
WRITTEN BY S NAGARAJAN
Post No. 8879
Date uploaded in London – – –2 NOVEMBER 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
ச.நாகராஜன்
ஹிந்துக்கள் அயோத்தியை மீட்க மீண்டும் நவாப் நசிருத்தீன் ஹைதர் (Nawab Nasiruddin Haider) ஆளுகையில் முயற்சி செய்தனர். பல ஹிந்து மன்னர்கள் ஒன்று சேர்ந்தனர். சண்டை எட்டு நாட்கள் நீடித்தது. நவாபின் சேனை ஹனுமான்காடியை அடைந்தது. அங்கு ஹிந்து சேனைகளுக்கு சாதுக்களின் உதவி கிடைத்தது. அனைவரும் இணைந்து ஒருவாறாக நவாபின் சேனையைத் துரத்தி அடித்தனர். ராமஜென்ம பூமியைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.

ஆனால் இந்த வெற்றி நீடித்து நிலைக்கவில்லை. நவாபின் சேனை மீண்டும் ராம ஜென்ம பூமியைக் கைப்பற்றியது.
ஹிந்துக்கள் மனம் தளரவில்லை; தங்கள் முயற்சியைத் தொடர்ந்தனர். நவாப் வாஜித் அலி ஷா (Nawab Wajid Ali Shah) ஆளுகையில் அவருக்கு எதிராக இரண்டே இரண்டு அரசர்களைத் தவிர இதர அனைத்து ஹிந்து மன்னர்களும் ஒருங்கிணைந்தனர். போராட்டம் தொடர்ந்தது.
இதைப் பற்றி கன்னிங்ஹாமின் (Cunningham) ஒரு சிறு குறிப்பு ஃபைஜாபாத் இலக்கியத் தொகுப்பிலிருந்து (Faizabad Literary Collection) வெளியிடப்பட்டிருக்கிறது.
அவர் கூறுவது : அயோத்தியைக் கைப்பற்ற முஸ்லீம்களும் ஹிந்துக்களும் சண்டையிடுவதை நவாபின் ஆங்கில சேனை பார்த்துக் கொண்டிருந்தது. சண்டை இரு நாட்கள் நடந்தது. வீடுகள், மசூதிகள் தரைமட்டமாக்கப்பட்டன. ஆடு, மாடுகளும் கூட கொல்லப்பட்டன.ஆனால் இவ்வளவு தீவிரமான போரிலும் கூட ஹிந்துக்கள் தங்களின் தர்மத்தைக் கைவிடவில்லை. அவர்கள் முஸ்லீம் பெண்களையும் குழந்தைகளையும் தாக்கவில்லை; கொல்லவில்லை. முஸ்லீம்கள் அயோத்தியை விட்டு ஓடினர்.
நிலைமை தங்களது கையை விட்டு மீறி விடும் என்பதை உணர்ந்த நவாபின் சேனை அயோத்தியில் போக்குவரத்திற்குப் பல கட்டுப்பாடுகளை விதித்தது.
மஹாராஜா மான்சிங் நவாபுடன் கலந்து ஆலோசனை செய்தார். அயோத்தியில் ராமர் சிலை இருந்த மேடையை மீண்டும் அமைக்கச் செய்து அங்கு மீண்டும் ராமர் சிலையை நிறுவச் செய்தார். உடனடியாக ஒரு தற்காலிக கோவிலும் அமைக்கப்பட்டது.
பிரிட்டிஷார் அரசாட்சி செய்த காலத்திலும் கூட ஹிந்துக்கள் ராம ஜென்ம பூமியில் ஒரு ராமர் கோவிலைக் கட்ட வேண்டும் என்ற தங்கள் இலட்சியத்தை விடவில்லை.
1912இல் அவர்கள் கோவில் கட்ட எடுத்த முயற்சியை பிரிட்டிஷார் தடுத்து நிறுத்தி விட்டனர்.
1934ஆம் ஆண்டு ஹிந்துக்கள் அயோத்தியில் பிரிட்டிஷ் சேனையை மீறி மசூதிக்கு நிறைய சேதத்தைச் செய்தனர்.
என்றபோதிலும் ஜே.பி. நிக்கல்ஸன் (J.P. Nicholson) என்ற பிரிட்டிஷ் அதிகாரி சேதத்தைச் சரி செய்தார்; மீண்டும் மசூதி கட்டப்பட்டது.
ஒரு சிறிய அறிவிப்பு பலகை அங்கு தொங்கவிடப்பட்டிருக்கிறது.
தஹவார் கான் ஹிந்துக்களால் 27-3-1934 (1352 ஹிஜ்ரி) அன்று அழிக்கப்பட்ட மசூதியை மீண்டும் கட்டினார். (Tahawwar Khan rebuilt the mosque destroyed by the Hindus on 27-3-1934 – 1352 Hijri)
இப்படிப்பட்ட ஒரு தொடர் போராட்டத்தை ஹிந்துக்கள் கடந்த பல நூறாண்டுகளாக அயோத்தி ராமர் கோவிலுக்காகச் சந்தித்து வந்திருக்கின்றனர்.
இதற்கான உயிரிழப்புப் பட்டியல் தனி!
அவுரங்கசீப்பின் சில கொடுமைகளை இனி பார்ப்போம்.
*** தொடரும்
tags- அயோத்யா -3, உண்மைகள் – 3
