
WRITTEN BY BRHANNAYAKI SATHYANARAYANAN
Post No. 8779
Date uploaded in London – –5 OCTOBER 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ZOOM BROADCAST ON 5TH OCTOBER VIA FACEBOOK.COM/GNANAMAYAM
வணக்கம்.
ஞானமயம் வழங்கும் பங்களூர் செய்தி மடல்.
வழங்குவது பிரஹன்நாயகி சத்ய நாராயணன்.
தலைப்புச் செய்திகள்
சிருங்கேரியில் நடக்கவுள்ள நவராத்திரி விழாவை தொலைக்காட்சியில் காணலாம்.
வாழும் கலை நிறுவனத்திடமிருந்து நவராத்திரி அழைப்பு
புகழ்பெற்ற புண்ய ஸ்தலமான சிருங்கேரி பற்றி ஒரு சிறு அறிமுகம்
விரிவான செய்திகள் :-
கோலாகலமாக வருடந்தோறும் நடைபெறும் நவராத்திரி திருவிழா, இந்த ஆண்டும் ஸ்ரீ சிருங்கேரி சாரதா பீடத்தில் வழக்கம் போல நடைபெறும். கோவிட் நோய் பற்றிய கட்டுப்பாடுகளின் காரணமாக, குறிப்பிட்டவர்கள் மட்டுமே உரிய முறைப்படி உற்சவத்திற்கு அழைக்கப்படுவர். என்றாலும் கூட, ஆங்காங்கு இருக்கும் பக்தர்கள் தாங்கள் இருந்த இடத்திலிருந்தே இந்த உற்சவ நிகழ்ச்சிகளை ஸ்ரீசங்கரா தொலைக்காட்சியில் காணலாம். அன்பர்கள் இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, அன்னை சாரதா தேவியின் அருளுக்குப் பாத்திரமாகுமாறு, கேட்டுக் கொள்கிறோம்.
அடுத்து, ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களால் நிறுவப்பட்டு, பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் நிறுவனமான வாழும் கலை – The Art of Living – நிறுவனம், அனைவருக்கும் விடுத்துள்ள நவராத்ரி அழைப்பு இது:-This Navratri, let’s strengthen our collective resolve for peace and health across the world. The festival marks the time to go inwards, pray, chant, be grateful, and hopeful. Stay safe, in hope, and optimism. Stay in resolve.
அக்டோபர் 16ஆம் தேதி அன்று முதல் The Art of Living துவங்கும் பல நிகழ்ச்சிகளில் நிகழ்நிலையில் அதாவது ONLINE-இல் அனைவரும் கலந்து கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு live.artofliving.org என்ற இணையதளத்தை அணுகலாம்.

நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பது பங்களூர் செய்தி மடல்
அடுத்து திவ்ய ஸ்தலமான சிருங்கேரி பற்றி ஒரு சிறு அறிமுகம்.
தொன்றுதொட்டு இருந்துவரும் ஹிந்து தர்மத்திற்கு புத்துயிர் கொடுக்க அவதரித்த ஆதி சங்கரர், பூர்வ மீமாம்ஸகர்களின் கொள்கையை வலியுறுத்திய குமாரில பட்டரின் சீடரான மண்டனமிஸ்ரரை, வாதத்திற்கு அழைத்தார். வாதப் போரைத் தொடங்கிய போது அந்த வாதுப் போருக்கு நீதிபதியாக இருந்தவர் மண்டனமிஸ்ரரின் மனைவி உபயபாரதி. இருவர் கழுத்திலும் மாலையை அணிவித்துக் கொள்ளச் சொன்ன உபயபாரதி, வாதத்தில் யார் கழுத்தில் உள்ள மாலை வாடுகிறதோ அவரே தோற்றவர், என்று அறிவித்தார். பதினேழு நாட்கள் நடந்த வாதத்தில், மண்டனமிஸ்ரரின் கழுத்தில் இருந்த மாலை வாடியது. சங்கரர் வெற்றி பெற்றார்.
பின்னர் உபயபாரதியுடனும் வாதம் செய்து, அவரையும் வென்றார் சங்கரர்.
போட்டி விதியின் படி மண்டனமிஸ்ரர் துறவு மேற்கொண்டார். அவருக்கு சுரேஸ்வரர் என்ற சந்யாச நாமம் அளிக்கப்பட்டது.
தனது சீடர்களுடன் தெற்கு நோக்கி வந்த சங்கரர் சிருங்க கிரியை வந்தடைந்தார்.
சிருங்க கிரி, மஹரிஷி ரிஷ்ய சிருங்கர் தவம் புரிந்த புண்ய ஸ்தலமாகும். பவித்ரமான துங்கா நதிக்கரையில் அமைந்துள்ள சிருங்க கிரியின் அற்புதமான இயற்கை வனப்பில் மூழ்கினார் சங்கரர்.
அவர் அங்கு ஓரிடத்தில் ஒரு அரிய காட்சியைக் கண்டு பிரமித்தார்.

கர்ப்பமுற்ற தவளை ஒன்று வெயிலின் கொடுமை தாங்காமல் தவிக்க, நல்ல பாம்பு ஒன்று இரக்கம் கொண்டு அதன் மீது படம் எடுத்து நிழல் கொடுத்துக் கொண்டிருந்தது. இதுவே தவம் செய்ய சிறந்த இடம் என நிர்ணயித்த சங்கரர் அங்கே ஸ்ரீ சக்ரத்தை ஸ்தாபித்து சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடத்தை நிறுவினார். அந்த பீடத்திற்கு சுரேஸ்வரரை முதல் ஆசாரியராகச் செய்து வேத பிரசாரம் செய்யுமாறு ஆணையிட்டார். அதிலிருந்து அந்த ஆசாரிய பரம்பரை, தொடர் சங்கிலியாக இருந்து வருகிறது. 34வது பீடாதிபதியாக இருந்து அருள் புரிந்த ஸ்ரீ சந்திரசேகர பாரதி அவர்களின் சரித்திரம் அற்புதமான ஒன்று. அவரைத் தொடர்ந்து 35வது பீடாதிபதியாக ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்தர் வீற்றிருந்து அருள் பாலித்தார். இப்போது 36வது பீடாதிபதியாக அருளாட்சி புரியும் ஸ்ரீ பாரதி தீர்த்தர் பல்மொழி வல்லுநர். அவரது பெருமையும் புகழும் உலகெங்கும் பரவியுள்ளதை அனைவரும் அறிவர். சிருங்கேரி மடத்தின் உள்ளே இருக்கும் ஸ்ரீ சாரதை, சங்கர பகவத்பாதர், வித்யா சங்கரர், ஜனார்த்தனர், சக்தி கணபதி, வாகீஸ்வரி, ராமர் உள்ளிட்ட ஏராளமான கோவில்களை தரிசித்து அன்பர்கள் பக்தி பரவசம் அடைகின்றனர். சிருங்கேரி, கர்நாடகத்தில் சிக்மகளூர் மாவட்டத்தில் உள்ளது. பங்களூரிலிருந்து சிருங்கேரி சுமார் 258 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இதிலிருந்து 83 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஸ்தலம் உடுப்பியாகும். மக்கள் தொன்று தொட்டு பயபக்தியுடன் வணங்கி வரும் அன்னை ஸ்ரீ சாரதா தேவி அனைவருக்கும் சர்வ மங்களத்தை தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.
இதுவரை நீங்கள் கேட்டது பங்களூர் செய்தி மடல்.
வழங்கியது ப்ரஹன் நாயகி சத்யநாராயணன்.
நன்றி!
tags- சிருங்கேரி