
Post No. 8865
Date uploaded in London – – 28 OCTOBER 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
நவீன ஞான மொழிகள் – 5
Compiled by Kattukutty
T V- லெ ரொம்ப நேரமா சேனல மாத்தாம இருந்தா ஒண்ணு ரிமோட் சரியில்லாம இருக்கணும், இல்லே மனசு சரியில்லாம இருக்கணும்!
XXXX
அம்மா,இன்னிக்கு எங்க ஸ்கூல்ல ஒரு நல்ல சேதி, ஒரு கெட்ட சேதி.
அம்மா- முதல்ல நல்ல சேதியை சொல்லு???
எங்க ஸ்கூல் தீப்பிடிச்சு எல்லாம் எரிஞ்சு போச்சு…..
சரி, கெட்ட சேதி என்ன???
எல்லா வாத்தியானுங்களும் தப்பிச்சிட்டானுங்க……
XXXX
கடலுக்கடிலே கொசு கிடையாது ஏன் தெரியுமா???
கடல்ல “டார்ட்டாய்ஸ்”இருக்கு!!!
TORTOISE — ANTI MOSQUITO STUFF IN INDIA

XXX
நைட்ல கொசு கடிச்சா “குட் நைட்” வைக்கலாம் ,
பகல்ல கடிச்சா குட்மார்னிங் வைக்க முடியுமா???
GOOD NIGHT – ANOTHER ANTI MOSQUITO STUFF
XXX

திருவள்ளுவர் இப்போதிருந்து திருக்குறள் எழுதியிருந்தாலும்,
இறுதி வரியில் “உண்மையான தமிழனாக இருந்தால் இதை
ஷேர் செய்” என்றே எழுதியாகணும்!!!
XXXX
மிடில் கிளாஸ் வாழ்க்கை எவ்வளவு கஷ்டம் தெரியுமா???
எதிர்த்த வீட்டுக்காரன் பார்த்தா பணக்காரனாக நடிக்கணும்…
சொந்தக்காரன் கடன் கேட்டா ஏழையா நடிக்கணும்…….
XXXX
நாட்டில பாகுபலி மட்டும் தான் பொண்டாட்டி கூட சேர்ந்து
எதிரியோட சண்டை போடறான்;
மத்தவனுங்களுக்கெல்லாம் பொண்டாட்டி கூட சண்டை போடவே
நேரம் சரியாயிருக்கு
XXXX
எதுக்கு வாங்கினோமோ அதைத் தவிர மற்ற எல்லாத்துக்கும்
பயன் படுத்தப்படும் ஒரு பொருளின் பெயர் “டைனிங் டேபிள்”!!!!
XXXX
தனிமை என்பது நிம்மதியாக போனை நோண்டிக் கொண்டிருப்பது!!!
XXXX
எது வேண்டும் என்று நீ ஆசைப் பட்டாயோ அது வேண்டாம் என்று உன்
வாயாலேயே சொல்ல வைப்பதுதான்டா வாழ்க்கை!!!
XXX
சாவியைத் தொலைத்தது நான்……
தண்டனை பூட்டுக்கு???
XXXX
வாசிக்காமல் வைத்திருப்பது ஒரு புத்தகத்திற்கு செய்யும் வன்முறை!!!
XXXX
எல்லோரையும் நம்புங்க துரோகம் பழகிடும்……..
யாரையுமே கண்டுக்காதீங்க தன்னம்பிக்கை தானா வளரும்!!.,
XXXX
விசா இல்லாமல் வியட்னாம் வரைக்கும் போயிடலாம்,
ஆனா வேலை இல்லாமல் சொந்தக்காரன் வீட்டுக்கு மட்டும்
போக முடியாது !!!
XXXXX
உயர உயரத் தான் நமக்கு மேலே எத்தனை பேர் உள்ளார்கள்
என்று புரிகிறது !!!
XXXX

பொருத்தமில்லாத ஜோடிகள் செருப்பாகாகக் கூட இருக்க முடியாது!!!
XXXX
ஒவ்வொரு கை பேசியிலும், தொடர்பு கொள்ள முடியாத, ஆனால்
அழித்துவிட மனமில்லாத எண்கள்…..
XXXX
நேற்று வைத்த வாட்டர் பாட்டிலில் இருக்கும் தண்ணீர் மீது வரும்
சந்தேகம் ஒரு வாரமாக இருக்கும் கேன் தண்ணீரின் மீது
வருவதில்லை!!!
XXXX!
சதுரங்கத்தில் கூட மந்திரிகள் நேர் வழியில் பயணிப்பதில்லை!!!
XXXX
மருமகள் நைட்டி போட்டதினால் சண்டை வந்த வீடுகளெல்லலாம்
பேத்திகள் “லெக்கிங்க்ஸ்” போட்டு கலக்குகிறார்கள்!!!
XXXX
ஊட்டி, கொடைக்கானலுக்கு கல்யாணம் ஆனவுடன் போகலாம்ன்னு
கனவு கண்டு அப்புறம் கைல ஒரு குழந்தையுடன் செல்வார்கள்
மிடில் கிளாஸ் பேமிலிகள்!!!!
TO BE CONTINUED…………………………………………………….
TAGS– நவீனஞானமொழிகள் – 5