மதிப்பெண்ணும், மதிக்காத பெண்ணும்! ஞான மொழிகள் – 1 (8796)

COMPILED BY KATTUKKUTY

Post No. 8796

Date uploaded in London – – 10 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

நவீன ஞான மொழிகள் – 1

தொகுப்பு : kattukutty

கடந்த 50 ஆண்டு காலமாக சேர்த்து வந்த நூற்றுக் கணக்கான ஜோக்ஸ் புத்தகங்கள்,

மற்றும் பத்திரிகைகளில் நான் படித்து ரசித்ததில் சிறந்தவற்றைத் தேர்ந்தெடுத்து வழங்கும் தொகுப்பு இது:

நம்பிக்கைக்கும் மூட நம்பிக்கைக்கும் உள்ள வித்தியாசம் என்ன???

குழந்தை நன்றாக படித்து முன்னேற வேண்டும் என்பது நம்பிக்கை

படித்து முன்னறிய குழந்தை தன்னைக் காப்பாற்றுவான் என்பது

மூட நம்பிக்கை !!!

****

கிராமத்து ஜனங்களுக்கும் நகரத்து ஜனங்களுக்கும் என்ன

வித்தியாசம்???

கிராமத்து ஜனங்க குடிச்சுட்டு வந்து அடிப்பாங்க……

நகரத்து ஜனங்க குடிச்சுட்டு வந்து அடி வாங்குவாங்க……

****

பொண்ணுங்களுக்கு பொறந்த வீடு புகுந்த வீடுன்னு இருக்கிற போது

ஆண்களுக்கு ஏன் சின்னவீடு, பெரியவீடுன்னு இருக்கக் கூடாது???

****

லைட்டப் போட்டுட்டு வண்டிய ஓட்டு……

லைட்டாப் போட்டுட்டு வண்டிய ஓட்டாதே !!!

***

சூரியனைச் சுத்தி வந்தா வெந்து போவீர்கள்……

சுடிதாரை சுத்தி வந்தா நொந்து போவீர்கள்…….

****

ஓவ்வொரு இளைஞனின் மன உளைச்சலுக்கும் காரணம்?

மதிப்பெண்ணும்……

மதிக்காத பெண்ணும்!!!

****

வசதி இல்லாதவன் ஆடு மேய்க்கிறான்!!!

வசதி உள்ளவன் நாய் மேய்க்கிறான்!!!

***

ஆண்களை அதிக தூரம் நடக்க வைக்கும் விஷயங்கள் ரெண்டு?

ஒன்று பிகர், மற்றொன்று சுகர் !!!

***

The first apologize is the “BRAVEST” !!!

The first forgive is the “STRONGEST” !!!

The first to forget is the “HAPPIEST” !!!

****

Having wife is the part of living…….

Living with wife is the art of living !!!

****

நாம சாமிக்கு அடிச்சது மொட்டை

சாமி நமக்கு அடிச்சது சொட்டை!!!

****

காதலியுடன் சண்டை – தீவிர வாதம்

மனைவியுடன் சண்டை – மித வாதம்

சின்ன வீட்டோட சண்டைபயங்கர வாதம்

***

ஒண்ண நல்லா கவனிச்சீங்களா ???

Feb -14 th காதலர் தினம்

Nov – 14th குழந்தைகள் தினம்

என்ன புரியுதா ????

****

என்னதான் சென்டிமென்ட் பார்த்தாலும் கப்பல் கிளம்பும்போது

பூசணிக்காய் எலுமிச்சம் பழம் வச்சு நசுக்கினாலும்

சங்கு ஊதிட்டுதான் கிளம்பும் !!!

****

டாப்பப் பண்ணி கால் பண்ணும் நண்பனை நம்பு……..

மேக்கப் போட்டு மிஸ்ஸுடு கால் தரும் பெண்ணை நம்பாதே!!!!

****

ஜட்டியைப் போட்டு பேண்டைப் போட்டால் ஜென்டில் மேன்

பேண்டைப் போட்டு ஜட்டியைப் போட்டால் சூப்பர் மேன் !!!

XXXX

ஒரு பொண்ணு ஒரு பையனை திரும்பி பார்த்துட்டா

பையனோட தூக்கம் போச்சு……

பையங்க ஒரு பொண்ண திரும்பி பார்கல்லைன்னா

பொண்ணோட தூக்கம் போச்சு…….

****

கணிப் பொறிக்கும் எலிப் பொறிக்கும் என்ன வித்தியாசம்???

கணிப் பொறியில் எலி வெளியே இருக்கும்

எலிப் பொறியில் மவுஸ் உள்ளே இருக்கும்………

****

காதலித்துப் பார்……..திங்கட்கிழமை சொர்க்கமாகத் தெரியும்.

கல்யாணம் பண்ணிப் பார் ….. ஞாயிற்றுக்கழமையும்

நரகமாகத் தெரியும்…….

****

டாக்டருக்கும் ஆக்டருக்கும் உள்ள ஒற்றுமை என்ன???

இரண்டு பேரும் தியேட்டருக்கு வரவழைச்சு தான் கொல்லுவாங்க!!!

****

முயலும் வெல்லும், ஆமையும் வெல்லும்

முயாலாமை என்றுமே வெல்லாது!!!

****

குத்துனவன் நண்பனாக இருந்தால் செத்தாக்கூட

சொல்லக் கூடாது…….அதுதான்டா நட்பு !!!

குத்துனவன் எதிரியா இருந்தா செத்த பிறகு

சொல்ல முடியாதுடா மண்டு…….

****

Everything is easy when you are busy

Nothing is easy when you are lazy………..

****

சிவகாசிக்கும் நெய்வேலிக்கும் என்ன வித்தியாசம்????

சிவகாசில காச கரியாக்குவாங்க …..

நெய்வேலிலே கரிய காசாக்குவாங்க !!!

****

தண்ணிலே கப்பல் போனா ஜாலி,

கப்பல்ல தண்ணி போனா காலி……….

*****

சவுத் இண்டியாவுல நார்த்தங்கா கிடைக்கும் அப்ப

நார்த் இண்டியாவில சவுத்தங்கா கிடைக்குமா????

****

காக்கா கா, கா, ன்னு கத்துனதால “காக்கா”

மாடு மா, மா, ன்னு கத்துனதால “மாமாவா”

****

FILE க்கும் PILE க்கும் என்ன வித்தியாசம் ???

FILE ல உட்கார்ந்து பார்க்கணும் …..

PILE க்கு பார்த்து உட்காரணும்…….

****

நீங்க என்னதான் புத்திசாலி ஆனாலும் பல் விளக்கும்போது

இளிச்சவாயன்தான்!!!!

*****

செல்போனுக்கும் மனிதனுக்கும் என்ன வித்தியாசம்????

மனிதனுக்கு கால் இல்லேன்னா பேலனஸ் பண்ண முடியாது.

செல் போன்ல பேலன்ஸ் இல்லேன்னா கால் பண்ண முடியாது.

               ***                 தொடரும்   

TAGS–  ஞான மொழிகள் – 1

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: