
WRITTEN BY LONDON SWAMINATHAN (News Editor, Producer, Gnanamayam)
Post No. 8863-D
Date uploaded in London – –27 OCTOBER 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
அக்டோபர் 26-ம் தேதி — திங்கட் கிழமை
உலக இந்து சமய செய்தி மடல்
தொகுத்து வழங்குபவர் வைஷ்ணவி ஆனந்த்
இது ‘ஆகாச த்வனி’ யின் உலக இந்து சமய செய்தி மடல் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்,
நமஸ்காரம் செய்திகள் வாசிப்பது VAISHNAVI ANAND
எங்கள் நிகழ்ச்சிகளை திங்கட்கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல் 1 மணிக்கும், இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் நேரடியாகக் கேட்கலாம். உலக இந்து சமய செய்தித் தொகுப்புடன் நேயர்களின் கேள்விகளுக்கும் விடைகளும் அளிக்கப்படுகிறது.
உங்கள் பேட்டை, நகரத்தில் நடைபெறும் விழாக்கள், உற்சவங்கள் பற்றி எங்களுக்கு செய்தி அனுப்புங்கள்.
எங்களை எந்நேரமும் தொடர்பு கொள்ள Facebook.com / Gnana mayam முகவரியில் அணுகவும்
XXXX
நாடு முழுவதும் நவராத்ரி விழா இனிதே முடிந்து விஜயதசமியில் இன்று காலடி எடுத்து வைத்தது
xxxx
ஆர். எஸ் . எஸ். என்று அழைக்கப்படும் ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கத்தின் தலைவர் ஆண்டுதோறும் ஸ்தாபக தினமான விஜய தசமியில் நடத்தும் உரை நாட்டு மக்களால் கவனமாகக் கேட்கப்படும் .
இந்த ஆண்டு ஆர் எஸ். எஸ் தலைவர் மோகன் பகவத் நிகழ்த்திய உரையில் சீனாவின் ஆக்ரமிப்பு நடவடிக்கைகளை வன்மையாகக் கண்டித்துள்ளார். அருகாமை நாடுகளுடன் இந்தியா தனது உறவுகளை பலப்படுத்துவதன் மூலம் சீனாவின் ஆக்ரமிப்பு முயற்சிகளை முறியடிக்க வேண்டும் என்றார் .
இந்த ஆண்டு ஆர். எஸ் எஸ். தலைவர் நிகழ்த்திய சொற்பொழிவினை துரதர்ஷன் நேரடியாக ஒளிபரப்பியதை தேச பக்தர்கள் அனைவரும் வரவேற்றனர் ..

மக்கள் குடியுரிமைச்சட்ட திருத்தம் எந்த ஒரு சமூகத்துக்கும் எதிரானதல்ல என்றும் ஆனால் சில அரசியல்வாதிகள் இதை தவறாக விளக்கி மக்களை தவறான வழியில் நடத்திச் செல்ல முயற் சப்பதாகவும் சொல்லி அதைக் கண்டித்தார்.
Xxxx
கொரோனா காரணமாக, மார்ச் மாதம் நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அப்போது, திருமலை திருப்பதி கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்யவும் தடை விதிக்கப்பட்டது.
பின்னர் ஜூன் 11ம் தேதி கட்டுப்பாடுகளுடன் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆனாலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்ததால் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை செய்யப்பட்டது.
இந்நிலையில் ஏழுமலையான் கோவிலில் இன்று முதல் இலவச தரிசனத்துக்கு அனுமதி தரப்படும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
Xxxx
பெண்கள் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறாக கருத்து தெரிவித்ததாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திருமாவளவன் மீது பாஜகவைச் சேர்ந்த அஸ்வத்தாமன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தற்போது வழக்கு பதிவு செய்துள்ளனர். கலகம் செய்யத் தூண்டுதல், உள்நோக்கத்துடன் தவறான தகவல்களை பரப்புதல் உள்ளிட்ட பிரிவுகளில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன்னதாக, ஐரோப்பிய பெரியார்- அம்பேத்கர் படிப்பு வட்டத்தின் சார்பில் நடைபெற்ற இணையக் கருத்தரங்கில் பங்கேற்று பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், சனாதன – மனுஸ்மிருதுகளை மேற்கோள் காட்டி பேசினார்.
மனுதர்மம் பெண்களை இழிவுசெய்கிறது என்ற கூறிய தொல். திருமாவளவன் அதிலிள்ள சில கருத்துக்களையும் எடுத்துரைத்தார்.
இந்நிலையில், பெண்களை இழிவுபடுத்தியதாக, தொல். திருமாவளவன் மீது சைபர் கிரைம் காவல்துறை 6 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தது.
பெரம்பலூர் இந்து முன்னணி செயலாளர் கண்ணன் கொடுத்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீஸ் ஸ்டே ஷனில் மேலும் ஓரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் திருமாவளவன் இந்து மதத்தைப் பழி க்கும் விதத்தில் பேசுவதாகவும் இதனால் வகுப்புகளிடையே பதட்டம் அதிகரிப்பதாகவும் கண்ணன் குறம் சாட்டியுள்ளார்
xxxxx
ஆந்திர மாநிலத்தில் இருந்தும் தெலுங்கானா மாநிலத்தில் இருந்தும் இரண்டு செய்திகள் வந்துள்ளன.
ஆந்திரத்தில் விஜயவாடா நகர இந்திர கேலாத்ரி மலையிலுள்ள கனக துர்கா கோவிலுக்கு துர்கா தேவியின் பிறந்த நட்சத்திரமான மூல நட்சத்திரத்தன்று ஆண்டுதோறும் ஒரு லட்சம் பக்தர்கள் வரை வருவார்கள் ஆனால் இந்த ஆண்டு வைரஸ் தொற்று நோய்ப் பரவல் தடுப்பு காரணமாக 25000 பக்தர்கள்தான் மூல நட்சத்திர நாளன்று வந்தனர். இது ஒருபுறமிருக்க, தெலிங்கா னாவிலிருந்து ஒரு சுவையான செய்தி வந்துள்ளது. ஹைதராபாத் நகரை வெள்ளமும் மழையும் மாறிமாறி தாக்கிவருகிறது.

