
Post No. 8813
Date uploaded in London – – –15 OCTOBER 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
இந்தியாவே, லெபனானிடமிருந்து பாடம் கற்பாயா?
ச.நாகராஜன்
சேஷன் ஐயர் 21-1-2020 City Today News இல் எழுதியுள்ள கட்டுரை இது.
இந்தியாவைக் காப்பாற்ற Citizenship (Amendment) Act (CAA), 2019, National Register of Citizens (NRC) – ஆகிய இந்த இரண்டும் தான் இந்தியாவின் கடைசிப் புகலிடம் என்பதை ஒவ்வொரு தேசபக்தியுள்ள இந்தியரும் நிச்சயமாகத் தெரிந்து கொள்ள வேண்டும்! ஏன்? இதோ படியுங்கள்:
லெபனான் – என்ன தப்பு நடக்கும் என்பதற்கு லெபனான் ஒரு சிறந்த உதாரணம்.
1970களில் லெபனான், சொர்க்கம் என்று அழைக்கப்பட்டது. அதன் தலை நகரமான பெய்ரூட், ‘கிழக்கு திசையின் பாரிஸ்’ என்று அழைக்கப்பட்டது.
லெபனானில் உள்ள கிறிஸ்தவர்கள் உலகின் பழமையான கிறிஸ்தவர்கள். இவர்களுக்கு முந்தைய கிறிஸ்தவர்களாக நாம் சொல்லக் கூடியது ‘தி ஓரியண்டல் ஆர்தோடாக்ஸ் ஆல் ஆர்மீனியா’ அண்ட் ‘காப்ட்ஸ் ஆஃப் ஈஜிப்ட்’ ஆகியோர் மட்டுமே. (The Oriental Orthodox of Armenia and Copts of Egypt)
லெபனான் முற்போக்கு, பொறுத்துப் போகும் தன்மை பல்பண்பாட்டுச் சமூகம் கொண்ட நாடு – இன்றைய இந்தியாவைப் போல என்று சொல்லலாம்.
மத்திய கிழக்கில் உள்ள மிகச் சிறந்த பல்கலைக் கழகங்களைக் கொண்டது லெபனான். அங்கு தான் அராபியா முழுவதிலிருந்தும் குழந்தைகள் வந்து படிக்கின்றனர். பின்னர் அங்கேயே இருந்து வேலை பார்க்கின்றனர்.
லெபனானின் வங்கிகள் உலகின் சிறந்த வங்கி அமைப்புகளைச் சேர்ந்தது.
எண்ணெய் வளம் இல்லை என்றாலும் கூட நல்ல ஒரு பொருளாதாரத்தைக் கொண்ட நாடு லெபனான்.

லெபனான் சமுதாயத்தின் முற்போக்குத்தன்மையை ஆயிரத்தி தொள்ளாயிரத்து அறுபதுகளில் வெளியான ஹிந்தி படமான ‘அன் ஈவினிங் இன் பாரிஸ்’ (An Evening in Paris) என்ற படத்தை வைத்து அளக்க முடியும். இன்னொரு விஷயம், இந்தப் படமும் லெபனானில் தான் படமாக்கப்பட்டது!
இப்போது ஒரு மோசமான கசப்பான உண்மையைப் பார்ப்போம்!
லெபனானில் உள்ள இஸ்லாமியரின் ஜனத்தொகை படிப்படியாக உயர்ந்து வந்தது. கிறிஸ்தவ குடும்பங்களை விட இஸ்லாமிய குடும்பங்கள் ஏராளமான குழந்தைகளைப் பெற்றுத் தள்ளின.
நல்ல கல்வி இல்லாமையால் அந்தக் குழந்தைகள் மெதுவாக பழமைவாதிகளாக ஆக்கப்பட்டனர்.
ஆயிரத்தி தொள்ளாயிரத்து எழுபதுகளில் ஜோர்டானில் ஒரு அமைதியின்மை உருவானது; தாராள மனப்பான்மை உள்ள லெபனான் பாலஸ்தீனிய அகதிகளை உள்ளே வரச் செய்தது – இதற்கான காரணம அங்குள்ள முஸ்லீம் தலைவர்கள் ‘உண்மையான இரக்கத்தைக்’ காண்பிக்கச் சொன்னதால்!
என்றபோதிலும் ஆயிரத்திதொள்ளாயிரத்து எண்பதில் லெபனானின் நிலைமை இன்றைய சிரியாவின் நிலைமைக்கு உள்ளானது.
‘அகதிகளாக’ உள்ளே நுழைந்த ஜிஹாதிகள் இனக் கலவரங்களைத் தூண்டி பழங்குடியினரான கிறிஸ்தவர்களைச் ‘சுத்தப்படுத்தும்’ வேலையில் இறங்கினர், எண்ணிக்கையில் அடங்காத சாவுகள் ஏற்பட்டன.
இந்த வன்முறைக்கு ஆளானவர்களைக் காப்பாற்ற யாரும் முன்வரவில்லை. லெபனானில் உள்ளவர்கள் அங்கிருந்து ஓடினர், ஓடினர், ஓடிக்கொண்டே இருந்தனர்!
இப்படிப்பட்ட சாவுகளினாலும், வெளியேற்றத்தாலும் லெபனானில் இருந்த கிறிஸ்தவர்களின் ஜனத்தொகை 1970இல் 60%ஆக இருந்தது, முப்பதே வருடங்களில் 30 % ஆக ஆனது.
இன்று, லெபனானிற்கு வெளியே வாழும் லெபனானியர்கள், சொந்த நாட்டிற்குத் திரும்ப உரிமை உள்ளவர்கள், முஸ்லீம் மெஜாரிட்டியினரால் சட்டப்படி தடுக்கப்பட்டுள்ளனர்.
கதவுகள் இறுக்க மூடப்பட்டு விட்டன!
இந்த துயரகரமான லெபனானின் கதை சமீப காலத்திய, முப்பதே வருடக் கதை தான்!

