கிறிஸ்தவப் பிரசாரத்துக்கு எதிர்ப் பிரசாரம் (Post No.8887)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8887

Date uploaded in London – – 4 NOVEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

கிறிஸ்தவ மதம் பற்றி…….

லண்டனிலிருந்து இந்திய நேதம் மாலை 6.30 மணிக்கு 2-11-2020 அன்று ஞானமயம் சேனல் ஒளி பரப்பில் ஒளி பரப்பப்பட்ட உரை.

IF YOU WANT TO LISTENT TO TALK, PLEASE GO TO FACEBOOK.COM/GNANAMAYAM

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே சந்தானம் நாகராஜன் வணக்கம்.

இன்று நம் முன் இருக்கும் கேள்வி, “கிறிஸ்தவ மதம் பற்றியும் அவற்றின் கொள்கைகளை நிராகரிக்கும் புத்தகங்கள் பற்றியும் படித்தேன். இது போல இன்னும் பல தகவல்களைத் தர முடியுமா, அவற்றை எப்படிப் பெறலாம் என்பதாகும்.”

யாழ்ப்பாண கிறிஸ்தவ மத கண்டன சபையின் சார்பில் உடுப்பிபட்டி ஆறுமுகபிள்ளை எழுதியுள்ள நூல்  1890ஆம் ஆண்டு பிரிட்டிஷ் நூலகத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறது. மிகத் தெளிவான பல காரணங்களைக் கூறி அவர் கிறிஸ்தவத்தை நிராகரிக்கிறார். கிறிஸ்தவத்தின் பல உட்பிரிவுகளையும் அவர் சுட்டிக் காட்டுகிறார். இது பற்றி ஆய்வு செய்யும் ஒரு அன்பர் இந்தக் கேள்வியைக் கேட்டிருக்கிறார்.

கடந்த 2000 ஆண்டு உலக வரலாற்றை எடுத்துப் பார்த்தால் மத பிரசாரத்தின் பெயரால் இறந்தோரின் எண்ணிக்கை சொல்லி மாளாது.

ஜெசூட் கத்தோலிக்க கிறிஸ்தவ பாதிரிகள் எடுக்கும் கடுமையான உறுதி மொழியை அப்படியே சொல்ல நா கூசுகிறது, மனம் நடுங்குகிறது என்பதால் அவற்றைச் சொல்லாமல் விடுவதே மேல்.

கிறிஸ்தவ பாதிரிகளுக்கு எதிராக ராபர்ட் கிரீன் இங்கர்ஸால் பொங்கி எழுந்தார். அவரது உரைகளும் எழுத்துக்களும் The Works of Robert Green Ingersoll என்று பன்னிரெண்டு தொகுதிகளாக வெளி வந்துள்ளன. அவற்றில் அனைத்தையும் படிக்கலாம்.

ஸ்வாமி விவேகானந்தரின் உரைகள் -The Complete Works of Swami Vivekananda  -ஒன்பது தொகுதிகள் கொண்டதாகும். ஆகாயத்திலிருந்து விழும் நீர்த்துளி எப்படி கடலை அடைகின்றதோ அதே போல எப்படி வழிபட்டாலும் அது இறைவனை அடைகிறது என்று அவர் தனது சிகாகோ உரையில் குறிப்பிட்டார். ஸ்வாமிஜியின் உரைகளுக்கான தமிழ் பதிப்பு ஞானதீபம் என வெளி வந்துள்ளது. அதில் எட்டாம் தொகுதியில் அவர்  அமெரிக்காவில், டெட்ராய்ட்டில் ஆற்றிய உரை ஒன்று உள்ளது.

அதில் அவர் கூறினார் இப்படி: “நீங்கள் சம்பளம் கொடுத்து ஆடை கொடுத்து பாடம் சொல்லிக் கொடுத்து பயிற்சி கொடுத்து பலரை உருவாக்குகிறீர்களே, எதைச் செய்வதற்காக? என்னுடைய நாட்டிற்கு வந்து, என்னுடைய முன்னோர்களையும் என்னுடைய மதத்தையும் எல்லாவற்றையும் கேவலப்படுத்தி தூற்றுவதற்காகவா? இவர்கள் எங்களது கோவில் அருகே வந்து, “ஏ! விக்ரஹ ஆராதனைக்காரர்களே! நீங்கள் நரகத்திற்குத் தான் போவீர்கள்.” என்கிறார்கள். ஆனால் இதை இந்தியாவில் உள்ள முஸ்லீம்களுக்கு எதிராக அவர்கள் சொல்லத் துணிவதில்லை. ஏனென்றால் உடனே வாள்கள் உருவப்பட்டு விடும்… ஆனால் உங்களது பிரதிநிதிகள் எங்களை ஏளனம் செய்யும் போது அவர்கள் நினைவில் வைத்துக் கொள்ளட்டும். இந்தியா முழுவதும் ஒட்டு மொத்தமாக எழுந்து நின்று ஹிந்து மஹா சமுத்திரத்தின் அடியிலே கிடக்கும் அத்தனை சேற்றையும் வாரி மேலை நாடுகளின் மீது எறிந்தாலும் அது நீங்கள் செய்கின்ற காரியத்தின் கோடியில் ஒரு பகுதியாகக் கூட ஆகாது.”

இந்த மதமாற்றத்திற்கான பணம் எப்படி கணக்கிடப்படுகிறது என்பதை இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆசிரியராகப் பணியாற்றியவரும், முன்னாள் மந்திய மந்திரியுமான திரு அருண் ஷௌரியின் புத்தகத்தில் காணலாம்.

அவர் கிறிஸ்தவ மதமாற்றம் பற்றி Harvesting our Souls – Missonaries, their design, their claims  மற்றும் Missionaries in India ஆகிய இரு புத்தகங்களில் மிக விரிவாக எழுதியுள்ளார். முதல் புத்தகம் 432 பக்கங்கள். இரண்டாவது புத்தகம் 305 பக்கங்கள்.

எத்தனை லட்சம் டாலர்கள் இந்தியாவிற்கு வந்தது, எத்தனை தலைகள் கிறிஸ்தவத்திற்கு மாற்றப்பட்டன என்பதைக் கணக்கிட்டு ஒரு தலைக்கு ஆகும் டாலர்கள் இவ்வளவு என்று கணக்கிடப்படுகிறது. அடுத்த வருடத்திற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டு எவ்வளவு டாலர்கள் வேண்டுமோ அவ்வளவு திரட்டப்படுகிறது.

மதமாற்றம் பற்றி 1951ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட நியோகி கமிஷன் மிகத் தெளிவாக மிஷனரிகளைப் பற்றி எடுத்துரைக்கிறது. எடுத்துக்காட்டிற்கு ஒரு வரியைக் காணலாம்.

Now as to Christian Orphanages, they are undoubtedly being run to multiply the population of Christians.

கிறிஸ்தவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவே சந்தேகமின்றி கிறிஸ்தவ அனாதை இல்லங்கள் நடத்தப்படுகின்றன.

காந்திஜியை ஹார்வெஸ்ட் செய்து விட்டால் இந்தியாவையே ஹார்வெஸ்ட் செய்தது போலாகும் என்று நினைத்தார் க்ரென்ஸ்கி என்ற போலந்து புரபாஸர்.

 1937ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் தேதி போலந்திலிருந்து வந்த தத்துவ பேராசிரியரான க்ரென்ஸ்கி, மஹாத்மாவைச் சந்தித்தார்.

அவர்கள் உரையாடலை அப்படியே ஆங்கிலத்தில் பார்ப்போம்:

க்ரென்ஸ்கி :

Catholicism is the only true religion

G : Do you therefore say that other relgions are untrue?

K : If others are convinced that their religions are true they are saved.

