19-10-2020 உலக இந்து சமய செய்தி மடல் (8829-C)

SAINTS CONFERENCE IN KASI/VARANASI

WRITTEN BY LONDON SWAMINATHAN (NEWS EDITOR)

Post No. 8829-C

Date uploaded in London – –20 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

அக்டோபர் 19-ம் தேதி —   திங்கட் கிழமை

உலக இந்து   சமய செய்தி மடல்

தொகுத்து வழங்குபவர் வைஷ்ணவி ஆனந்த்

 இது ‘ஆகாச த்வனி’ யின் உலக இந்து சமய செய்தி மடல் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்,

நமஸ்காரம் செய்திகள் வாசிப்பது VAISHNAVI ANAND 

 எங்கள் நிகழ்ச்சிகளை திங்கட்கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல் 2 மணிக்கும், இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் நேரடியாகக் கேட்கலாம். உலக இந்து சமய செய்தித் தொகுப்புடன் நேயர்களின் கேள்விகளுக்கும் விடைகளும் அளிக்கப்படுகிறது.

உங்கள் பேட்டை, நகரத்தில் நடைபெறும் விழாக்கள், உற்சவங்கள் பற்றி எங்களுக்கு செய்தி அனுப்புங்கள்.

எங்களை எந்நேரமும் தொடர்பு கொள்ள Facebook.com / Gnana mayam முகவரியில் அணுகவும்

XXXX

நாட்டு மக்களுக்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நவராத்ரி வாழ்த்துக்களைத் தெரிவித்து இருக்கிறார். சென்ற 17ம் தேதிய ன்று ஒன்பது நாள் நவராத்ரி உற்சவம் துவங்கி விட்டது.

ஜகன் மாதா ஜகஜ்ஜனனீ,

அனைவர்க்கும் அமைதியையும் ஆனந்தத்தையும் அருளட்டும்! ஜெய் மாதா தி!

என்று TWEET  ட்வீட் மூலம் வாழ்த்து தெரிவித்தார்.

முதல் நாளன்று மலை மகள் – சைல புத்ரி என்று தேவியை வண ங் குகிறார்கள். அந்த அன்னை அனைவர்க்கும் ஆரோக்கியத்தை அருளட்டும் –அத்தோடு வறுமை மிஞ்சி வாடுவோரின் வாழ்வில் வளம் பெருக உதவட்டும் என்றும் வேண்டிக்கொண்டு இருக்கிறார்.

XXX

இதற்கிடையில் நவம்பர் 3ம் தேதி நடைபெறப்போகும் அமெரிக்க அதிபர் தேர்தலில் DONALD TRUMP   அவர்களை  எதிர்த்துப் போட்டியிடும் BIDEN பைடனும் தமிழ் வம்சாவளி பெண்மணியான KAMALA HARRIS கமலா ஹாரிஸும் அமெரிக்கா வாழ்  இந்துக்களுக்கு  நவராத்ரி நல்  வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்கள்

இதோ தமிழ்நாட்டுச் செய்திகள்…………..

தமிழ் நாட்டில் எல்லா கோவில்களிலும் நாராத்ரி உற்சவம் கோலாகலமாகத் துவங்கிவிட்டது. ஆயினும் பக்தர்கள் எல்லோரும் முன்போல தரிசிக்க முடிவதில்லை. மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் உள்பட பல கோவில்களும் வெப் சைட், வாட்ஸ் அப் , இன்டெர்நெட் மூலம் நிகழ்சசிகளைக் காட்டிவருகின்றன.

மாயூரத்தில் துலா காவேரி ஸ்னானமும் துவங்கி விட்டது. மயூர நாத சுவாமி அம்பிகை சமேதராக ஆற்றங்கரைக்கு எழுந்தருளும் பவனியும் நடந்து வருகிறது.

XXX

ஜம்மு-காஷ்மீர்  மாநிலத்தின் ஜம்மு பகுதியில் புகழ் பெற்ற வைஷ்ணவ தேவி ஆலயம் இருக்கிறது. இது ஒரு குகைக் கோவில். இங்கு நவராத்ரி திருநாளை ஒட்டி    கூட்டம் பெருகி வருகிறது. உலக அமைதிக்காக வேத கோஷ முழக்கத்துடன் மகா சண்டி யக்ஞமும் துவக்கப்பட்டுள்ளது..

வைஷ்ணவ தேவி கோவிலைச் சுற்றி மலர் அலங்கரம் செய்யப்பட்டுள்ளது. அன்னையை தரிசிக்க வசதியாக தினமும் டெலிவிஷன் ஒளிபரப்பும் நடைபெறுகிறது

xxxxx

உத்தரப் பிரதேச மாநிலச் செய்திகள்…………..

அயோத்தி : ‘அயோத்தியில் அக். 17ல் துவங்கவுள்ள ராம்லீலா வைபவம் சமூக வலைதளங்களில் 14 மொழிகளில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டுள்ளது.
உ.பி., மாநிலம் அயோத்தியில் ஆண்டு தோறும் நடக்கும் ராம்லீலா வைபவத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர். இந்த ஆண்டுக்கான ராம்லீலா நிகழ்ச்சி அக். 17ல் துவங்கி 25ம் தேதி வரை   நடக்கிறது  . கொரோனா பரவல் காரணமாக இதில் பக்தர்கள் பங்கேற்க அனுமதி இல்லை. முக்கிய பிரமுகர்கள் கோவில் நிர்வாகிகள் விழாக் குழுவினர் மட்டும் பங்கேற்பர். இந்த ஆண்டு உற்சவம் நடத்தும் பொறுப்பு டில்லியில் உள்ள ராம்லீலா அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.


xxxxxx

சமஸ்கிருதம் படிக்கும் மாண வர்களுக்கு இலவச சாப்பாடும் பிற வசதிகளும் வழங்கப்படும்  என்று உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். சம்ஸ்கிருதக் கல்வியை வளர்க்க மாநிலம் எல்லா நடவாடிக்கைகளையும் எடுக்கும் என்றும் தேவையானால் அரசு சார்பற்ற நிறுவனங்களின் உதவியை நாடும் என்றும் அறிவித்துள்ளார். சம்ஸ்கிருத சிக்ஷர sikshaa பரிஷத் வெப்சைட்டை website துவக்கி வைத்து அவர் பேசினார். குருகுல வழக்கப்படி சம்ஸ்க்ருதம் கற்பிக்கப்படும் போதே அவர்களுக்கு கணிதம், கம்ப்யுட்டர், அறிவியல் ஆகியவையும் கற்பிக்கப்படும் என்றார்

XXXX 

பல மாநிலங்களிலும் இந்து மத சாது சன்யாசிகள் படுகொலை செய்யப்பட்டதைச் சுட்டிக்காட்டி சாது சன்யாசிகளுக்கு தக்க பாதுகாப்பு வழங்கா விடில் நாடு முழுவதும் கிளர்ச்சி நடத்தப்படும் என்று சன்யாசிகள், துறவிகள், முனிவர்களின் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்து சன்யாசிகளின் தலைமை அமைப்புக்கு அகில பாரத சாந்த் சமிதி என்று  பெயர். இந்த அமைப்பின் கூட்டம் இந்துக்களின் புனிதத் தலமான காசியில் நடந்தது . பொதுக் காரீயதரிசி ஜிதேந்திரா  நந்த சரஸ்வதி  இதை அறிவித்தார். பின்னர் பேசிய பாபா பாலக் தாஸ் எல்லா இந்து அமைப்புகளும் கிளர்ச்சிக்கு ஆதரவு நல்கும் என்று அறிவித்தார்.

ஏப்ரல் 16ம் தேதி மகாராஷ்டிர மாநிலத்தில் இரண்டு  சன்யாசிகளை போலீசார் முன்னிலையில் ஒரு கும்பல் அடித்துக் கொன்றது. இது போன்று பல  தாக்குதல்களை நக்சல்பாரி இயக்கத்தினர் நடத்துவதாகக் கூறி பல சம்பவங்களையும்  கூட்டம் பட்டியலிட்டது . ராஜஸ்தானிலும் உத்தர பிரதேசத்திலும் கோவில் அர்ச்சகர்கள், புரோகிதர்கள் இருவர் கொல்லப்பட்டனர்.ஒரு சன்யாசி மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் காணாமற் போனதற்கு போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூட்டம் சுட்டிக்காட்டியது.

Xxxxxx

இனி கேரள மாநில செய்திகள்

நவராத்திரி விழாவுக்கு தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் சுவாமி சிலைகளுக்கு, எல்லைப்பகுதியான களியக்காவிளையில் இருமாநில போலீசாரும் துப்பாக்கி ஏந்திய அணிவகுப்புடன் மரியாதை செலுத்தினர். குமரியிலிருந்து நவராத்திரி விழாவிற்கு திருவனந்தபுரம் செல்லும் சுவாமி சிலைகள் பாரம்பரிய முறைப்படி பல்லக்கில் சுமந்து செல்ல மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. இதனையொட்டி இன்று காலை சுசீந்திரத்தில் இருந்து முன்னுதித்த நங்கை சிலை பல்லக்கில் சுமந்து நவராத்திரி விழாவிற்காக திருவனந்தபுரம் புறப்பட்டு சென்றது. புதன் இரவு பத்மநாபபுரம் அரண்மையில் இருந்து பல்லக்குகளில் பவனியாக புறப்பட்ட சுவாமி சிலைகளை களியக்காவிளை பகுதியில் துப்பாக்கி ஏந்திய அணிவகுப்பு மரியாதையுடன், தமிழக போலீசார் கேரளா போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

ஆண்டு தோறும் இந்த பவனி நடைபெறுகிறது. நவராத்ரி காலத்தில் நிறுவனத்தை புறத்தில் மூன்று இடங்களில் சுவாமி விக்ரகங்கள் வழிபாட்டிற்கு வைக்கப்படும்.

Xxxxx

சபரிமலையில் ஐயப்பன் கோவில் ஆறுமாதங்களுக்குப் பிறகு முதல் தடவையாக பதர்களுக்குத் திறந்து  விடப்பட்டது. இது மாதம் தோறும் நடை திறப்பதன் ஒரு பகுதி. ஆயினும் 6 மாதங்களாக பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட வில்லை. இப்பொழுது கடும் வைரஸ் பரிசோதனைகளுக்குப் பின்னர் 60 வயதுக்கும் குறைந்த பக்தர்கள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றனர். 6 மாதங்களுக்குப்  பக்தர்கள் மீது  விதித்த தடையால் கோவிலுக்கு 150 கோடி ரூபாய் வருவாய் இழப்பு நேரிட்டது

xxxx

இனி ஆந்திர மாநிலச் செய்திகள்

விஜயவாடாவில் இந்திர கேலாத்ரி மலையிலுள்ள  கனக துர்கா கோவிலில்

நவராத்ரியின் முதல் நாளன்றே 12, 000 பக்தர்கள் வரிசையில் நின்று துர்கா தேவியை வணங்கினார்கள். முதல் நாளன்று ஸ்வர்ண அலங்காரத்தில் தேவி தரிசனம் தந்தது பக்தர்களைப் பரவசத்தில் ஆழ்த்தியது

xxx

இதற்கிடையில் அருகாமையிலுள்ள தெலுங்கானா மாநிலத்தில் இந்து சமய பெண்கள் பதுகம்மா என்னும் மலர்த்   திருவிழாவைக் கொண்டாடி தேவியை மலர் வடிவத்தில் வணங்கி வருகிறார்கள். நவராத்திரியின் ஒன்பது நாட்களிலும் இந்துக் குடும்பங்களை சேர்ந்த ஆண்  மக்கள்  பகல் நேரத்தில் பூக்களை சேகரித்து வருவர். பின்னர் குடும்பத்தினர் அனைவரும் பல்வேறு வண்ண மலர்களால் ஆன பதுக்கம்மா வடிவத்தைச் செய்து அதன் மீது மஞ்சள் குங்குமம் வைத்து வணங்குவர். பெரும்பாலும் வறட்சியில் வாடும் தெலுங்கனா மாநிலத்தில் இவ்வாண்டு அணைகள் நிரம்பி எங்கும் பசுமைக் காட் சி தென்படுவதால் மக்கள் இரு மடங்கு உற்சாகத்துடன் விழாவைத் துவக்கியுள்ளனர்.

xxxx

பாலாஜி கோவில் பணத்தை மத்திய மாநில அரசுகளின் செக்யுரிட்டி security  பத்திரங்களில் முதலீடு செய்ய திருப்பதி- திருமலை தேவஸ்தானம் முடிவு செய்திருப்பதை பாரதீய ஜனதா கட்சி கண்டித்துள்ளது . கோவில் உண்டியல் பணத்தை முதலீ டு செய்து வட்டி பெறுவது முறையற்றது என்றும் அதற்குப் பதிலாக தர்ம கைங்கர்யங்களிலும், பக்த்ர்களுக்காகவும் அந்தப் பணத்தைப் பயன்ப டுத்தவேண்டும் என்றும் பாரதியஜனதா கட் சி கோரியிருக்கிறது

Xxx

அடுத்ததாக பெங்களூரிலிருந்து திருமதி பிரஹந்நாயகி சத்ய நாராயணன் , கர்நாடகச் செய்தி மடலை வழங்குகிறார்.

 இத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன………………………….. செய்திகளை உங்களுக்கு

வழங்கியவர் வைஷ்ணவி ஆனந்த்………………………… நன்றி, வணக்கம் ……………….

xxxxxx

TAGS– TAMILNEWS191020

Leave a comment

1 Comment

 1. R Nanjappa

   /  October 20, 2020

  பாலாஜி கோவில் பணத்தை அரசு பத்திரங்களில் முதலீடு செய்யலாமா?
  இங்கு ஒரு முக்கியமான தார்மீகப் பிரச்சினை எழுகிறது. அரசு மதசார்பற்றது என்ற பெயரில் ஹிந்துக்களுக்கு ஆதரவில்லாத வகையில் நடந்து கொள்கின்றனர். ஹிந்துக்களுக்கு விரோதமாகச் செயல்படும் அந்நிய மதத்தினருக்கும் ஆதரவு தருகிறார்கள், பலவிதத்திலும் அவர்களை ஊக்குவிக்கிறார்கள். இந்த நிலையில் ஹிந்து கோவில் பணம் அரசு பத்த்திரங்களுக்குப் போவது ஹிந்துக்கள் தங்கள் தலையில் தாங்களே மண்ணை வாரிப்போட்டுக்கொள்வதற்குச் சமம்.

  இந்த சமயத்தில் இன்னொரு நிகழச்சி நினைவுக்கு வருகிறது. காந்திஜியால் தொடங்கப்பட்ட கதர், கிராமக் கைத்தொழில் அமைப்புகள் அரசு உதவியோ, தலையீடோ இன்றி நடந்துவந்தன. சுதந்திற்குப் பிறகு அரசு உதவி என்ற பெயரில் தலையீடும் வந்தது. சொல்ப நிதியுதவி தந்தாலும் , பெரிய ஆடிட் வந்தது! அப்போது காசி சர்வ சேவா சங்கத்தில் ஆடிட் செய்தார்கள். அவர்கள் இருப்புத்தொகை ( சில நூறு ரூபாய்கூட இல்லை) வங்கிக் கணக்கில் போடாமல் கையிருப்பாக வைத்திருந்தார்கள். இதை வங்கியில் போடாததால் அதற்கான வட்டி வருமானத்தை சங்கம் இழந்துவிட்டது என்று பெரிதாக ஆடிட் objection எழுதினார்கள்! அப்போது வினோபாஜி அதன் காரியதரிசி,/பொருளாளர். அவர் ஆடிட்டர்களிடம் சொன்னார்:
  ” இந்த சங்கம் வியாபார நோக்குடன் செயல்பட வில்லை. இதன் போக்கு சமுதாய நோக்கும் நன்மையும். இது பணத்தை நம்பிச் செயல்படவில்லை. வங்கிகளுக்கு சமுதாய நோக்கு இல்லை. எங்கள் கொள்கைகளும் வங்கியின் நோக்கமும் போக்கும் மாறுபட்டவை. இந்த நிலையில், வங்கியில் போடப்படும் எங்கள் பணம், எங்கள் நோக்கத்திற்கு முரணான செயல்களுக்கும் பயன்படுத்தப்படும். இது எங்கள் நோக்கத்திற்கு எதிரானது. அதனால் நாங்கள் இந்தச் சங்கத்தின் பணத்தை வங்கியில் போடமாட்டோம்.”
  இத்தகைய ஆழ்ந்த நோக்கு எந்த ஹிந்துமதத் தலைவருக்காவது இருக்குமா என்பது சந்தேகமே. வருமானமே குறியாக இருக்கிறது!

  இங்கு இன்னொரு விஷயம். வருமானம் உள்ள கோவில்களை அரசு தனது கட்டுக்குள் கொண்டுவருகிறது. அரசு அதிகாரிகள் கோவில் பணத்தில் கொழுக்கிறார்கள். அர்ச்சகர்கள் கடைனிலை ஊழியர்கள் போல் இருக்கிறார்கள். கோவில்களுக்கு அதிக வருமானம் இருந்தால் அது அரசு கண்ணை உறுத்தும். இதைப் பார்த்த தர்மஸ்தலா (கர்னாடகம்) தர்மாதிகாரி வீரேந்திர ஹெக்கடே பல வருஷங்களுக்கு முன்பே ஒரு திட்டம் சொன்னார்; கோவில்கள் அதிக வருமானத்தைச் சேர்த்துவைத்துக் கொள்ளாமல், அதை பக்தர்களுக்கே திருப்பிவிடவேண்டும். எப்படி? வரும் பக்தர்களுக்கு இலவச உணவு, தங்கும் வசதி ஆகியவை தந்து பணத்தை அவர்களுக்கே திருப்பவேண்டும்! இதன்படி, தர்மஸ்தலாவிற்கு தினசரி வரும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு உணவும் தங்க இடமும் தரப்பட்டு வருகிறது.
  இலவச உணவு இன்று உடுப்பி ஸ்ரீ க்ருஷ்ணர் கோயிலிலும் வழங்கப்படுகிறது.
  பாலாஜி கோயிலில் அதிக கட்டணம் வசூலிக்கவும் வேண்டாம், அதை அரசு நிதியில் சேர்க்கவும் தேவையில்லை! இந்தப் பணத்தை வருமானமில்லாத கோவில்களின் நிர்வாகத்திற்கும் அர்சகர்களின் உதவிக்கும், வேத ஆகம பாடசாலைகளுக்கும் பயன்படுத்தலாம். கீதா பிரஸ் போன்று ஹிந்து மத புத்தகங்களை அச்சிட்டு குறைந்த விலையில் தரலாம். பசுப் பாதுகாப்பிற்குச் செலவிடலாம். அரசு பத்திரம் வேண்டாம்!

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: