ருத்ராட்சம்! – 2 (Post No.8730)

WRITTEN BY KATTUKKUTY

Post No. 8730

Date uploaded in London – –24 SEPTEMBER 2020    

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஒவ்வொரு திங்கள்கிழமை தோறும் லண்டனிலிருந்து ஞானமயம் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் இரண்டு மணிக்கும் இந்திய நேரம் மாலை 6.30 மணிக்கும் ஒளிபரப்பாகிறது. கேள்வி- பதில் நிகழ்ச்சியும் இதில் ஒரு பகுதி.21-9-2020 அன்று ஒளிபரப்பான கேள்வி பதில் நிகழ்ச்சியில் ருத்ராட்சம்!  பற்றிய கேள்விக்கு அளித்த பதிலை இங்கு காணலாம்.

கேள்வியை அனுப்ப விரும்பும் அன்பர்கள் facebook.com/gnanamayam -க்கு அனுப்பலாம்.

                                                               By Kattukutty

ருத்ராட்சத்தை யார், யார் அணியலாம்???

பிரும்மச்சாரிகள், இல்லற வாசிகள், வானப் பிரஸ்தர்,

சன்யாசிகள், மற்றும் பெண்களும் அணியலாம்!

மாலை கட்ட வேண்டிய உலோகம்

தங்கம், வெள்ளி, தாமிரம், பட்டு நூல், பருத்தி நூல்.

எதை ருத்ராட்ச மாலையுடன் கட்டலாம்???

தங்கத்தினால் ஆன மணி, வெள்ளியினால் ஆன மணி, பவழம், முத்து, ஸ்படிகம்.

மாலை எப்படி அமைய வேண்டும்???

மாலை கட்டும் போது மணிகள் ஒன்றை ஒன்று தொடக் கூடாது.

மணிகள் அனைத்தும் ஒரே அளவாக (size) இருக்க வேண்டும்

ஒரு மணிக்கும் மற்றொரு மணிக்கும் நடுவில் போடும் முடிச்சு

மூன்று வகைப் படும்

1)நாக பாசம் 2) சாவித்திரி 3) பிரம கிரந்தி

மாலையை அணியும்போது ருத்ராட்சத்தை சிவனைத் துதித்து அணிய

வேண்டும்.

எப்படி ஜபிக்க வேண்டும்???

மேரு மணி( அதாவது மாலையில் உள்ள மணிதவிர தனியாக

உள்ள மணி) தொடங்கி ஒவ்வொரு மணிக்கும மந்திரம. சொல்லி

ஜபிக்க வேண்டும்

உடலை வெறுத்த துறவறத்தார் மணியை மேல் நோக்கி ஜபிப்பார்கள்

போகத்தை விரும்பினோர் மணியை கீழ்நோக்கி ஜபிப்பார்கள்.

மேரு வந்தால் அதைக கண்டிப்பாக தாண்டக் கூடாது

மாலையை திருப்பி செலுத்தி ஜபிக்க வேண்டும்

வீட்டிலிருந்து ஜபித்தால். ஒரு மடங்கு பலன்

பசு மடத்திலிருந்து ஜபித்தால். 10 மடங்கு பலன்

நதிக்கரையிலிருந்து ஜபித்தால் 100 மடங்கு பலன்

ஆலயத்திலிருந்து ஜபித்தால். 1000 மடங்கு பலன்

வனத்திலிருந்து ஜபித்தால் 10,000 மடங்கு பலன்

மலையிலிருந்து ஜபித்தால். கோடி மடங்கு பலன்

சிவன் சன்னிதியிலிருந்து ஜபித்தால் எண்ணிலடங்கா பலன்!!!!

எந்த திசை நோக்கி ஜபித்தால் என்ன பலன்?

கிழக்கு நோக்கி ஜபித்தால். விரும்பிய பொருள் கிட்டும்

தெற்கு நோக்கி ஜபித்தால். செய் வினைகள் விலகும்

வடக்கு நோக்கி ஜபித்தால். வியாதிகள் நீங்கும்

மேற்கு நோக்கி ஜபித்தால். இஷ்ட சித்தி அடையலாம்

ஐபம் செய்யும் மாலையில் 2முகம், 3 முகம், 13 முகம் மணிகள்

இருக்கக் கூடாது.

ஜபம் செய்யும்போது ஆசனம்

தர்பபைப் புல், மான் தோல், புலித்தோல்

ஜபம் செய்ய ருத்ராட்ச மாலை இல்லாத போது,

பொன்னால் செய்த மாலையால் ஜபித்தால் செல்வம் சேரும்

முத்து மணி மாலையால் ஜபித்தால் புகழ் சேரும்

ஸ்படிக மணி மாலையால் ஜபித்தால் பிள்ளைப் பேறு உண்டாகும்

பவழ மணி மாலையால் வசியமும், வெள்ளி மணிமாலை வாகன வசதியும்,

கிடைக்கும்.

ருத்ராட்சத்தை சுத்தம் செய்யும் முறை

ஒரு வார காலம் பசு நெய்யிலோ, நல்லெண்ணெயிலோ ஊற

வைக்க வேண்டும்

பிறகு நீரால் சுத்தப் படுத்தி துடைத்து ஈரம் போனவுடன் திரு நீற்றில்

ஓரு நாள் வைக்க வேண்டும்

பின்பு காய்ச்சாத பசும்பாலில் கழுவி, பின் நல்ல ஜலத்தில் கழுவி,

துடைத்து பூஜையில் வைத்து அணியவும்

அனபர்கள் அனைவரும் பயன் படுத்தி நண்பர்களுக்கும்

தெரியப் படுத்தி அவர்களும் பயன் பெற வேண்டுமாய் கேட்டுக்

கொள்கிறேன்

நன்றி, வணக்கம்.                       

tag- ருத்ராட்சம்! – 2 

                            ***

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: