
WRITTEN BY LONDON SWAMINATHAN (News Editor, Gnanamayam)
Post No. 8778
Date uploaded in London – –5 OCTOBER 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
அக்டோபர் ஐந்தாம் தேதி திங்கட்கிழமை — இந்து சமய செய்தி மடல் —
இது ‘ஆகாச த்வனி’யின் உலக இந்து சமய செய்தி மடல்
நேயர்கள் அனைவருக்கும் வணக்கம், நமஸ்காரம்
செய்திகள் வாசிப்பது VAISHNAVI ANAND
எங்கள் நிகழ்ச்சிகளை திங்கட்கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல் 2 மணிக்கும்,
இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் நேரடியாகக் கேட்கலாம்.
உலக இந்து சமய செய்தித் தொகுப்புடன் நேயர்களின் கேள்விகளுக்கும் விடைகளும் அளிக்கப்படுகிறது
உங்கள் பேட்டை, நகரத்தில் நடைபெறும் விழாக்கள், உற்சவங்கள் பற்றி எங்களுக்கு செய்தி அனுப்புங்கள்
எங்களை எந்நேரமும் தொடர்பு கொள்ள Facebook.com / Gnana mayam முகவரியில் அணுகவும்
XXXX
உலகெங்கிலும் வாழும் இந்துக்கள் ‘நவராத்ரி’ விழாவை அக்டோபர் 17ம் தேதி துவங்கு கின்றனர். கோவில்களும் இந்துக்களும் இந்த உற்சவத்தை கொண்டாட தயாராகி வருகின்றனர். இந்த விழாவின் முடிவில் மைசூரில் தசரா விழாவும், மேற்கு வங்கத்தில் துர்கா பூஜையும், தில்லியில் ராம்லீலா உற்சவமும் நடைபெறும் .
தென்னிந்தியாவில் , குறிப்பாக தமிழ் நாட்டில், கோவில்களிலும் வீடுகளிலும் கொலு பொம்மைக் காட்சியும் , தேவியரின் அலங்காரமும் நடைபெறும் ; ஆனால் இந்த ஆண்டு மக்கள், சீன வைரஸ் தாக்குதல் அச்சத்தால் கட்டுத்திட்டங்களுடன் இதைக் கொண்டாடுவர்.
இதற்கிடையில்
மேற்கு வங்க மாநிலத்திலிருந்து இந்துக்களை மகிழ்விக்கும் செய்தி வெளியாகியுள்ளது ………………………..
துர்கா பூஜையை பேட்டைதோறும், ஊர்தோறும், நடத்தும் 37,000 அமைப்பாளர்களுக்கு ஒவ்வொருவருக்கும் 50,000 ரூபாய் தரப்படும் என்று மேற்கு வாங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். திருவிழாக் காலத்தில் தெருவில் கடைவிரிக்கும் நடைபாதை வண்டிக்காரர்களுக்கு ஒவ்வொருவருக்கும் 2000 ரூபாய் மான்யமும் அறிவித்து இருக்கிறார்.
இரண்டு வாரங்களுக்கு முன்னர் , மம்தா பானர்ஜி, இந்து சமய புரோகிதர்களுக்கும் மாத ஊதியம் 1000 ரூபாயும் வீட்டு வசதி வாய்ப்புகளையும் அறிவித்தார். இதனால் 8000 புரோகிதர்கள் பயன் அடைவர்.
இதைக் கடுமையாக விமர்சித்த பாரதிய ஜனதா தலைவர்கள், இது கடைத் தேங்கயாயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைக்கும் செயல் போன்றது ; மக்கள் வரிப்பணத்தை இப்படி வாரி வழங்குகிறாரே என்று குறைகூறினர் .
Xxxx
அடுத்ததாக ஆந்திர மாநில செய்தி
ஆந்திர மாநிலத்தில்,, சித்தூர் அருகில், மேலும் ஒரு சிவன் கோவிலை விஷமிகள் தாக்கியுள்ளனர்.
அபய மங்கலம் என்னும் ஊரில் அபய ஆஞ்சனேயர் கோவில் இருக்கிறது ;
கோவிலிலுள்ள நந்தி சிலையைக் கோவிலுக்குப் பின்னால் கொண்டு சென்று உடைத்திருக்கினர்.
இதன் கீழ் தங்கம் இருக்கும் என்ற வதந்தி பரவியவுடன் பேராசைகொண்ட கும்பல் இதைச்
செய்ததாக போலீஸ் அதிகாரி கூறினார். விஷமிகளைக் கண்டுபிடிக்க உயர் போலீஸ் அதிகாரிகள் கீழே 3 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
Xxxxx

நேயர்கள் கேட்டுக்கொண்டிருப்பது திங்கட் கிழமை தோறும் லண்டனிலிருந்து ஒலிபரப்பாகும்
ஆகாசத் த்வனியின்
உலக இந்து சமய செய்தி மடல்
XXX
28 ஆண்டுகாலமாக நாட்டை உலுக்கி வந்த பாபர் மசூதி இடிப்பு வழக்கில் , சிபிஐ கோர்ட் தீர்ப்பு வாங்கியது உங்களுக்குத் தெரியும், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 32 பேரையும் கோர்ட் நிரபராதிகள் என்று சொல்லி விடுதலை. குரற்றம் சாட்டப்பட்டவர்களில் பாரதீய ஜனதா தலைவர் லால் கிருஷ்ண அத்வானி , முரளிமனோகர் ஜோஷி ஆகியோர் பெயர்களும் இருந்தன. இப்பொழுது கோர்ட் , இவர்களை விடுதலை செய்துவிட்டதால் இனி ஏச்சுப் பேச்சுக்கு இடமிராது.
இது சனாதன தர்மத்தின் வெற்றி என்று விசாகப்பட்டின சாரதா பீடத் தலைவர் ஸ்ரீ ஸ்வரூபானேந்திர சரஸ்வதி அறிக்கை வெளியிட்டார்.
Xxxx
யூ கே சங்கீத் சங்கம் என்ற அமைப்பு பேஸ்புக் மூலமாக இசையையும் நாட்டியத்தையும் ஊக்குவித்தும் பரப்பியும் வருகிறது. புரட்டாசி மாதத்தில் இறைவன்- இறைவியின் கல்யாண உற்சவங்களை நடத்துவது சர்வ மங்களத்தையும் தரவல்லது . இதை முன்னிட்டு அக்டோபர்
பத்தாம் தேதி சனிக்கிழமையன்று
ஸ்ரீனிவாச கல்யாணம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சம்பிரதாய பஜனை பத்ததியைப் பரப்புவதில் முன்னிலையில் நிற்கும் புகழ்பெற்ற டாக்டர் உடையாளூர் கல்யாணராமன் இந்த ஸ்ரீனிவாஸ கல்யாண உற்சவத்தை நடத்துகிறார். அவருடன் புகழ்பெற்ற பக்கவாத்யக்காரர்களும் இடம்பெறுவர். இதை பேஸ்புக்கில் கண்டு களித்து சகல செளபாக்கியத்தையம் அடைய விரும்புவோர் யூகே சங்கித் சங்கத்தை பேஸ்புக் மூலம் அணுகலாம்.
xxx
இறுதியாக தமிழகத்தை துயரத்தில் ஆழ்த்திய இரண்டு செய்திகள்
இந்து முன்னணியின் ஸ்தாபகரும், ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் பிரசாரக் பொறுப்பு வகித்தவருமான திரு ராம கோபாலன் இறைவனடி சேர்ந்தார். 70 ஆண்டுக்காலத்திற்கு பொதுப்பணி செய்துவந்த ராம கோபாலனை தமிழ் மக்கள் அன்போடு வீரத்துறவி என்று அழைத்துவந்தனர் . அவர் சென்னையில் 94-வது வயதில் வைரஸ் நோய் தாக்குதலால் உயிர்நீ த்தார் . சட்டநாதபுரத்தில் பிறந்த கோபால்ஜி பிரம்மச்சாரி. அவரது உடல் உறையூர் அருகிலுள்ள சீராத்தோப்பில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அவர் காயத்ரீ உபாசகர் என்பதையும் முந்தைய சங்கராசார்யார்களின் பரிபூரண ஆசியைப்பெற்றவர் என்றும் காஞ்சி சங்கராசார்யார் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி அவர்கள் இரங்கல் செய்தி அனுப்பியுள்ளார்.ஏனைய அரசியல் தலைவர்களும் அனுதாபச் செய்தி அனுப்பியுள்ளனர்
கோபால்ஜி, கனல் கக்கும் உணர்ச்சியூட்டும், சொற்பொழிவாளர். எழுத்தாளர், சிறந்த நிர்வாகி. தேச பக்தப் பாடல்களை இயற்றிப் பாடியவர். பல்லாயிரம் தமிழ் மக்களை ஆர்.எஸ். எஸ் பணியில் ஈடுபடுத்தியவர் என்பது குறிப்பிட்டது தக்கது.
xxx
இதே போல மற்றொறு வருந்தத்தக்க செய்தி அம்புலிமாமா- சந்தமாமா என்று அழைக்கப்படும் சிறுவர் பத்திரிக்கைக்கு வண்ண ஓவியங்கள் வரைந்த சங்கர் 97–வது வயதில் சென்னையில் இறந்த செய்தி ஆகும்.
வேதாளமும் விக்கிரமாதித்தனும் கதைகளுக்கு அவர் வரைந்த ஓவியம், குறிப்பாக விக்ரமன் வேதாளத்தை தோளில் சுமந்து செல்லும் காட்சி முதலியன மக்களின் மனதைவிட்டு அகலாது.
ஈரோடு மாவட்டத்தில் பிறந்த சங்கர்,
அம்புலிமாமா தவிர, ராமகிருஷ்ண விஜயம் என்னும் ஆன்மிகப் பத்திரிகைக்கும் அற்புத ஓவியங்களை வரைந்து கொடுத்தார்.
ராமகோபாலன், சங்கர் ஆகியோர் மறைவுக்கு ஞான மயம் குழுவும் அனுதாபத்தைத் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளது
இத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன…………………………..
செய்திகளை உங்களுக்கு வழங்கியவர் வைஷ்ணவி ஆனந்த்…………………………
நன்றி, வணக்கம்
……………….
அடுத்ததாக நமது கர்நாடக மாநில சிறப்பு நிருபர்
பிரஹன்நாயகி சத்ய நாராயணன், பங்களூர் நகரிலிருந்து செய்தி வழங்குகிறார்
xxxxxx
tags – 5-10-2020 ,இந்து சமய , செய்தி மடல்
Thila D
/ October 12, 2020அசைவம் சாப்பிடுவது நல்லது அல்ல என்பது ஏற்புடையது…இதை பற்றிய உங்கள்
கட்டுரை ஏதேனும் வெளியிடவும். ஐயா