அக்கு வேர் – ஆணி வேர்; இசகு – பிசகு ! (Post No.8849)

WRITTEN BY KATTUKKUTY

Post No. 8849

Date uploaded in London – – 24 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

அர்த்தமும் அனர்த்தமும்  – அடுக்குத் தொடரும், இரட்டைக்கிளவியும்!- part 1

                                                  Compiled by Kattukutty

(நாம் சில விஷயங்களை தவறாக புரிந்து கொண்டு தவறாகவும் உபயோகிக்கிறோம்.

இதோ சில இரட்டை கிளவிகளும், அடுக்குத் தொடர்களும்.

நண்பர் ஒருவர் உதவியது இந்தச் செய்தி)

குண்டக்க – மண்டக்க

குண்டக்க – இடுப்புப் பகுதி

மண்டக்க – தலைப் பகுதி

அதாவது தலை எது , கால் எது என்று தெரியா தூக்குவது.

xxx

அந்தி – சந்தி

அந்தி- மாலை நேரத்திற்கும் இரவு நேரத்திற்கும் இடையில் உள்ள பொழுது.

சந்தி – இரவு நேரத்திற்கும் காலை நேரத்திற்கும் உள்ள விடியல் பொழுது.

xxx

அக்கு வேர் – ஆணி வேர்

அக்கு வேர் – செடியின் கீழ்பகுதியில் உள்ள மெல்லிய வேர்

ஆணிவேர் – செடியின் நடுவே ஆழமாகச் செல்லும் வேர்

xxx

அரை – குறை

அரை – ஒரு பொருளின் சரி பாதி

குறை – அந்த சரி பாதி அளவிலும் குறைவு

xxx

அக்கம் – பக்கம்

அக்கம் – தன் வீடும் தான் இருக்கும் இடமும்

பக்கம் – பக்கத்தில் உள்ள வீடும் பக்கத்தில் உள்ள இடமும்

xxx

கார – சாரம்

காரம் – உறைப்புச் சுவை உள்ளவை.

சாரம் – காரம் சேர்ந்த சுவை உள்ளவை

xxx

இசகு – பிசகு

இசகு – தம் இயல்பு தெரிந்து ஏமாற்றுபவர்களிடம் ஏமாறுதல்

பிசகு – தன்னுடைய அறியாமையினால் ஏமாறுதல்

xxx

இடக்கு – மடக்கு

இடக்கு – கேலியாக நகைத்து இகழ்ந்து பேசுதல்

மடக்கு – கடுமையாக எதிர்த்து தடுத்துப் பேசுதல்

xxx

ஆட்டம் – பாட்டம்

ஆட்டம் – தாளத்திற்கு தகுந்தாற் போல் ஆடுவது

பாட்டம் – ஆட்டத்திற்கு பொருத்தமில்லாமல் பாடுவது

xxx

அலுப்பு – சலிப்பு

அலுப்பு – உடலில் உண்டாகும் வலி

சலிப்பு – உள்ளத்தில் உண்டாகும் வெறுப்பும், சோர்வும்

xxx

தோட்டம் – துரவுதோப்பு – துரவு

தோட்டம் – துரவு செடி, கொடி, கீரை பயிரிடும் இடம்

தோப்பு. – துரவு கூட்டமாக இருக்கும் மரங்கள்

துரவு. – கிணறு

xxx

காடு – கரை

காடு – மேட்டி நிலம் ( முல்லை )

கரை – வயல் , நிலம் ( மருதம்) – நன் செய், புன் செய்

xxxx

காடும் – கழனியும்

காடு – சோலை, தோட்டம்

கழனி – வயல் ( மருதம்)

xxx

நத்தம் – புறம் போக்கு

நத்தம் – ஊருக்கு பொதுவான இடம், மந்தை

புறம் போக்கு – ஆடு, மாடு, மேய்வதற்கென்று அரசு ஒதுக்கிய நிலம்

xxxx

பழக்கம்– வழக்கம்

பழக்கம் – ஒருவர் ஒரே செயலை பல காலம் செய்வது

வழக்கம் – பலர் ஒரு செயலை பல காலம் கடைப்பிடித்து செய்வது

xxx

சத்திரம் – சாவடி

சத்திரம் – இலவசமாக சாப்பாடு போடும் இடம்

சாவடி – இலவசமாக தங்கும் இடம்.

To be continued………………………………………………………

tags — அர்த்தம், அனர்த்தம், இரட்டைக்கிளவி, அக்கு வேர், 

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: