
WRITTEN BY KATTUKKUTY
Post No. 8834
Date uploaded in London – – 21 OCTOBER 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
சித்த மருத்துவ ரகசியங்கள், பரிபாஷை குறித்து விளக்குவீர்களா ?- 2
Broadcast and telecast at Facebook.com/ gnanamayam on 19-10-20
First part was posted yesterday 20-10-20

சர்வ சக்தி வாய்ந்த சத்திய சித்தர்கள்
மேற்கண்ட வெறி பிடித்த மனிதர்களிடமிருந்து உலகைக் காப்பாற்ற
தாங்கள் கண்டுபிடித்த உண்மைகளைப் பாடல்களாகப் புனைந்து
பரிபாஷைகளில் மறைத்து எழுதினார்கள் சித்தர்கள்!!!
அவர்கள் நினைத்திருந்தால் சொல்லாமலேயே சென்றிருக்கலாம். தங்கள் சக்தியை வைத்து உலகத்தைத் தன் காலடியில் வைத்து ஆட்டியிருக்கலாம், தங்க மழையில் குளித்திருக்கலாம், ஆனால் எந்த வியாதியையும் தீர்க்கும் நவபாஷாண சிலையை செய்து பழனியில் நிறுவினார் போகர்!!! உலகப்புகழ் பெற்ற தஞ்சைக் கோவிலைக் கட்டினார் கருவூரார்.வெளி நாட்டிற்கு சென்று
வியாதியை அவர்களுக்கு தீர்க்க யாக்கோபு என்று மதம் மாறி
மீண்டும் வந்து மதுரையில் அருகில் உள்ள அழகர்மலையில்
மறைந்தார் ராம தேவர்.நவக்கிரகங்களையே மாற்றி 12 வருடமாக மழையே இல்லாத திருவண்ணாமலையில் மழையைப் பெய்ய வைத்தார் இடைக்காடர் என்னும் சித்தர்……
தனக்குத் தெரிந்த வித்தைகளை ஜோதிடம் , வைத்தியம் என்று எழுதாத சித்தர்களே கிடையாது. பரி பாஷையில் வைத்து, உண்மையிலேயே தேடுபவர்களுக்கு கிடைக்கும், என ஆசீர்வதித்து மறைந்தனர்
பரி பாஷை என்றால் என்ன???
சின்ன வயசுலே எங்க அம்மாவை பெத்த அம்மா பாட்டி கை முறுக்கு செயது கொண்டு வருவாள் , ரொம்ப ரொம்ம சுவையாய் இருக்கும்.
நாங்க தெரியாமல் எடுத்து தின்னாமல் இருக்க ஒரு நாளைக்கு ஒரு இடமாக ஒளித்து வைப்பாள் அம்மா. நாங்கள் பாட்டியிடம் கெஞ்ச
பாட்டு அம்மாவிடம்கேட்பாள். கமு கறு க்க் க்கு க எ கங் ககே கயி
கரு க்க் க்கு?.. அம்மா சொல்லுவாள் கதூ க க் க்கி கல் கஇ கரு க க்
க்கு…..முறுக்கு எங்க இருக்கு …….தூக்கில் இருக்கு எல்லாம் கனா
பாஷை தான் அது. இது தெரியாமல் நாங்கள முழித்த காலம் அது.
அது போல, சித்த வைத்தியத்தில் சில தொழில் நுணுக்க சொற்களை அந்த பொருளின் பெயரை வேரொரு பெயரினால் குறிப்பிட்டு மற்றவர்களுக்கு தெரியாமல் சொல்லப்படும் முறைக்கே “பரிபாஷை “ எனப் படும்.
எல்லா மருந்துகளையும் வசன நடையில் எழுதாமல் சுருக்கமாக பாடல்களாக எழுதி எதுகை மோனைகளுக்காக சில இடங்களை திருத்தியும், மாற்றியும், மறைத்தும் பாடியுள்ளனர்.
உதாரணமாக “முசு” என்றால் குரங்கைக் குறிக்கும். ஒரு பாடலில்
“இரு குரங்கின் கையையும்சேர்த்து” என்றால், முசு முசுக்கை பச்சிலையும் சேர்த்து எனப் பொருள் கொள்ள வேண்டும்.
இரண்டாவதாக,
ஒருசில மருந்து சரக்குகளின் கூட்டு எண்ணிக்கையின் பெயர்களும்
(அதாவது தொகுப்பு எண்ணிக்கையின் பெயர்களும் இதில்
அடங்கும்.) பரிபாஷையாக வரும்.
மூன்றாவதாக
வழங்கு சொல்வேறு பாடு
உதாரணமாக மணிலாக் கொட்டை, சில இடங்களில் மணிலாக் கொட்டை எனவே வழங்கப்படும். இது நிலத்தில் விளைவதினால் நிலக் கடலை எனவும், வேரிலிருந்து வருவதினால், வேர்க்கடலை என்றும் பல இடங்களில் ஒரே பொருள்
அழைக்கப் படுகிறது.

கொல்லுதல் அல்லது மடித்தல்
உலோக, ரச, கார,சாரங்களுக்கு இயற்கையாய் அமைந்த கெட்ட பண்புகளைப் போக்குவதற்கு எதிர் தன்மையுள்ள மருந்துகளால் “கொல்லுதல்” அல்லது “மடித்தல்”
உதாரணம்- தாளகத்தின் விஷத்தன்மையை கொல்ல கண்டங்கத்திரி
வெடியுப்பின் விஷத்தை கொடி வேலி வேரும்,
காரீயத்தை மனோசிலை வேரும் “மடிக்கும்” அல்லது “கொல்லும்”
சுருக்கு கொடுத்தல்
பாஷாணங்களை அகலில் வைத்து எரித்து பழுக்க வைத்து உருக்கிய பின் அததற்குரிய பால் நெய் சாறுகளில் ஊற்ற, அப்போது “சுருக்”
“சுருக்”. சப்தத்துடன் கெட்டியாகும். இதை சுருக்குக் கொடுத்தல் என்பார்கள்
சாரணையேற்றல்
நெருப்பில் உருக்கி, புகைந்து ஓடுகின்ற ரசத்தை முறைப்படி கட்டியாக்கி ஓடாமல் இருக்கச் செய்வது “சாரணையேற்றல்” எனப்படும்.
வைப்புச்சரக்கு
இயற்கையாக உள்ள உலோகத்தையும் வேறொன்றையும் சேர்த்து
புதிய உலோகமாக்குவது வைப்புச் சரக்காகும்
செம்பு 66 பங்கும், துத்தம் 34 பங்கும் சேர்ந்த புதிய வைப்புச்சரக்கு புதிய உலோகமான “பித்தளை”ஆகும்.
தொகைப் பெயர்
ஒரே தன்மையான, அல்லது ஒரே காரியத்திற்கு பயன்படக்கூடிய கூட்டுச் சரக்குகள் தொகையளவில் பெயர் சூட்டப் பட்டுள்ளன.
திரி கடுகு- சுக்கு, மிளகு, திப்பிலி
திரி பலை – கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக் காய்,
திரி மஞ்சள் – மஞ்சள், மரமஞ்சள், கஸ்தூரி, மஞ்சள்
பஞ்ச கவ்யம் – பசுவின் பால், தயிர், வெண்ணெய், நீர்,சாணம்
பஞ்ச சூதம் – ரசம், லிங்கம், ரச செந்தூரம், வீரம், பூரம்
பஞ்ச மித்ரன்- தேன், நெய், வெல்லம், குன்றிமணி, வெண்காரம்
வெருகடி- ஐவிரல் அளவு
திரிகடி – மூன்று விரல் அளவு
மேலும் இதை விளக்கிக் கொண்டே போகலாம்



சித்த வைத்தியத்தினால் உண்டாகும் நன்மைகள்
1)நீண்ட ஆயுள்
2)வியாதியே வராமல் தடுப்பது
3)நினைவாற்றல் பெருகுவது
4)நுண்ணறிவு
5)இளமை
6)உடல் பொலிவு,அழகு
7)நிறம்
8)எடுப்பான குரல்
9)திறமை
நேரம்கருதி முடிக்கிறேன்!!! நன்றி, வணக்கம்!!!

TAGS- ரகஸியம், பரம ரகஸியம், Part 2