அயோத்யா – சில உண்மைகள்! – 4 (Post No.8883)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8883

Date uploaded in London – – 3 NOVEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

அயோத்யா – சில உண்மைகள்! – 4

ச.நாகராஜன்

அவுரங்கசீப்பின் அரசு ஆணைகள் (Farman) பிகானீரில் உள்ள ராஜஸ்தான் ஆவணகூடத்தில்  (Bikaner, Rajasthan archives) இன்றும் உள்ளன.

இந்த அரசு ஆணைகளின் ஆங்கில மொழியாக்கம் தெளிவாகச் செய்யப்பட்டுள்ளன.

அவற்றைத் தமிழில் இங்கு பார்ப்போம்.

  1. 1665ஆம் ஆண்டு ஏப்ரல் 7ஆம் தேதி அவுரங்கசீப் ஒரு அரசு ஆணையை (Farman) வெளியிட்டான். அதில் யாரெல்லாம் ஒரு ஹிந்து ஆண்மகனை இஸ்லாமுக்கும் மாற்றுகிறாரோ அவருக்கு ரூ 4ம், யாரெல்லாம் ஒரு ஹிந்து பெண்ணை இஸ்லாமுக்கு மாற்றுகிறாரோ அவருக்கு ரூ 2ம் பரிசாக வழங்கப்படும் என்று அறிவித்தான்.
  2. 1667ஆம் ஆண்டு ஏப்ரல் 11ஆம் தேதி 150 ஹிந்துக்களை இஸ்லாமுக்கு மாற்றியதற்காக பௌஜ்தார் ஷேக் அபுதுல் மொமினுக்கு (Faujdar Sheik Abdul Momin) பணத்தை வழங்க ஆணையிட்டான்.
  3. 1669ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் காசி விஸ்வநாதர் ஆலயத்தை தரைமட்டமாக்கி அங்கு ஒரு மசூதியைக் கட்ட அரசு ஆணையை வெளியிட்டான்.
  4. 1670 ஜனவரி மாதம் கிருஷ்ணர் கோவிலை இடித்து விட்டு அங்கிருந்த தெய்வச் சிலைகளை பேகம் ஷாஹிபா மசூதியின் மாடிப்படியில் (on the stairs of Begum Sahiba Masjid) வைக்க அரசு ஆணையை வெளியிட்டான்.
  5. 1679அம் ஆண்டு மே மாதம் 25ஆம் தேதி அவன் வெளியிட்ட அரசு ஆணை ஒன்று ஜோத்பூரில் உள்ள ஹிந்து கோவில்களில் உடைக்கப்பட்ட சிலைகளை வண்டிகளில் ஏற்றிக் கொண்டு வருமாறும் அவற்றை ஜம்மா மசூதி (Jama Masjid) மாடிப்படிகளின் அடியில் வைக்குமாறும் கான் பகாதூருக்கு (Khan Bahadur) உத்தரவிட்டதைத் தெரிவிக்கிறது.
  6. 1679ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அவன் வெளியிட்ட அரசு ஆணை ஒன்று உதய்பூர் ஏரியைச் சுற்றி உள்ள கோவில்கள் அனைத்தையும் தரைமட்டமாக்க ஹாஸன் கானுக்கு (Hasan Khan) அவன் உத்தரவிட்டதைத் தெரிவிக்கிறது.
  7. முகரம் நாளன்று 172 கோவில்களை ஹாஸன் கான் தரைமட்டமாக்கியதற்காக (சந்தோஷப்பட்ட) அவுரங்கசீப் அவனுக்கு ‘ஆலம்கீர் ஷாஹி’ (Alamgeer Shahi) என்ற பட்டத்தை 1680ஆம் அண்டு ஜனவரி 29ஆம் தேதியன்று கொடுத்து கௌரவித்தான்.
  8. 1681ஆம் ஆண்டு ஜுன் மாதம் முதல் தேதியன்று அவுரங்கசீப் வெளியிட்ட அரசு ஆணை ஒன்று வங்காளத்தின் சுபேதாரான அமீர் உம்ராவை (Subedar of Bengal Amir Umra) ஒரிஸாவில் உள்ள ஜகந்நாதர் ஆலயத்தைத் தரைமட்டமாக உத்தரவிட்டதைத் தெரிவிக்கிறது.
  9. 1681ஆம் ஆண்டு ஜுன் மாதம் 17ஆம் தேதி அவுரங்கசீப் வெளியிட்ட அரசு ஆணை ஒன்று கர்தலாப் கானை (Kartalab Khan) சத்ரபதி சாம்பாஜியின் நான்கு சேவகர்களை வலுக்கட்டாயமாக (இஸ்லாமுக்கு) மதமாற்றம் செய்யச் சொன்னதைத் தெரிவிக்கிறது.
  10. 1681ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அவுரங்கசீப் வெளியிட்ட அரசு ஆணை ஒன்று பேல்தர் டரோகாவை சந்திற்கு செல்லும் வழியில் உள்ள அனைத்துக் கோவில்களையும் தரைமட்டமாக்க உத்தரவிட்டதைத் தெரிவிக்கிறது. (to the Daroga of Beldar to break all the temples on way to Chand)
  11. 1682அம் ஆண்டு செப்டம்பர் மாதம் அவுரங்கசீப் வெளியிட்ட அரசு ஆணை வாரணாசியில் உள்ள மதாப் விந்து ஆலயத்தை இடித்து விட்டு அங்கு ஒரு மசூதியைக் கட்ட உத்தரவிட்டதைத் தெரிவிக்கிறது. ( to construct a mosque after breaking the temple of Vindu madhab in Varanasi)

இப்படிப்பட்ட கொடூரமான அரசு ஆணைகள் (Farman) ஒரு புறம் இருக்க அவன் செய்த கொலைபாதகச் செயல்கள் நல்லோரின் உள்ளங்களை நடுங்கச் செய்யும்.

அவற்றில் சில :-

இஸ்லாமுக்கு மாற மறுத்த பாய் மதிதாஸை பெரிய ரம்பத்தால் இரண்டாக அறுக்க உத்தரவிட்டான் அவுரங்கசீப். (Bhai Matidam cut into two pieces with a large Hacksaw)

பாய் சதிதாஸை உடல் முழுவதும் பஞ்சால் சுற்றி அவரை உயிரோடு எரிக்க உத்தரவிட்டான் அவுரங்கசீப். ( Bhai Satidas was burnt alive after being wrapped with cotton)

பாய் தயாளரை உயிரோடு கொதிக்கும் நீரில் போட உத்தரவிட்டான் அவுரங்கசீப். (Bhai Dayala by boiling him alive to death)

ஹிந்து தர்மத்தை விட்டு ஒரு நாளும் இஸ்லாமுக்கு மாற மாட்டோம் என்று உறுதியுடன் கூறிய மகான்கள் தாம் இந்த மூன்று பேரும்.

இன்று ஹிந்துக்களாக நாம் இருக்கின்றோம் என்றால் இப்படிப்பட அரும் மகான்களின் உயிர் தியாகத்தால் தான் என்பதை நன்றியுடன் நாம் நினைவு கூர்வோமாக.

இப்படிப்பட்ட மகான்களின் வரலாறுகள் நம் பாடதிட்டங்களில் இல்லை; அது ஒரு புறம் இருக்கட்டும்.

இதை இப்படி எழுதினாலேயே அல்லது சொன்னாலேயே எழுதியவர் அல்லது சொன்னவர் ஆண்டி செகுலரிஸ்ட் என முத்திரை குத்தப்படுவார்.

‘ஹிந்துயிஸம் பேசுபவன்’ என்று முத்திரை குத்தப்படுவார். (ஆனால் ஒரு ஹிந்து தான் அனைத்து மதங்களையும் மதிப்பவன்; அனைவரும் சுகமாக வாழட்டும் – சர்வே ஜனா சுகினோ பவந்து – என்று அன்றாடம் பிரார்த்திப்பவன்!)

அதாவது ஹிந்துக்களுக்கு எந்த கொடுமைகள் நேர்ந்தாலும் பேசக் கூடாது;

ஹிந்துக்களின் பெருமையையும் உரிமையையும் நிச்சயமாகக் கூறக் கூடாது.

இந்த நிலைமையை மாற்ற ஒவ்வொரு ஹிந்துவும் முயற்சி எடுக்க வேண்டும்!

இதுவே இன்றைய உடனடி அவசரத் தேவை.

ஆதாரம், நன்றி : Truth Weekly Vol 88 No 7  21-8-2020 issue

***

இந்தக் குறுந் தொடர் முற்றும்

 tags – அயோத்யா -4

Leave a comment

1 Comment

  1. Venkataraman Kumbakonam Sambasiva

     /  November 4, 2020

    அன்னிய மதத்தினர் இந்து மதத்தை அழிப்பதற்காகச் செய்த கொடுமைகள் கணக்கிலடங்காதவை.
    இவற்றில் எல்லாம் மிகப்பெரிய கொடுமை, இந்துக்களில் சிலரை நயமாகவும், பலரை வன்முறையாலும் தங்கள் மதத்தில் சேரவைத்து, இந்துக்களுக்கு எதிராகத் திருப்பியுள்ளதுதான்.
    இதைக்காட்டிலும் மன்னிக்க இயலாத கொடுமை, ஒருவன் கையைக்கொண்டே அவன் கண்களைக் குத்துவதுபோல, இந்து மதத்தைச்சேர்ந்தவர்களில் பலரை பொய்யுரைகளாலும், வஞ்சனையாலும், இந்து மத துவேஷிகளாகவும், துரோஹிகளாகவும் செயற்படவைத்தது.
    எந்த மதத்தினரையும் அழிக்கவேண்டும், கெடுக்கவேண்டும் என்று எந்த இந்துவும் எதுவும் செய்யமாட்டான். ஆனால், ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக அல்லல் பட்டும்கூட, மேலும் மேலும் இந்துமதத்திற்கு எதிராகத் திட்டமிட்டு செயல்படுபவர்களை அடையாளம் காணவில்லை என்றால், அத்தகைய கயவர்களிடமிருந்து இந்து மதத்தைக் காப்பாற்ற வேண்டியதின் அவசியத்தை உணரவில்லை என்றால், அவர்களை என்னவென்று எண்ணுவது?

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: