
WRITTEN BY LONDON SWAMINATHAN (NEWS EDITOR, GNANAMAYAM)
Post No. 8809 -B
Date uploaded in London – –14 OCTOBER 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
This is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
அக்டோபர் 12-ம் தேதி — திங்கட் கிழமை
உலக இந்து சமய செய்தி மடல்
தொகுத்து வழங்குபவர் வைஷ்ணவி ஆனந்த்
இது ‘ஆகாச த்வனி’ யின் உலக இந்து சமய செய்தி மடல் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்,
நமஸ்காரம் செய்திகள் வாசிப்பது VAISHNAVI ANAND

எங்கள் நிகழ்ச்சிகளை திங்கட்கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல் 2 மணிக்கும், இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் நேரடியாகக் கேட்கலாம். உலக இந்து சமய செய்தித் தொகுப்புடன் நேயர்களின் கேள்விகளுக்கும் விடைகளும் அளிக்கப்படுகிறது.
உங்கள் பேட்டை, நகரத்தில் நடைபெறும் விழாக்கள், உற்சவங்கள் பற்றி எங்களுக்கு செய்தி அனுப்புங்கள்.
எங்களை எந்நேரமும் தொடர்பு கொள்ள Facebook.com / Gnana mayam முகவரியில் அணுகவும்
XXXX
நேற்று முன் தினம் கடைசி புரட்டாசி சனிக்கிழமையானதால் தென் மாநிலங்கள் அனைத்திலும் பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் பெருகியது.
இதோ தமிழ்நாட்டுச் செய்திகள்…………..
ஸ்ரீபெரும்புதூரை அடுத்த மாகாண்யம் கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீகல்யாண சீ னிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையை ஒட்டி ஸ்ரீகல்யாண சீனிவாச பெருமாளுக்கு அன்னக்கூட உற்சவமும் அகண்ட தீபமும் ஏற்றப்பட்டு கூட்டுப் பிராா்த்தனை நடைபெற்றது. இதில் புரட்டாசி மாதம் மாலை அணிந்து விரதம் இருந்த பக்தா்கள் அகண்ட தீபம் ஏற்றி வழிபாடு நடத்தினா்.
அழகா்கோவில், திருமோகூா், யானைமலை பகுதிகளிலுள்ள பெருமாள் கோயில்களில் ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனா்.
தரிசனத்தின்போது பக்தா்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றினா்.
திருமோகூா் காளமேகப்பெருமாள் கோயில் சுதா்ஸன சக்கரத்தாழ்வாா் சன்னிதியில் பக்தா்கள் கூட்டம் அதிகம் இருந்தது. யானைமலை யோக நரசிம்மா் கோயிலிலும் பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று பெருமாளைத் தரிசித்தனா்.
டி.கல்லுப்பட்டி அருகே ஸ்ரீ வீரபக்த ஆஞ்சநேயா் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
நல்லமரம் கொட்டாணிபட்டியில் ஸ்ரீ வீர பக்த ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு உலக நன்மை வேண்டியும், மழை வேண்டியும் சிறப்பு பிராா்த்தனைகள் நடைபெற்றன. பன்னீா், பழம், விபூதி உள்ளிட்ட 18 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன. தொடா்ந்து செந்தூரக் காப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேயா், பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.
Xxxxxx
உத்தரப் பிரதேச மாநிலச் செய்திகள்…………..
அயோத்தியில் ராமர் கோயிலுக்கான பூமி பூஜை முடிந்தபின் இதுவரை ரூ.100 கோடிக்கும் அதிகமாக நன்கொடை குவிந்துள்ளதாக ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக மத்திய அரசு அந்த அறக்கட்டளையை உருவாக்கியது. அந்த அறக்கட்டளை ராமர் கோயில் கட்டுவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி நடைபெற்ற பூமி பூஜையில் பிரதமர் மோடி பங்கேற்று, கோயிலுக்கான அடிக்கல்லை நாட்டினார்.
, பூமி பூஜைக்குப் பின் கடந்த இரு மாதங்களில் மட்டும் கோயிலுக்கு ரூ.100 கோடிக்கும் அதிகமாக நன்கொடை குவிந்துள்ளதாக ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை நிர்வாகம் தெரிவித்துள்ளது.. ஏராளமான வெளிநாட்டு கரன்ஸிகளும் வந்துள்ளன. இதேபோல 200 கிலோவுக்கும் அதிகமான வெள்ளி மற்றும் விலை மதிப்புள்ள பல்வேறு பொருட்களும் நன்கொடையாக பக்தர்கள் வழங்கியுள்ளனர்.
இதற்கிடையில் ராமேஸ்வரத்தில் செப்டம்பர் 17ம் தேதி புறப்பட்ட ராம ரத யாத்திரை அயோத்தி நகரை அடைந்துவிட்டது. 11 மாநிலங்கள் வழியாக 4500 கிலோமீட்டர் கடந்து சென்ற இந்த யாத்திரை ஸ்ரீ ராமபிரானின் கால்நடைப் பயணத்தை நினைவு கூர்ந்தது . அது மட்டுமல்ல. நான்கு அடி உயரமுள்ள, ஜெய் ஸ்ரீ ராம் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட, 613 கிலோ எடையுள்ள மணியையும் ரத யாத்திரைக்காரர்கள் கொண்டு சென்றனர் . அயோத்தி மாநகரத்தில் ராம பிரான் கோவிலில் கட்டப்படும் இந்தக் கோவிலின் மணி ஓசையை பத்து கிலோ மீட்டர் தொலைவு வரை கேட்கலாம் என்று ரதத்தை ஒட்டிச் சென்ற ராஜ லட்சுமி கூறினார்
xxxxxx
இனி கேரள மாநில செய்திகள்
கேரள மாநிலத் தலைநகரான திருவனந்தபுரத்தில் புகழ்பெற்ற பத்மநாப சுவாமி கோவில் இருக்கிறது. அங்கு கோவில் ஊழியர், அர்ச்சகர் பலருக்கு வைரஸ் தொற்று நோய் ஏற்பட்டதால் கோவிலை சில நாட்களுக்கு மூட அதிகாரிகள் முடிவு செய்தனர். இதன்படி அக்டோபர் 15ம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி இல்லை . ஆயினும் கோவிலுக்குள் வழக்கமான பூஜைகளை தந்திரிகள் நடத்தி வருகின்றனர்.
கேரளத்திலுள்ள மற்றோரு முக்கியக் கோவில் குருவாயூரிலுள்ள ஸ்ரீ கிருஷ்ணன் கோவில் ஆகும். அங்கு ஒரு நாளைக்கு ஆயிரம் பேர் அனுமதிக்கப்பட்டபோதும் 500 பேர் மட்டுமே வருகின்றனர். வெளியூர் பக்தர்கள் வருகை தடைப்பட்டு விட்டது. பருவ மழையும், போக்குவரத்துக்கு கட்டுப்பாடுகளும் இதற்கான காரணங்கள் என்று தேவஸ்வம் அதிகாரி மோகன்தாஸ் தெரிவித்தார். முகூர்த்த நாட்களில் ஒவ்வொரு நாளும் 100 கல்யாணங்கள் கோவிலுக்குள் நடைபெறுவது வழக்கம். ஆனால் இப்போது விரல்விட்டு எண்ணக்கூடிய திருமணங்கள் மட்டுமே நடைபெறுகின்றன.
xxxx
இனி ஆந்திர மாநிலச் செய்திகள்
ஆந்திர மாநிலத்தில் மீண்டும் ஒரு சர்ச்சை புறப்பட்டுள்ளது. விஜயவாடா அருகிலுள்ள கனக துர்கா கோவிலில் ஆண்டு தோறும் பவானி தீட்சையை முடிக்கும் பக்தர்கள் லட்சக்கணக்கில் வருவார்கள். இவ்வாண்டு நவராத்ரி நாட்களில் ஒவ்வொரு நாளும் 10,000 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். இந்த நிலையில் கிறிஸ்தவ முதலமைச்சரான ஜெகன் மோகன் ரெட்டியை கோவில் நிர்வாகம் அழைத்துள்ளது . இதற்கு முன்னர் திருப்பதி பாலாஜி கோவிலும் அவரை அழைத்தபோது மனைவி இல்லாமல் அவர் மட்டும் வந்ததை இந்து சமயத் தலைவர்களும் அரசியல் தலைவர்களும் கண்டித்தனர். இந்த முறை என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.
இது ஒருபுறமிருக்க அந்தப் புகழ்மிகு கனக துர்கா கோவிலுக்கு, ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கத்தலைவர் மோகன் பகவத் விஜயம் செய்தார் . அவர்க்கு கோவில் நிர்வாகம் தக்க மரியாதையை செய்தார்கள்
Xxx
பிரிட்டனிலும் இந்துக்களுக்கு மனக்கசப்பு தரும் நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. GCSC (ஜி.சி எஸ் சி) பாடத்திட்டத்தில் இந்து மதம் பற்றிய படிப்பும் உள்ளது. இதில் இந்துக்களை பயங்கரவாதத்துடன் தொடர்பு படுத்தும் சில வரிகளுக்கு இந்துக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். “சில இந்துக்கள் பயங்கரவாதம் பக்கம் திரும்பியுள்ளனர்” என்ற வரி சிலபஸில் இருப்பது,
‘இல்லாத ஒன்றைக் காட்டுவதாகவும் இது ஏனைய மதத்தினருடன் ஒப்பிட்டு வாக்குவாதத்தை தூண்டுவதற்காகவும் பிற மத பயங்கரவாதிகளைப் பாதுகாக்க சேர்க்கப்பட்டதாகவும் இந்துக்கள் குற்றம் சாட்டினர் . இந்த வரிகளை எதிர்த்து எல்லோரும் குரல் எழுப்பவேண்டும் என்றும் A Q A (ஏ க்யூ ஏ ) அமைப்புக்கு ஈ மெயில் அனுப்பவேண்டும் என்றும் வினய் சர்மா என்பவர் சமூக ஊடகம் வழியாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
A Q A (ஏ க்யூ ஏ) என்பது அரசு சார்பற்ற கூ ட்டமைப்பு . இது பாட திட்டங்களையும் தகுதிச் சான்றிதழ்களையும் பள்ளிக்கூட மட்டத்தில் வழங்கி வருகிறது . இதில் இந்துக்கள் யாரும் உறுப்பினர் இல்லை; அவர்களை இதுவரை அனுமதிக்கவும் அவர்கள் மறுத்து வருகின்றனர் என்று இந்து மத கல்வி தொடர்பானோர் சுட்டிக்காட்டுகின்றனர்.
இத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன………………………….. செய்திகளை உங்களுக்கு வழங்கியவர் வைஷ்ணவி ஆனந்த்………………………… நன்றி, வணக்கம்

TAGS – ஆகாச த்வனி’, உலக இந்து சமய செய்தி மடல், 12-10-20