சந்தோஷம் அடைவது எப்படி?(Post No.8853)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8853

Date uploaded in London – – 25 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

சந்தோஷம் அடைவது எப்படி?

ச.நாகராஜன்

அருமையான, நல்ல சில கருத்துக்களைத் தரும் சில சுபாஷித ஸ்லோகங்களைக் கீழே  பார்க்கலாம்:

1

சந்தோஷம் அடைவது எப்படி?

லோபமூலானி பாபானி வ்யாத்யயோ ரஸமூலகா: |

ஸ்னேஹமூலாலின் துக்கானி த்ரீணி த்யக்த்வா சுகீ பவ ||

லோபத்தினால் பாவம் ஏற்படுகிறது, ரஸத்தினால் – சாறினால் – வியாதிகள் ஏற்படுகின்றன, ஸ்நேகத்தினால் துக்கம் ஏற்படுகிறது.  இந்த மூன்றையும் துறந்து சந்தோஷமாக இருங்கள்!

Sins are caused by avarice, the diseases are generated from juices, the pain is caused by pleasure – reject these three and be happy. 

                                                                          (Translation by Dr N.P.Unni)

2

பெண் சுதந்திரம்!

பிதா ரக்ஷதி கௌமாரே பர்த்தா ரக்ஷதி யௌவனே |

புத்ரோ ரக்ஷதி வார்தவ்யே ந ஸ்த்ரீ ஸ்வாதந்த்ரயமர்ஹதி ||

குழந்தைப் பருவத்தில் பிதா ரக்ஷிக்கிறார்; யௌவன பருவத்திலோ கணவன் ரக்ஷிக்கிறார்; வயது ஆனவுடன் புத்திரர்கள் ரக்ஷிக்கின்றனர்; ஆகவே ஒரு பெண்ணானவள் ரக்ஷிக்கப்படாமல் இருக்கவே மாட்டாள்.

At the age of childhood she is protected by father, in her youth she is taken care of by husband, in her old age she is looked after by the son – hence a lady should not be left uncared for.

(Translation by Dr N.P.Unni)

3  

ராஜா குலவதுர்விப்ரா மந்த்ரினஸ்ச புரோஹிதா: |

ஸ்தானப்ரஷ்டா ந ஷோபந்தே தந்தா: கேஷா நகா நரா: ||

ஒரு ராஜா, கற்புள்ள குலப் பெண், பிராமணர்கள், மந்திரிகள், புரோகிதர்கள், பொதுவாக மனிதர்கள் அனைவரும் தங்கள் நிலையிலிருந்து இழிந்துவிட்டால். பல், கேசம், நகம் கீழே விழுந்தால் என்ன நிலையை அடையுமோ அதே நிலையை அடைந்து ஷோபிக்க மாட்டார்கள்.

A King, a chase lady, Brahmins, ministers, preceptor, teeth, hair, nails and men in general once they are fallen from their position make no appeal.

(Translation by Dr N.P.Unni)

4

கணஷ: க்ஷணஷச்சைவ வித்யாமர்தமுபார்ஜயதே |

கிம் க்ஷணஸ்ய குதோ வித்யா கிம் கணஸ்ய குதோ தனம் ||

ஒவ்வொரு க்ஷணம் க்ஷணமாக ஒருவன் கல்வியையும் செல்வத்தையும் சேகரிக்க வேண்டும். ஒரே க்ஷணத்தில் கல்வி எப்படி வரும், ஒரே க்ஷணத்தில் செல்வம் எப்படி சேரும்?

By By bits and moments one should acquire knowledge and wealth; how could there be knowledge in a moment and how could there be wealth by bits.

(Translation by Dr N.P.Unni)

tags- பெண் சுதந்திரம், சந்தோஷம்

*

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: