
Post No. 8806
Date uploaded in London – – 13 OCTOBER 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
12-10-2020 அன்று லண்டனிலிருந்து ஒளிபரப்பட்ட ஞானமயம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பான உரை.
ஒவ்வொரு திங்களன்றும் இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு ஞானமயம் நிகழ்ச்சியை
facebook.com/gnanamayam-இல் பார்க்கலாம்.
சித்த மருத்துவமும் அதன் சீரும் சிறப்பும்
by Kattukutty
உலக வரலாற்றில் மிக மிக தொன்மை வாய்ந்தது மருத்துவக்கலை.
ஆதி மனிதன் தனக்கு ஏற்பட்ட நோய்களுக்கும், காயங்களுக்கும்
உடல் உபாதைகளுக்கும், இலை, தழை, மரம், பூ, காய், பழம், வேர்
முதலியவற்றைக் கொண்டு தன்னைத்தானே குணப்படுத்திக்கொள்ளும்
வழி முறைகளைக் கண்டுபிடித்தான்.
இதைத்தான் மருத்துவ விஞ்ஞானம் என்கிறோம்.

மருத்துவம் என்றால் என்ன ???
உயிரினங்கள் நோய்வயப்படும் போதும் உடலை இயக்க முடியாமல்
இருக்கும் பொழுதும் அந்நிலையைக் கண்டுபிடிப்பதும் அதைக்
குணப்படுத்துவதும் மீண்டும் வராமல் செய்தலும் ஆகும்.
மருத்துவத்தின் பல முறைகள்
அல்லோபதி, சித்த மருத்துவம், ஆயுர் வேதம், ஹோமியோபதி, யுனானி,
அக்குபஞ்சர்,யோகா, இயற்கை மருத்துவம், மலர் மருத்துவம்,உயிர்
வேதியல் மருத்துவம், காந்த சிகித்சை, வண்ண மருத்துவம், இசை
மருத்துவம், ஜப்பானிய காம்போ மருத்துவம், பண்டைய சீன
மருத்துவம்……. மற்றும் பல……..
சித்த மருத்துவம்
உலக மருத்துவ வரலாற்றில் மிக மிக தொன்மை வாய்ந்தது சித்த
மருத்துவம். முதலில் சித்தர்கள் யார் என்று பார்ப்போம்
“சித்” என்றாலே அறிவு என்று அர்த்தம். சித்தர்கள் தன் அறிவினாலும்
அனுபவ முறைகளினாலும் பட்டறிவினாலும் கண்ட மருத்துவ முறைகளைப்
பயன்படுத்தி அஷ்டமாசித்திகளையும் பெற்று தனது
தவ வலிமையினால் சாகா வரம் பெற்றவர்கள்.
சித்தர்கள் கண்ட உண்மை
ஆன்மீக உலகம் இவ்வுடலை “பொய் “என்று கூறும் பொழுது இவ்வடலை
“மெய்”என்று கூறியவர்கள் சித்தர்கள்!!! மற்ற எல்லா
மருத்துவ முறைகளிலிலும் மனிதனுக்கு” மரணம்”உண்டு என்று
கூறும்போது சித்தர்கள் “மரணமில்லாப் பெருவாழ்வு” வாழலாம் எனக்
கூறி வாழ்ந்தார்கள், இன்றும் வாழ்கிறார்கள்!!!
வேதியல், மற்றும் பவுதிக முறைகளில் பொருள்களைப் பகுத்தறிந்து
இவ்வுலகில் முதன்முதலில் பயன் படுத்தியவர்கள் தமிழ் சித்தர்களைத்
தவிர வேறு யாருமில்லை!!! தமிழ் நாட்டில் தொன்று தொட்டு மரபு
வழியாக அவர்களால் செய்யப்பட்டு வரும் மருத்துவமே சித்த மருத்துவம் ஆகும்.
சித்தர்களின் கண்டுபிடிப்பு
மனித உடல் 18 குணங்களைக் கொண்டது. அந்த குணங்களின்
செயல்களால் வாழ்க்கை நடக்கிறது. அவைகள் :
வியப்பு, இன்பம், உவகை, உறக்கம், கேதம், கையறவு, நரை, நினைப்பு,
நீர்வேட்கை, நோய், பசி, அச்சம், பிறப்பு, மதம், வியர்வை, வெகுளி,
வேண்டல், மரணம்.
மனித உடல் பஞ்ச பூதங்களினால் ஆனது. நீர், நிலம், நெருப்பு, காற்று,
ஆகாயம் – இந்த ஐம்பூதங்களின் பிரதிபலிப்பே இந்த உடல்…….

நோய்களுக்கான காரணங்கள்
மனித உடலில் தோன்றும் நோய்களுக்கான காரணம்,
மனித உடலில் உள்ள வாதம், பித்தம், கபம், ஆகியவற்றின் வேறுபாடுகளே
காரணம்.
சித்த முறைப்படி ஒரு ஆரோக்கியமான உடலில் உள்ள நாடித்துடிப்பு
வாத நாடி – 1 மாத்திரை அளவும்,
பித்த நாடி – 1/2 மாத்திரை அளவும்,
கப நாடி. – 1/4 மாத்திரை அளவும், துடிக்க வேண்டும்.
இவற்றில் மாறுபாடு உண்டானால் வியாதி எனத் தெரியும்.
மேலும் இந்த வாத, பித்த, கப, நாடிகள் காலை, மதியம், மாலை
என்ற மூன்று வேளைகளுக்கும் மாறும்.
இதைத்தான் வள்ளுவரும்,
“மிகினும் குறையினும் நோய் செய்யும் நூலோர்
வளி முதலாகிய மூன்று” என்று கூறியுள்ளார்.
இதை முக்குற்றம் எனக் கூறுவார்கள். சித்த வைத்தியர்கள் நாடி பார்த்து
இக்குற்றங்களின் வேறுபாடுகளை களைய மருந்துகள்
அளிப்பார்கள். அக்குற்றங்கள் அதிகமானால், அல்லது குறைந்தால்
என்னன்ன விளைவுகள் உடலில் ஏற்படும் என்பதைக் காணலாம்.

to be continued…………………………………….
tags–சித்த மருத்துவம் , சீரும் சிறப்பும் ,