G: Therefore you will say that everyone would be saved even through untruth.

K: But I have studied all religions and have found that mine is the only true religion.

G: But so have others studied their religions. What about them?

K: I have examined the arguments in favour of other religions.

G: But it is an intellectual examination. You require different scales to weigh spiriual truth.. My submission   is that your position is arrogant. But I suggest you a better position. Accept all religions as equal, for all have the same root and the same laws of growth.

அவ்வளவு தான புரபஸர் தான் வந்த நோக்கம் நிறைவேறாது என்பதைத் தெரிந்து கொண்டு பேச்சைத் திசை மாற்றினார். காந்திஜியிடம்  ஸ்டான்லி ஜோன்ஸ் உள்ளிட்ட இன்னும் பலர் வாதம் செய்து தங்கள் முயற்சியில் தோல்வி அடைந்துள்ளனர்.

அடுத்து பைபிளில் ஏசு கிறிஸ்து பதிமூன்றாம் வயதிலிருந்து முப்பதாம் வயது வரை எங்கிருந்தார் என்பதற்கான விவரம் இல்லை. இந்த காலகட்டத்தில் ஏசு கிறிஸ்து இந்தியாவில் இருந்தார் என்று அன்னிபெஸண்ட் அம்மையார் கூறுகிறார். இது பற்றி பலரும் எழுதியுள்ள புத்தகங்களும், ஆய்வுக் கட்டுரைகளும் உள்ளன.

மறு பிறப்பு தத்துவம் மற்றும் கர்ம பலனுக்குத் தக பிறவி ஏற்படும், அவை பிறவிகள் தோறும் தொடரும் என்பன உள்ளிட்ட பல தத்துவங்களை கிறிஸ்தவம் மறுக்கிறது: ஹிந்து மதம் வலியுறுத்துகிறது. ஹிந்து மதம் கூறுவது சரி தான் என்பதை நிரூபிக்க பல்லாயிரம் சம்பவங்கள் உள்ளன. இவற்றில் ஆதாரபூர்வமான சம்பவங்களை The Encyclopeadia of Parapsychology and Psychical Research என்ற அதீத உளவியல் பற்றிய கலைக்களஞ்சியத்தில் படிக்கலாம்.

நூற்றுக் கணக்கில் உள்ள இப்படிப்பட்ட புத்தகங்களில் பலவற்றை இணைய தளத்திலிருந்து இலவசமாக டவுன் லோட் செய்து கொள்ளலாம்.

ஹிந்து மதத்தைச் சேர்ந்த ஒரு ஹிந்து, மற்றவர் எந்த ஒரு மதத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் அவரை மத ரீதியாக புண்படுத்துவதில்லை; தன் மதத்திற்கு மதம் மாற்றவும் முயலுவதில்லை. ஒரு ஹிந்து தனது பிரார்த்தனையில் சர்வே ஜனா சுகினோ பவந்து – அனைத்து மக்களும் சுகமாக வாழட்டும் என்றே பிரார்த்திக்கிறான்.

இந்த வழியே சரி என்று ஏராளமான அறிஞர்கள் எழுதி வந்துள்ளனர்; எழுதி வருகின்றனர். குறிப்பாக ஒரே ஒருவர் கூறியதை மட்டும் இங்கு பார்க்கலாம்.

ஆர்னால்ட் டாய்ன்பி என்ற வரலாற்றுப் பேரறிஞர் A Study of history  என்பதை பன்னிரெண்டு தொகுதிகளில் எழுதி வெளியிட்டுள்ளார். சுமார் 30 லட்சம் வார்த்தைகள் கொண்ட நூல் இது. பல மதங்களையும், பல கொள்கைகள் மற்றும் தத்துவங்களையும் ஒப்பிட்ட அவர் தனது பத்தாம் தொகுதியின் இறுதியில் கூறுவது இது தான்.

The Catholic minded Indian religious spirit is the way of salvation for human beings of all religions in an age in which we have to learn to live as a single family if we are not to destroy ourselves.

நம்மை நாமே அழித்துக் கொள்ளாமல் நாம் அனைவரும் ஒரே குடும்பமாக வாழக் கற்றுக் கொள்ள வேண்டிய ஒரு காலத்தில் இருப்பதால், பரந்த மனப்பான்மை கொண்ட இந்திய மதத்தின் உணர்வே எல்லா மதங்களைச் சார்ந்த மனிதர்களுக்குமான உய்யும் வழியாகும்.

சர்வே ஜனா சுகினோ பவந்து! நன்றி வணக்கம்.   ***

tags –  கிறிஸ்தவப் பிரசாரம்,  எதிர்ப் பிரசாரம்

கிறிஸ்தவ மதத்துக்கு எதிரான …

tamilandvedas.com › 2015/07/16

 1.  

Translate this page

16 Jul 2015 — கிறிஸ்தவ மதத்துக்கு எதிரான இரண்டு பழந்தமிழ் நூல்கள்– பகுதி 1 · IMG_5071. எழுதியவர்:-உடுப்பிட்டி ஆறுமுகபிள்ளை … I found three very old Tamil books in the British Library,London, which were in very bad condition. Two of them are Anti- Christian booklets published in 1829 or 1889 from Jaffna, …பகுதி-2: கிறிஸ்தவ மதத்துக்கு …

tamilandvedas.com › 2015/07/17

 1.  

Translate this page

17 Jul 2015 — பகுதி-2: கிறிஸ்தவ மதத்துக்கு எதிரான இரண்டு பழைய தமிழ் நூல்கள் · IMG_5060. Article No.1999. Compiled by London swaminathan. Date 17th July 2015. Time uploaded in …


Part two – Diamond Axe- Hindus’ Reply to Christian Attacks …tamilandvedas.com › 2020/03/18 › p…

Translate this page18 Mar 2020 — … Axe– Hindus‘ Reply to Christian Attacks கிறிஸ்தவர் புகார்களுக்கு ஆப்பு 1888 நூலில்!-2(Post No.7709).
Diamond Axe- Hindus’ Reply to Christian Attacks …tamilandvedas.com › page

Translate this page18 Mar 2020 — Part two – Diamond Axe– Hindus‘ Reply to Christian Attacks கிறிஸ்தவர் புகார்களுக்கு ஆப்பு 1888 நூலில்!-2(Post No.7709) … புகார்களுக்கு ஆப்பு 1888 நூலில்!-1(Post … வஜ்ர டங்கம் , கிறிஸ்தவ மதம், ஆப்பு …

