
WRITTEN BY KATTUKKUTY
Post No. 8747
Date uploaded in London – –28 SEPTEMBER 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
தாமரையும் உணவும்
தாமரையின் கிழங்கும், தண்டுகளையும் துண்டு துண்டாக வெட்டி
உப்பிட்டு காய வைத்து விடுவார்கள். இதை எண்ணெயில்
பொறித்து சாப்பிட மிக ருசியாக இருக்கும். இதில் வைட்டமின்
“C “யும், மாங்கனீஸும் நிறைய உண்டு.மேலும் இது நார்ச் சத்து
மிகுந்தது. தாமரை விதையின் ருசியே அலாதி!!! தற்சமயம்
இதை உப்பிட்டு “பாப் கார்ன்” வறுத்து அல்லது பொரித்து
சாப்பிட வசதியாக விற்கிறார்கள்
தாமரையும் மருத்துவமும்
தாமரைப்பூ, கிழங்கு, தண்டு,மொட்டு, விதை அனைத்துமே மருத்துவ
குணமுடையவை.சித்த வைத்தியர்கள் இதை “மருத்துவ தெய்வ
மலர்” என்று போற்றுவர்.
மிகவும் உபயோகமாக இருப்பது வெண்தாமரையே!!!
வெண் தாமரை இதழை கஷாயம் வைத்து குடித்தால் மூளை
வளர்ச்சியடையும்.
மனோவியாதிகள் தீரும். இதய வியாதிகளுக்கு நல்லது.
தாமரை இதழ்களை வைத்து சர்பத் செய்து சாப்பிட இரத்த
மூலம்,சீதபேதி, இருமல் போன்ற வியாதிகள் கட்டுப்படுகின்றன.
தலை முடி வளரவும் கருக்கவும் தாமரை இதழ்கள் உதவுகின்றன!!!
மேற்கொண்டு சித்த வைத்தியர்களை கண்டு பேசி மருந்துகளை
கேட்டு தெரிந்து கொண்டு உபயோகப்படுத்தவும்.

தாமரையும் இலக்கியமும்
“வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு.”
தண்ணீரின் அளவுதான் அதில் மலர்ந்துள்ள தாமரைத்தண்டின்
அளவும் இருக்கும். அது போல மனிதரின் வாழ்க்கையின் உயர்வும்
அவர் மனதில் கொண்டுள்ள ஊக்கத்தின் அளவே இருக்கும்.
தாமரையை வைத்து அருமையான பாடம் கற்பிக்கிறார் வள்ளுவர்
ஆழி சூழ் உலகெலாம் பரதனே ஆள,நீ போய்
தாழிருஞ்சடைகள் தாங்கித் தாங்களும் தவம் பூமி
வெங்கானம் நண்ணி மேற்கொண்டு புண்ணியத்துறைகள் ஆடி
ஏழிரண்டாண்டடில் வா….
இதைக் கேட்ட ராமன் முகம்
“அப்போதலர்ந்த செந்தாமரையினை வென்றதம்மா”
என்றி அருமையாக உவமை கூறுகிறார் கம்பர் பெருமான்!!!
அத்தோடு விடவில்லை, மீண்டும் தாமரைக்கு உவமை கூறுகிறார்
கம பர்
மெய்த் திருப்பதம் மேவு என்ற போதினும்
இத்ததுருத் துறந்து ஏகு என்ற போதினும்சித்திரத்தின் அலர்ந்த
செந்தாமரை
ஒத்திருக்கும் முகத்தினை உன்னவாள்!!!
சரி தரு நாவுக்கரசர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்
பூவினுக்கருங்கலம் பொங்கு தாமரை
நாவினுக்கருங்கலம் நமச்சிவாயவே!!!! ( தேவாரம்)

தாமரை கற்றத் தரும் பாடம்
தாமரை வேர் தனக்குத்தேவையான தண்ணீர் தவிர ஒரு சொட்டு
கூட அதிகமாக எடுத்துக்கொள்ளாது. மேலும், பூவின்மேலும்,
இலையின் மேலும் தண்ணீர் பட்டாலும் முத்துப்போல் உதிர்த்து
விடும்.
அதுபோல
பொதுவாழ்வில் உள்ளவர்கள் “தாமரை “போல் இருக்க வேண்டும்.
தனது உழைப்புக்குரிய சம்பளத்தைத் தவிர ஒரு ரூபாய் கூட
பொதுப்பணத்தை எடுக்க க்கூடாது.
தாமரையும் ஞானியும்
தாமரை எப்படி சேறும் சகதியும் உள்ள இடத்தில் மலர்ந்து எவ்வளவு
கீழ்மட்டத்திலிருந்தாலும் ஞானிகளும் கீழ் மட்ட ஜாதி, மத, இனத்திலும் தோன்றுவார்கள்
இலையும் பூவும் மேல் மட்டத்திலேயே எப்போதும் மிதப்பதினால்
ஞானிகளும் சமுதாய சகதிகளிலிருந்து விடுபட்டு ஞானம் என்னும்
சூரியனையே , அதாவது உண்மை என்னும் நிலையையே நோக்கி
விரும்பி செல்வார்கள்
எப்பொழுதும் தாமரை சூரியனையே பார்த்திருப்பதினால், “அறிவு”
என்னும் ஞானச் சுடரையே ஞானிகள் விரும்பி பார்த்து சென்று
கொண்டிருப்பார்கள்.
மேலும் பூவினமீதோஇலையின்மீதோதண்ணீர்பட்டாலும்,
முத்துப் போல உதிர்த்து விடுகிறது.ஞானிகளும் தன்னைச்
சுற றி நடப்பதிலிருந்து விடு பட்டு ஞானத்தை அடைகிறாரக

கணித த்தில் தாமரை
எட்டு தாமரை இதழ்களை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி
ஒரு ஊசியால் சடக்கென்று குத்தினானால் எவ்வளவு நேரம்
ஆகுமோ அதை “ஷணம்” என்று சொல்லப்படுகிறது. இது
போன்ற இரண்டு ஷணம் சேர்ந்தது ஒரு நொடி………இப்படிப்
போகிறது பழைய வாய்ப் பாடு…..தறசமயம் இது புழக்கத்தில்
இல்ஐ என்றாலும் உதாரணத்திக்காக உபயோகப்படித்தப் படுகிறது.
ஒரு “ஷண”நேரத்தில. நடந்து விட்டது…..
தாமரையின் வாழ்க்கை நமக்கொரு பாடம்.தெய்வத்தன்மையை
அடைய ஒரு வழி காட்டி.
முயல்வோம் வெற்றி பெறுவோம்!!!

tags- தாமரை-2