வெள்ளப்பெருக்கெடுத்தோடும் முசி நதி நகருக்குள் நுழையாமல் இருக்க வேண்டி அந்த நதியின் தேவதைக்கு பூஜை வழிபாடுகள் செய்யப்பட்டன. இதில் உட்துறை அமைச்சர் முகமது அலி யும், கால்நடை வளத்துறை அமைச்சர் தலசானி ஸ்ரீனிவாச யாதவும் கலந்து கொண்டனர். முஸ்லீம் அமைச்சர் நதி தேவதை வழிபாட்டில் பங்கு கொண்டது குறிப்பிட்டது தக்கது..
மூசா கதரி தர்காவிலும் அமைச்சர்கள் சிறப்பு வழிபாடு செய்தனர். இது ஒருபுறமிருக்க 1908ம் ஆண்டில் 200 பேரை வெள்ளத்திலிருந்து காப்பாற்றிய புளியமரத்துக்கும் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. இந்த மரம் இன்னும் காய்த்துப் பலன் கொடுத்துவருகிறது. அமைச்சர்களும் ஹைதராபாத் நகர மேயர் ராம் மோகன், துணை மேயர் பாபா பசியுதீனும் புளியமர வழிபாட்டில் கலந்து கொண்டனர்.
Xxxx
கேரளத்திலிருந்தும் ஒரு சுவையான செய்தி கிடைத்து இருக்கிறது. காசர்கோடு மாவட்டத்திலுள்ள அனந்த பத்ம நாப சுவாமி கோவில் குளத்தில் 70 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு முதலை வசித்து வருகிறது. அதன் பெயர் பபியா. இது சுத்த சைவம் என்றும் மீன் களைக்கூட சாப்பிடாமல் கோவில் பிரசாதத்தை மட்டும் சாப்பிடும் வெஜிட்டேரியன் என்றும் நல்ல பெயர் எடுத்தது. இந்த முதலை பபியா. திரென கோவிலுக்குள் நுழைந்தது பெரிய செய்தியாக மலர்ந்தது. 70 ஆண்டுகளில் கோவிலுக்குள் வராத முதலை திடீரென்று வந்த செய்தி காட்டுத் தீ போல பரவவே பலரும் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து சமூக ஊடகங்களில் இடம்பெறச் செய்தனர். பூசாரி சந்திரசேகரன் முதலையை வேண்டிக்கொண்டதன் பேரில் அது மீண்டும் குள த்துக்கே சென்றுவிட்டது.
xxxxx
இத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன………………………….. செய்திகளை உங்களுக்கு வழங்கியவர் வைஷ்ணவி ஆனந்த்………………………… நன்றி, வணக்கம் ……………….

அடுத்ததாக பெங்களூரிலிருந்து திருமதி பிரஹந்நாயகி சத்ய நாராயணன் , கர்நாடகச் செய்தி மடலை வழங்குகிறார்.
இதோ பிரஹந்நாயகி ……………………………….
TAGS- உலக இந்து செய்தி மடல் 261020