GRAMMAR) பற்றிய விஷயம் என்பதை நினைவிற் கொள் க .

தமிழ் மொழி அதற்கும் முன்னரே இருந்தது. தமிழர்கள் அதற்கும் முன்னரே இருந்தனர். ஆனால் வளர்ச்ச்சி அடைந்த — இலக்கணம் பெற்ற மொழியாக —- தமிழ் இருக்கவில்லை. தொல்காப்பியர் புள்ளி வைத்த எழுத்துக்கள், ஆய்த எழுத்து என்னும் முப்பாற் புள்ளி பற்றிப் பேசுவது எல்லாம் அவரை சங்க இலக்கியத்தை ஒட்டி வைத்துவிடுகிறது.

(தொல்காப்பியர் காலம் என்னும் எனது தொடர் கட்டுரைகளில் ஆதாரங்களுடன் விளக்கியுள்ளேன்; கண்டு கொள்க).

தினசரி பிராமணர்கள் செய்யும் சந்தியாவந்தனத்தில் வணங்கும் காயத்ரீ மாதா 24 எழுத்துக்கள் உடைய யாப்பு இலக்கணச் சொல் ஆகும். இதை உறுதிப்படுத்தும் வகையில் காயத்ரீ , உஷ்ணிக் , அனுஷ்டுப், பிருஹதி, பங்க்தி , த்ருஷ்டுப், ஜகதி என்றும் அவர்கள் சொல்லி வணங்குகிறார்கள்

*****

விக்கிபீடியா தகவல்:–

வேத சந்தஸ்கள் (Vedic meter) :-

“இந்து சமய வேத மந்திரங்களில் எத்தனை அடிகள் (பதங்கள்), எத்தனை எழுத்துக்கள் (அட்சரங்கள்) இருக்க வேண்டும் என நிர்ணயிக்கின்ற பகுதியே சந்தஸ் எனப்படும். சமஸ்கிருத மொழியில் பல சந்தங்களைப் பற்றி சந்தஸ் தொடர்பான சாத்திரங்கள் கூறியிருந்தாலும், வழக்கில் ஏழு சந்தங்களே (சந்தஸ்கள்) உள்ளன. அவைகள்:

காயத்திரி சந்தம்: மூன்று அடிகள், ஒரு அடிக்கு எட்டு எழுத்துக்களுடன் மொத்தம் 24 எழுத்துக்களுடன் கூடிய மந்திரங்கள் கொண்டது.

ஊஷ்ணிக் சந்தம்: நான்கு அடிகள், ஓர் அடிக்கு ஏழு எழுத்துக்கள்; மொத்தம் 28 எழுத்துக்களுடன் கூடியது.

அனுஷ்டுப் சந்தம்: நான்கு அடிகள், ஒர் அடிக்கு எட்டு எழுத்துக்கள்; மொத்தம் 32 எழுத்துக்களுடன் கூடியது.

ப்ருஹதி சந்தம்: நான்கு அடிகள், ஒவ்வொரு அடிக்கு முறையே 8, ,, 12, 8 எழுத்துக்களுடன் மொத்தம் 36 எழுத்துக்கள் கொண்டது.

பங்கதி சந்தம்: நான்கு அல்லது ஐந்து அடிகள்; மொத்தம் 40 எழுத்துக்களுடன் கூடியது.

திருஷ்டுப் சந்தம்: நான்கு அடிகளுடன், ஓர் அடிக்கு 11 எழுத்துக்களுடன், மொத்தம் 44 எழுத்துக்களுடன் கூடியது.

ஜகதி சந்தம்: நான்கு அடிகள், ஓர் அடிக்கு 12 எழுத்துக்கள்; மொத்தம் 48 எழுத்துக்களுடன் கூடியது.

புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் அனுஷ்டுப் சந்தஸ் பெருவாரியாக பயன்படுத்தப்பட்டுள்ளது”.

****

பிராமண , க்ஷத்ரிய, வைஸ்யர்கள் ஆகிய மூன்று ஜாதிக்காரர்கள் வேதங்களைப் பயில்வதோடு ஆறு அங்கங்களையும் பயில வேண்டும். அதில் வியாகரணம்(Grammar) என்னும் இலக்கணமும், நிருக்தம் (Etymology) என்னும் சொற்பிறப்பியலும் அடக்கம். உலகில்  வேறு எந்த கலாசாரத்திலும் இப்படி சிலபஸ் Syllabus கிடையாது. இந்துக்களைப் பார்த்து பிளாட்டோவும் அரிஸ்டாட்டிலும் கொஞ்சம் அறிமுகப்படுத்தினர் கிரேக்க நாட்டில்.

இதைவிட வேடிக்கையான விஷயம், உலகில் சிறந்த பொருள்கள் யாவையும் நானே என் று அர்ஜுனனுக்குச் சொல்லிய கிருஷ்ண பரமாத்மா, பகவத் கீதையில் அகாரம் பற்றிப் பேசிவிட்டு ‘சமாசம்’ பற்றியும் பேசுகிறார். கிருஷ்ணனை ‘காப்பி’ copy அடித்த வள்ளுவரும் ஏசுவும் (Jesus)  அகாரம் பற்றிச் சொன்னார்கள் . ஆனால் ‘சமாசம்’ பற்றிச் சொல்லவில்லை !

இதோ சமாசம்!

‘சமாசம்’ என்பது கூட்டுச் சொற்கள்;

பகவத் கீதையில் கிருஷ்ணன் செப்புகிறார் 10-33

“எழுத்துக்களுள் ‘அகார’மாகவும் , ஸமாஸங்களுள் ‘துவந்துவமாக’வும் இருக்கிறேன் . அழிவில்லாத காலமும் (The Time) நானே.. எங்கும் முகமுள்ளவனும் கரும பலனை அழித்துக் காப்பவனும் நானே” . 10-33

இதில் காலம் பற்றியும் , கருந்துளை எனப்படும் BLACK HOLE ‘பிளாக் ஹோல்’ பற்றியும் முன்னமே தனிக் கட்டுரைகளில் விளக்கிவிட்டேன்

சமாசம் பற்றி பேரறிஞர் அண்ணா கூறுவதைக் காண்போம்; இவர் ராமகிருஷண மடத்தின் உரை ஆசிரியர்.

‘த்வந்த்வ’ ஸமாஸம்

சொற்களின் புணர்ச்ச்சி ஸம்ஸ்க்ருதத்தில் நான்கு வகை :

1.அவ்யயீ – (எடுத்துக் காட்டு) – அதிஹரி

2.தத்புருஷம் – ஸீதாபதி

3.பஹுவ்ரீஹி – பீதாம்பரஹ

4.த்வந்த்வ – ராம லக்ஷ்மணெள

த்வந்த்வ ஸமாஸத்தில் புணரும் பதங்கள் இரண்டும் ஸமப்ரதானம் .

இது அறிஞர் அண்ணா உரை.

கீதையில் இலக்கணம் பற்றிக் கதைப்பதிலிருந்து அது எவ்வளவு முக்கியம் என்று அறி கிறோம் .

அதிலும் கிருஷ்ணர், சமத்துவம் போதிக்கும் சமாசத்தை எடுத்தது சாலப்பொருந்தும் . இதையே வள்ளுவனும் , “சமன்  செய்து தூக்கும் கோல் …. “ என்னும் குறளில் எதிரொலிக்கிறான்.

****

பஜ கோவிந்தம் துதியில் பாணினி இலக்கணம்

உலகம் புகழும் தத்துவ அறிஞர் ஆதிசங்கரர் இயற்றிய ‘பஜ கோவிந்தம்’ ஆழ்ந்த தத்துவங்களை, சின்னப் பிள்ளைகள் கற்கும் Nursery Rhyme ‘நர்சரி ரைம்’, போலச் சொல்லும்.

இதை எம். எஸ். சுப்புலெட்சுமியின் குரலில் அனைவரும் கேட்டு மகிழ்கிறோம்.

முதல் பாட்டில்  இலக்கண விவாதங்களில் காலத்தை வீணடிப்போரை இடித்துரைக்கிறார் .

 பஜகோவிந்தம் முதல் பாடல் —

“பஜகோவிந்தம் பஜகோவிந்தம்

.பஜகோவிந்தம் மூடமதே |

சம்ப்ராப்தே சந்நிஹிதே காலே

நஹிநஹி ரக்ஷதி டுக்ருஞ் கரணே”

கோவிந்தனைத் துதி. யமன் வந்து கதவைத் தட்டும்போது உன் இலக்கண அறிவு உதவிக்கு வருமா? என்று கேட்கிறார்; இதன் பின்னால் ஒரு கதை உள்ளது .

டுக்ருஞ் – என்பது பாணினி சூத்ரம் 1-3-5 உரையில் உளது; ஒரு நாள் ஆதிசங்கரர்,  காசி நகர தெரு வழியே நடந்து சென்றார். அப்பொழுது  ஒரு கிழவன்  இந்த சூத்திரத்தைத் திரும்பத் திரும்ப சொல்லி விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தார் ; தள்ளாத வயதில் இறைவனை நினைத்து — அதிலும் காசி மாநகரத்தில் – வணங்காதபடி, இப்படி இந்தக் கிழவன் நேரத்தைச் செலவிடுகிறானே என்று பாடத் தொடங்கினார் ஆதி சங்கரர்.

27 பாடல்களில் முதல் சில பாடல்களை அவர் பாடியதாகவும் ஏனைய பாடல்களை அவருடன் வந்த சிஷ்யர்கள் பாடி முடித்ததாகவும் உரைகாரர்கள் புகல்வர் . கம்பன் வீட்டுக் கட்டுத் தறியே கவி பாடுகையில் ஆதி சங்கரரின் சிஷ்யர்கள் பாட முடியாதா என்ன?

கட்டுரையின் அடுத்த பகுதியில் ‘தாது’ (Verb Roots) பாடத்தில் வரும் 1970 வினைச் சொற்கள் பற்றியும் பெயர்ச் சொல் கூறும் கண பாடம் பற்றியும் காண்போம்.

tags- இலக்கண அகராதி –

—-TO BE CONTINUED

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: