
WRITTEN BY KATTUKKUTY
Post No. 8854
Date uploaded in London – – 25 OCTOBER 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
அர்த்தமும் அனர்த்தமும் – அடுக்குத் தொடரும், இரட்டைக்கிளவியும்!-2
கிண்டலும் – கேலியும்
கிண்டல் – ஒருவர் மறைத்த செய்தியை அவன் வாயில் மூலமாகவே
வாங்குவது
கேலி – எள்ளி நகையாடுவது
xxx
ஒட்டு – உறவு
ஒட்டு – ரத்த சம்பந்தம் உடையவர்கள்
உறவு – கொடுக்கல் சம்பந்தமான வகையில் நெருக்கமானவர்கள்
xxx
பட்டி – தொட்டி
பட்டி – கால் நடைகள் வளர்க்கும் இடம் (ஆடுகள்)
தொட்டி – மாடுகள் வளர்க்கும் இடம்
xxx

கடை – கண்ணி
கடை – தனித் தனியாக உள்ள வியாபாரஸ்தலம்
கண்ணி – தொடர்ச்சியாக உள்ள கடைகள், கடை வீதிகள்.
Xxx
பேரும் – புகழும்
பேர் – வாழ்ந்து கொண்டிருக்கும் காலத்தில் உண்டாகும் சிறப்பு பெருமை
புகழ் – வாழ்வுக்குப் பிறகும் நிலை பெற்றிருக்கும் பெருமை.
xxx
நேரம் – காலம்
நேரம் – ஒரு செயலை செய்வதற்கு நமக்கு வசதியாக அமைத்துக் கொள்வது.
காலம் – ஒரு செயலை செய்வதற்கு பஞ்சாங்க அடிப்படையில் செய்ய முற்படும் கால அளவு.
xxx
பழி – பாவம்
பழி – நமக்கு தேவையில்லாத பொருத்தமில்லாத செயலைச செய்தால் இக்காலத்தில்
உண்டாகும் அவச்சொல்
பாவம் – தீயவை செய்து மறு பிறப்பில் நாம் அனுபவிக்கும் நிகழ்ச்சி
xxx
கூச்சல்– குழப்பம்
கூச்சல் – தன்பத்தில் வாடுவோர் போடும் சப்தம்( கூ- கூவுதல்)
குழப்பம் – துன்பத்தின் மத்தியில் உணடாகும் சத்ததைக்கேட்டு வந்தவர்கள் போடும் சத்தம்
xxx

நகை – நட்டு
நகை – பெரிய அணிகலன்கள்(அட்டியல்,ஒட்டியாணம்)
நட்டு – சிறிய அணிகலன்கள் (மெட்டி, தோடு, மூக்குத்தி)
xxxxx
பிள்ளை – குட்டி
பிள்ளை – பொதுவாக ஆண் குழந்தையை குறிக்கும்
குட்டி – பெண் குழந்தையைக குறிக்கும்
xxxx
பங்கு – பாகம்
பங்கு – கையிருப்பு, பணம், நகை, பாத்திரம் (அசையும் சொத்துக்கள்)
பாகம்- வீடு நிலம் போன்ற அசையா சொத்து
Xxxx
வாட்டம் – சாட்டம்
வாட்டம் – வளமான தோற்றம், வாளிப்பான உடல்
சாட்டம் – வளமுள்ள கனம், தோற்றப் பொலிவான முகம்
xxxxx
காய் – கறி
காய் – காய்களின் வகைகள்
கறி – சைவ உணவில் பயன்படுத்தப் படும் கிழங்கு வகைகள்
xxxx
ஈவு– இரக்கம்
ஈவு – கொடை கொடுத்தல் வறியவர்க்கு
இரக்கம் – பிற உயிர்களின் மேல் அன்பு காட்டுதல்
Xxxx
பொய்யும் – புரட்டும்
பொய் – உண்மை இல்லாததைக் கூறுவது.
புரட்டு – ஒன்றை நேருக்கு மாறாக மாற்றி பொய்யை உண்மை எனக் கூறி நடிப்பது
xxx
சூடு – சொரணை
சூடு. – ஒருவர் தகாத செயல் சொல்லை செய்யும் போது உண்டாகும் மனக்கொதிப்பு
சொரணை – நமக்கு ஏற்படும் மான உணர்வு
***
tags– கடை – கண்ணி; நகை – நட்டு