வீரன் சாவதே இல்லை, கோழை வாழ்வதே இல்லை! (Post No. 8869)

WRITTEN BY KATTUKKUTY

Post No. 8869

Date uploaded in London – – 29 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

நவீன ஞான மொழிகள் – 6

ஹாலிவுட் படங்களில் மது அருந்தும்போது எச்சரிக்கை வாசகங்கள் போடுவதில்லை ……….ஏன்???

பாரின் சரக்கு உடம்புக்கு ஒண்ணும் செய்யாது என்பதினால்!!!.,

xxx

நாவல் எத்தனை பக்கமாக இருந்தாலும் நமது தூக்கம் எத்தனாவது பக்கத்தில் இருக்கிறது என்று கண்டு பிடிப்பதில் தான் சுவாரஸ்யமே இருக்கிறது!!!!

xxx

முன்பெல்லாம் வெளியே கிளம்பும்போது சகுனம் பார்ப்பார்கள்……

இப்போது “சார்ஜ்” புல்லா இருக்கான்னு பார்கிறார்கள்………

xxx

கோடி ரூபாய் கொடுத்து வீடு கட்டினாலும் போனுக்கு டவர் இல்லையென்றால் வெளியேதான் வரவேண்டும்.

xxx

தோசைக்கல் உள்ளே இருந்தால் உயர்தர ஹோட்டல்…..

வெளியே இருந்தா சாதா ஹோட்டல்……..

xxx

வாக்கிங் walking  போறது எளிது தான்,

ஆனா வாக்கிங் போக எந்திரிக்கறதுதான் கஷ்டமானது!!!!

xxxx

உலகத்திலேயே ஸ்பீடு பிரேக் ஹம்ப் ஓரத்திலே ஒரு பாதையை

உண்டாக்கி அதுல வண்டி ஓட்டற டெக்னிக் நம்மாளுங்களைத்

தவிர வேறு யாருக்கும் வராது !!!!

xxxx

ப்யூட்டி பார்லர்ல beauty parlor போன மறுநாளே “ஐஸ்வர்ய ராய்” போல பீல்

பண்ணுவங்க பொண்ணுங்க !!!

ஜிம்முக்கு போன அன்னிக்கே ஆர்னால்டு போல “ஸ்டேடஸ்”

போடுவானுங்க நம்ம பசங்க………

xxxx

ஆபீஸ் போற அன்னிக்கெல்லாம் 9 மணி வரை தூக்கம் வரும்

சண்டே அன்னிக்கு மட்டும் 7 மணிக்கு மேல வராது…

xxxx

சில காயங்கள் மருந்தால் குணமாகும்

சில காயங்கள் மறந்தால் குணமாகும்

xxxx

கார் இருந்தால் ஆடம்பரமாக வாழலாம்!!!

சைக்கிள் இருந்தால் ஆரோக்கியமாக வாழலாம்!!!

xxxx

மனிதனுக்கு பிரச்சினை என்றால் கடவுளுக்கு அர்ச்சனை!!!

xxxx

வறுமை வந்தால் வாடக் கூடாது, வசதி வந்தால் ஆடக் கூடாது!!!

xxxx

வீரன் சாவதே இல்லை, கோழை வாழ்வதே இல்லை…..

xxxx

தவறான பாதையில் வேகமாக செல்வதை விட சரியான பாதையில்

மெதுவாகச் செல்வதே மேல்!!!

xxxx

நீ ரசிக்க அழகு என்னிடம் இல்லை, ஆனால்

நீ வசிக்க என்னிடத்தில் இதயம் இருக்கிறது!!!

xxxx

மனிதனுக்கு A B C D தெரியும், ஆனால் QUEUE வில் போகத்தெரியாது……..

எறும்புக்கு A B C D தெரியாது, ஆனால் QUEUE வில்

போகத் தெரியும் !!!

xxx

உண்மை எப்போதும் சுருக்கமாக பேசப்படுகிறது.

பொய் எப்போதும் விரிவாக பேசப்படுகிறது………

xxxx

கறுப்பு மனிதனின் ரத்தம் சிவப்பு தான்…..

சிவப்பு மனிதனின் நிழலும் கறுப்பு தான்…….

xxx

வண்ணங்களில் இல்லை வாழ்க்கை, மனித எண்ணங்களில்

உள்ளது வாழ்க்கை!!!!

xxx

தேவைக்காக கடன் வாங்கு, கிடைக்கிறதே என்பதற்காக

வாங்காதே!!!

xxx

கடினமாக உழைத்தவர்கள் முன்னேறவில்லை,

கவனமாக உழைத்தவர்கள் முன்னேறியுள்ளனர்!!!

xxx

வியர்வைத் துளிகள் உப்பாக இருக்கலாம், ஆனால்

அவை வாழ்க்கையை இனிப்பாக மாற்றும்!!!

xxxx

செலவு போக மீதியைச் சேமிக்காதே

சேமிப்பு போக மீதியைச் செலவு செய்!!!

xxx

கடனாக இருந்தாலும் சரி, அன்பாக இருந்தாலும் சரி,

திருப்பி செலுத்தினால் தான் மதிப்பு

xxx

உன்னை நீ செதுக்கிக் கொண்டே இரு, வெற்றி பெற்றால் சிலை,

தோல்வி அடைந்தால் சிற்பி !!!

—subham—

tags – நவீனஞானமொழிகள் – 6

Leave a comment

1 Comment

  1. R Nanjappa

     /  October 29, 2020

    “ப்யூட்டி பார்லர்ல beauty parlor போன மறுநாளே “ஐஸ்வர்ய ராய்” போல பீல்

    பண்ணுவங்க பொண்ணுங்க !!!

    ஜிம்முக்கு போன அன்னிக்கே ஆர்னால்டு போல “ஸ்டேடஸ்”

    போடுவானுங்க நம்ம பசங்க………”

    இதில் ஒரு பெரிய மனோதத்துவ உண்மை பொதிந்து கிடக்கிறது! நம்மைப் பற்றி நாம் கொண்டுள்ள மன உருவகமே நம்மைத் தூண்டும் சக்தியாக இயங்கி நம்மை முன்னேற்றப்பாதையில் செல்ல ஊக்குவிக்கிறது!
    இதை SELF IMAGE PSYCHOLOGY என்ற பெயரில் அறிமுகப்படுத்தி விளக்கி எழுதினார் MAXWELL MALTZ என்ற அமெரிக்க Plastic Surgeon..
    PsychoCybernetics என்ற புது சொல்லை அறிமுகப்படுத்தினார். Cybernetics is directing or guiding the mind to a new, productive purpose or goal. நாம் நம்மைப்பற்றி
    நம் மனதில் கொண்டுள்ள உருவம்/உருவகம் (எண்ணம் மட்டுமல்ல) நம்மை உந்தும் சக்தியாக இயங்குகிறது. ஆகவே நாம் நம்மைப்பற்றி நல்ல உருவத்தையே மனதில் இருத்தவேண்டும் என்று அவர் எழுதினார். பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டவர்களின் மன நிலை எப்படி உயர்ந்து அவர்களுடைய தயக்கமும் ஊக்கமின்மையும் மறைந்து தன்னம்பிக்கை கூடுகிறது என்று எடுத்துக்காட்டினார். 1960ல் வந்த முதல் புத்தகத்தைத் தொடர்ந்து [ Psycho Cybernetics /Self Image Psychology ] மேலும் இரண்டு புத்தகங்கள் எழுதினார்.
    Beauty Parlour ம் Gymமும் நம் வனப்பையும் வலிவையும் உண்மையாகவே கூட்டாவிட்டாலும் கூட்டிக் காண்பிக்கவாவது செய்யும் இடங்கள் தானே!

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: