ஜோதிடர் இல்லாத ஊரில் வசிக்காதே! (Post No.8774)

WRITTEN BY S NAGARAJAN                                    

Post No. 8774

Date uploaded in London – – 5 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

ஜோதிடர் இல்லாத ஊரில் ஒரு நாள் கூட வசிக்காதே!

ச.நாகராஜன்

ஜோதிடத்திற்கு ஹிந்து வாழ்க்கை முறை ஒரு தனி இடத்தைத் தந்துள்ளது.

யோகம், கரணம், திதி, வாரம், நக்ஷத்திரம் ஆகிய ஐந்து விஷயங்களை அன்றாடம் பார்த்து உன் வாழ்க்கை வழியை வகுத்துக் கொள்; அதற்கு உதவியாக இருக்கும் ஜோதிடரை அணுகி அறிவுரை பெறு என்பதை அது வலியுறுத்துகிறது.

சுபாஷிதங்களில் ஒரு சுபாஷிதம் ஜோதிடர் இல்லாத ஊரில் ஒரு நாள் கூட வசிக்காதே என்று அறிவுரை – அன்புரை – கூறுகிறது.

ருணதாதா ச தைவக்ஞ: ஸ்ரோத்ரிய: சுஜலா நதி; |

யத்ர ஹோதே ந வித்யதே ந தத்ர திவசம் வஸேத் ||

கடனைத் தருபவன், ஒரு ஜோதிடர், வேதங்களை நன்கு அறிந்த ஒரு பண்டிதர், நல்ல ஜலத்தைக் கொண்டிருக்கும் நதி – எங்கு இவை இல்லையோ அங்கு ஒரு நாள் கூட வசிக்கக் கூடாது.

One who accommodates a loan, an astrologer, a priest well versed in the Veda-s and a river having good water – where these are not available one should not live even a single day there (Translation by A.A.R.)

அதுமட்டுமல்ல, ஜோதிடத்தின் முக்கியத்துவத்தை ஒரு சுபாஷிதம் இப்படி நன்கு வலியுறுத்துகிறது – அனைத்தையும் துறந்த ஒரு முனிவர் கூட கிரக சஞ்சாரம் பற்றித் தெரிந்து கொள்ள ஒரு ஜோதிடரை அணுகுவர்! ஒரே ஒரு ஆசனத்தில் அமர்ந்து, ஜலத்தையும் வாயுவையும் மட்டுமே ஆகாரமாகக் கொண்டு வாழ்ந்து எந்த ஒரு பொருளையும் பெறுவதையும் துறந்து முக்தி ஒன்றையே விரும்புவோர் (அனைத்தையும் துறந்தவர்) கூட, ஒரு ஜோதிடரை நாடி ஆகாயத்தில் கிரகங்களின் சஞ்சாரத்தைப் பற்றிக் கேட்பர்; அப்படி இருக்க, செல்வத்தை விரும்புவரைப் பற்றி என்ன சொல்வது?

ஏகாசனஸ்யா ஜலவாயுபக்ஷா

   முமுக்ஷவஸ் த்யக்தப்ரிக்ரஹாஷ்ச |

ப்ருச்சந்தி தேப்யம்பரசாரிசாரம்

   தைவக்ஞமன்யே கிமுதார்த்தசித்தா: ||

Seated constantly in one seat, sustained by air and water (alone), desiring liberation and giving up the receiving of all gifts – even these people ask of an astrologer the movements of the planets in the sky; What then of those who are desirous of wealth? (Translation by A.A.R.)

‘The Astrological Primer’ என்ற அருமையான நூலை (வெளியீடு 1892ஆம் ஆண்டு, பெல்லாரி) எழுதியுள்ள திரு B. சூர்யநாராயண் ராவ், “கிரகங்களின் மொழியை அறிந்து அதைப் பயன்படுத்தி எதிர்காலத்தில் என்ன நடக்கப்போகிறது என்பதை எடுத்துக் கூறுகிறார் ஜோதிடர் என்கிறார். (இவர் பிரபல ஜோதிடரான திரு பி.வி.ராமனின் தாத்தா ஆவார்).

(An Astrologer interprets the language of the planets by the symbols used and predicts the future events by their light.)

மேலும் அவர் கூறுகையில், “ எதிர்காலத்தை அறிந்து கொள்வதால் நமக்கு எந்த விதமான நஷ்டமும் இல்லை. அதை எதிர்கொள்வதில் பொருத்தமான ஏற்பாடுகளை செய்து கொள்வதோடு  நம்முடைய மன உறுதியைப் பண்படுத்திக் கொள்ளலாம். அத்துடன் முடிந்தால், நிச்சயமாக எப்போதும் முடியும்,  நமது உறுதியான மதி வலிமையாலும் ஹிந்து சாஸ்திரங்களில் கூறப்படும் இதர பரிகாரங்களாலும், எதிர்காலத்தை வழி நடத்தும் இயற்கை சக்திகளை, எவற்றின் செல்வாக்கினால் நாம் இருக்கிறோமோ அவற்றின் கெட்ட செல்வாக்கை எதிர்த்து அவற்றைக் கட்டுக்குள் கொண்டு வந்து விடலாம்.” என்கிறார்.

(“There could possibly be no loss by knowing our future, by making or attempting to make suitable arrangements to meet it and to cultivate our “will force” to a greater extent so that if it is possible, as it is always possible,

to overcome all evil influences by strong will force and other remedies prescribed in the Hindu Shastras, we may try to counteract or control the natural forces which guide our future  and under whose influence we have been called into existence.”)

ஆக ஜோதிடத்தின் முக்கியத்துவத்தை மேலே கண்ட சொற்களால் அறிந்து கொள்ள முடிகிறது.

London Advertisements on Roads

3

அடுத்து அதே நூலில் அவர்  பிறிதோரிடத்தில், “தங்கள் ஜாதகங்களைக் கொடுத்து பலன்களைத் தெரிந்து கொள்வதில் ஜோதிடருக்கும் பணம் கொடுக்க நன்கு படித்தவர்கள் பலரும் கூட மறந்து விடுகின்றனர். இது  மிகவும் கண்டிக்கத்தக்கது. இதற்கு இரு காரணங்கள் உண்டு. 1) வருவாயை ஈட்டித் தரும் தொழில் ஜோதிடம் என்ற திறனை இது வெகுவாகக் குறைத்து விடுகிறது 2) ஜோதிடர்களை கவனமற்றவர்களாகவும் இது ஆக்குகிறது; தங்களது கணிதத்திலும் பலன் கூறுதலிலும் ஒரு அலட்சிய மனோபாவத்தையும் ஏற்படுத்துகிறது. ஏனெனில் மனதை மிகவும் தீவிரமாக ஈடுபடுத்தி செய்யப்படும் இதில் போதுமான வருவாய் இல்லை என்பதால் தான். ஜோதிடம் மருத்துவம் போல ஒரு நடைமுறை விஞ்ஞானமாகும். அது வாழ்க்கை முழுவதும் பயன்படும் ஒன்று.” என்கிறார்.

(Many who consult their horoscopes forget that they have to pay for the work they expect the astrologer to do. This conduct on the part of educated and intelligent men is highly reprehensible, and must be condemned for two reasons, (1) because it considerably lowers the efficiency of astrology as a praying profession, and (2) because it makes the astrologers careless and indifferent in their calculations and predictions, since they see no sufficient remuneration for very serious mental work. Astrology like Medicine is a practical science and must be useful all along.)

ஆகவே தகுந்த ஜோதிடர்களை நாடி நமக்கு தேவையானவற்றைத் தெரிந்து கொள்வதோடு, உரிய முறையில் அவர்களுக்கு நல்ல தக்ஷிணை கொடுப்பதும் அவசியமே!

***

tags- ஜோதிடர், அவசியமே!

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: