
Post No. 8844
Date uploaded in London – – 23 OCTOBER 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
நவீன ஞான மொழிகள்-4
Compiled by Kattukutty
ஆபீஸில் ஓவர்டைம் OVERTIME என்றால் வீட்டுக்கு லேட்டு
வீட்டில் ஓவர் டைம் என்றால் அபீஸுக்கு LATE லேட்டு.
XX
ஆசிரியரும் அன்னை தான்!!! வகுப்பில் தாலாட்டுவதால்!!!
XXX
அவன் ரொம்ப சாமர்த்தியசாலி, காவேரியில் தள்ளி விட்டாலும்
வாயில் மீனோடு தான் வருவான்!!!!
XXX
போட்டவன் கையில் கரும் புள்ளி, வென்றவன் விரைவில் பெரும்புள்ளி,
யாரிடம் அழுவேன் என் கஷ்டத்தைச் சொல்லி????
XXX
பத்திரிகைக்கு கதை அனுப்பினேன், திரும்பி வந்தது,
கட்டுரை அனுப்பினேன் திரும்பி வந்தது,
சந்தா அனுப்பினேன், திரும்பி வரவே இல்லை!!!
XXX
பணத்தை அதிகமாக மதித்து “கெட்டுப்போன” முட்டாள்கள்
எத்தனையோ பேர்!!!
பணத்தை குறைவாக மதித்து “பட்டுப்போன “அறிவாளிகள்
எத்தனையோ பேர்!!!
XXX
மதத்தைப் பார்த்த இடத்தில் மனிதனைக் காணவில்லை,
மனிதனைப் பார்த்த இடத்தில் மதத்தைக் காணவில்லை
இரண்டும் பார்த்த இடத்தில் இறைவனைக் காணவில்லை!!!
XXX
ஒரு ஆஸ்பத்திரியில் பல நோயாளிகள் நுழையலாம்,
ஆனால் உடலுக்குள் பல நோய்கள் நுழையக்கூடாது!!!
XXX
உன்னுடைய சக்திக்கேற்ற வேலை கிடைத்தால் போதும் என்று எண்ணாதே
உன்னுடைய வேலைக்கேற்ற சக்தி கிடைக்கவேண்டுமென்று ஆசைப்படு!!!
XXX

மனைவி
உங்கள் மனைவியிடம் இப்போதுள்ள குறைகளைக் கண்டு
வருத்தப்படாதீர்கள்…… அந்தக் குறைகள் இல்லாமலிருந்தால்
ஒரு நல்ல கணவன் கிடைத்திருப்பானோ என்னவோ…….
XXX
மனிதன்
கடவுள் மனிதனை அளக்கும் போது அவன் தலையின்
சுற்றளவைப் பார்ப்பதில்லை……..
இதயத்தின் சுற்றளவையே பார்க்கிறான்!!!
XXX
மிருகம் என்றழைத்தால் கோபம் வரக் கூடிய
ஒரே மிருகம். — மனிதன்!!!
XXX
யாருக்காவது குழி தோண்டவும் மண்ணைப் போடவும்
விரும்பினால் அதை விதைகளுக்குச் செய்யவும்.
XXX
மடிக்கிற “பிகர்” FIGURE எல்லாம் கடவுள் உனக்குக் கொடுத்த பரிசு!!.,
மடிக்க முடியாத “பிகர்” எல்லாம் மற்றவர்களுக்கு நீ தரும் பரிசு!!!
XXX
ஹோட்டல்ல காசு இல்லேன்னா மாவு ஆட்டச் சொல்லுவாங்க
பஸ்ஸுல காசு இல்லேன்னா பஸ்ஸை ஆட்டச் சொல்லுவாங்களா???
XXX
கோழி முட்டைலேர்ந்து இன்னொரு முட்டை வரும்
வாத்தியார் போட்ட முட்டைலேர்ந்து இன்னொரு வாத்தியார் வருவாரா????
XXXX
கடவுளும், மனைவியும் ஓண்ணு,
நாம் சொல்வதையெல்லாம் வாங்கிக் கொள்வார்கள்.
ஆனால் செய்வதை மட்டும் அவர்கள் இஷ்டத்திற்குச் செய்வார்கள்!!!
XXX
புத்திமான்கள் கண்டுபிடிச்சது மின்சாரம்,
பக்திமான்கள் கண்டுபிடிச்சது பிரசாதம்,
மக்கள் கண்டு பிடிச்சது சம்சாரம்
இதற்கா சுத்தி சுத்தி வந்தோம் பிரகாரம்????
XXX
வெய்யில் அடிச்சா திருப்பி அடிக்க முடியாது……
ஜுரம் அடிச்சா திருப்பி அடிக்க முடியாது,
காற்று அடிச்சா திருப்பி அடிக்க முடியாது,
மனுஷன் அடிச்சா திருப்பி அடிக்க முடியும்!!!!
XXXX
தோல்வி வந்தால் இதயத்தில் இடம் கொடுக்காதே!!!
வெற்றி வந்தால் தலையில் இடம் கொடுக்காதே!!!
XXX

வாழைப்பழம் சாப்பிட்டால் சத்து,
வாழைப்பழ தோலில் வழுக்கி விழுந்தால் DEATH டெத்து!!!
XXX
தானா பெரியவங்க காலில் விழுந்தா அது தமிழ்ப் புத்தாண்டு,
தள்ளாடி விழுந்தா அது ஆங்கிலப் புத்தாண்டு!!!
XXX
எல்லாப் பெண்களையும் விசிலடித்து திரும்பி பார்க்க வைத்தாலும்
செருப்படி வாங்காத ஒரே ஜீவன் குக்கர் தான்!!!
XXX
மாமா பொண்ணும் உப்புமாவும் ஓண்ணுதான்…….வேறொன்றும்
கிடைக்காத பட்சத்தில், நம்ம தலையில் கட்டப்படும்.
XXXX
இந்த உலகத்தில் என்னையும் ஒருமனிதனாக மதித்து பொன்னாடை போர்த்துகிற ஒரே மனிதர் சலூன் கடைக்காரர் மட்டுமே!!!
நீங்க வெட்டுங்க பாஸ்!!!
XXXX
டிபன் பாக்ஸில் தயிர் சாதம் இருந்தால் “பாத்”
கீழே கொட்டி விட்டால் “சிந்து பாத்”!!!
XXX
சட்டையின் முதல் பட்டனை போடாதவனை ஒழுங்கில்லாதவன்
என்று சொல்லுகிற சமூகம், காலர் பட்டனை சேர்த்துப்
போட்டால் “லூசு” என்று சொல்லுகிறது!!!
XXXX
SORRY என்பது மட்டுமல்ல, சாப்பிட்டையா? எனபதும் ஒரு
வகையான சமாதான வார்த்தை தான்!!!
மனைவி “உங்கள் இஷ்டம்” என்று சொன்னால், இஷ்டமில்லை
என்று பொருள்!!!
tags – நவீன ஞான மொழிகள்-4
***