இந்தியா லெபனானின் வரலாறிடமிருந்து பாடம் கற்க வேண்டும்.
ரோஹிங்யா மதவாதிகளிடமிருந்தும், பங்க்ளா தேச ஊடுருவிகளிடமிருந்தும் இந்தியாவின் உள்ளிருக்கும் எதிரிகளிடமிருந்தும் பாதுகாத்துக் கொள்வதற்கான ஒரு அவசியம் இன்று ஏற்பட்டுள்ளது.
இந்த (தீய) சக்திகளை எதிர்த்து அனைவரும் ஒன்று சேர வேண்டும். இவற்றை ஆதரிக்கும் கட்சிகள், நிறுவனங்கள், அமைப்புகள், மக்கள், நடிக, நடிகையர், ஊடகங்கள், செய்தித் தாள்கள் ஆகியவற்றை ஒதுக்கி உதற வேண்டும்.
இந்த எதிரிகளிடமிருந்து இந்தியாவைக் காப்பாற்ற Citizenship (Amendment) Act (CAA), 2019, National Register of Citizens (NRC) – ஆகிய இந்த இரண்டும் தான் இந்தியாவின் கடைசிப் புகலிடம் என்பது இப்போது புரிகிறதா?
**
நன்றி : ட்ரூத் தொகுதி 88 இதழ் 8 28-8-2020 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை.
தமிழாக்கம் ச.நாகராஜன்
tags- லெபனான், பாடம்

- 1000 gold coins
- 60 வினாடி பேட்டிகள்
- Alvars &Saints
- anecdotes
- Aryan
- Astrology
- அமரகோசம்
- அரசியல்
- அறிவியல்
- இயற்கை
- கம்பனும் பாரதியும்
- குறள் உவமை
- சமயம்
- சமயம். தமிழ்
- சம்ஸ்கிருத நூல்கள்
- சரித்திரம்
- சிந்து சமவெளி கட்டுரைகள்
- சினிமா
- சிலப்பதிகாரம்
- தமிழ்
- தமிழ் பண்பாடு
- தமி்ழ்
- திருப்புகழ்
- திருவள்ளுவன் குறள்
- பெண்கள்
- பொன்மொழிகள்
- மேற்கோள்கள்
- ராமாயணம்
- ரிக் வேத உவமை
- வரலாறு
- Bharati
- Brahmins
- Culture
- Dance
- Dravidian
- English Cross word
- Health
- History
- Hobbies
- Indus Valley Civilization
- Medicine
- Miracles
- Music
- Nature
- Paranormal
- Quiz (English and Tamil)
- Quotations
- Ramayana & Mahabajarata
- Religion
- Sanskrit Literature
- Science
- Science & Religion
- science and religion
- Self Improvement
- Tamil
- TAMIL CROSS WORD
- Tamil Literature
- Tamil Quiz
- Temples & Vahanas
- Uncategorized
- woman
- Women