–SUBHAM–

Leave a comment

2 Comments

 1. R Nanjappa

   /  November 4, 2020

  ஸ்வாமி விவேகானந்தருக்குப் பிறகு, கிறிஸ்தவ மதப் பிரச்சாரம் இந்தியாவில் மேலும் தீவிரமடைந்து விட்டது. உலகெங்கிலும் படித்த மக்கள் கிறிஸ்தவ மதத்திலிருந்து விலகி வருகிறார்கள், ஆனால் இந்தியாவில் கிறிஸ்தவ மதமாற்ற முயற்சி பெருகிவருகிறது.இதற்கு சில காரணங்கள் சொல்லலாம்:
  – இந்தியாவில் கல்வி பயில்பவர்களில் 35% கிறிஸ்தவ பள்ளி/லகல்லூரிகளில் படிக்கின்றனர். இவர்கள் நேர்முகமாகவும் மறைமுகமாகவும் கிறிஸ்தவ ஆதரவாளராகின்றனர்.
  – ஒரு சராசரி ஹிந்து இளைஞனுக்கு தன் மதத்தைப் பற்றி ஒன்றும் தெரியாது. ஹிந்து மதம் என்றால் ஏதோ பண்டிகைகள், சடங்குகள், கோவில் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஹிந்து மதத்திற்கு எதிரான பிரசாரத்தை எதிர்க்கத் தெரியாது.
  – எல்லா மதமும் சமமே [All religions are true and equal] என்ற பிரமையை காந்திஜி போன்றவர்கள் உருவாக்கி விட்டார்கள். செக்யூலரிஸாம் என்ற பெயரில் இது அரசுக்கொள்கையாக மாறி ,ஹிந்துக்களுக்கு எதிராகப் பயன்படுத்தப் படுகிறது.
  – ஸ்வாமி விவெகானந்தர் என்ன சொல்லியிருந்தாலும் சரி, இன்று அவர் ஸதாபித்த ஸ்ரீ ராமக்ருஷ்ண மடம் அவர் கருத்தை அனுசரித்து ஹிந்துமதத்தின் மேன்மைக்காகப் பாடுபடவில்லை. எல்லா மதமும் சமமே, எல்லாம் உண்மையே என்ற கொள்கையில் நிற்கிறார்கள். அதற்கும் ஒருபடி மேலே சென்று, “ஸ்ரீ ராமக்ருஷ்ணர் ஹிந்து அல்ல, நாங்கள் “ராமக்ருஷ்ணாயிசத்தைப் பின்பற்றுகிறோம்” என்று உச்ச நீதி மன்றத்தில் affidavitt தாக்கீது செய்தார்கள்!
  விவேகானந்தர் தெரிவித்த கிறிஸ்தவ மதக் கண்டனத்தை மூடி மறைக்கிறார்கள். சகோதரி நிவேதிதையுடன் செய்த கப்பல் பிரயாணத்தின் போது, ஏசு கிறிஸ்து என்று ஒருவர் இருந்தாரா என்பதே சந்தேகம், கிறிஸ்தவ மதத்தினர் புத்த மதத்திலிருந்து பல அம்சங்களை எடுத்துக்கொண்டனர் என்றெல்லாம் சொல்லியிருக்கிறார். இதையெல்லாம் மடத்தினர் வெளியிடுவதில்லை.
  இத்தகைய சூழ் நிலையில் ஹிந்து மயங்கிக் கிடக்கிறான். சென்ற நூற்றாண்டில்-ஏன், சென்ற தலைமுறையினருக்கு இருந்த அளவு கூட இன்றைய தலைமுறையினருக்கு விஷயம் தெரியவில்லை.
  ஹிந்து மதம் conductor இல்லாத orchestra போன்று செயல்படுகிறது. கிறிஸ்தவர்களோ, உலகம் தழுவி பல தொழில்துறை, மேலாண்மைத்துறை உத்திகளுடன் கணக்கிடமுடியாத அளவு பண பலத்துடன் செயல்பட்டுவருகின்றனர். இதற்கு பல வெளி நாடுகளின் நேரடி, மறைமுக ஆதரவும் உண்டு.
  இந்த நிலையில் படித்த சிலராவது சில அடிப்படை உண்மைகளைப் புரிந்துகொள்ள வேண்டும். இதற்கு உதவும் மூன்று புத்தகங்கள்:

  1.God Is Not One :- by Stephen Prothero. (Boston University} It explains how the eight major religions of the world fundamentally and significantly differ among themselves,with serious practical consequences..
  2. Farewell To God: by Charles Templeton. He was an Evangelist with Billy Graham, and as famous. But he left the Christian faith and rejected it. He has explained in this book, in 7 chapters, what is basically fundamentally wrong with Christianity as a religion and faith. He has explained how the Gospel accounts of Christ are untrue. It is not a big book, and not complicated.
  3.Rearming HInduism: by Vamsee Juluri [University of SanFarancisco}. It teaches what the Hindu should know and how he can defend himself in the modern , global context. It provides grounds for an intellectual resistance in the face of modern criticism.

 2. santhanam nagarajan

   /  November 5, 2020

  thanks a lot. it is a pity that sri ramakrishna mutt disowned Hinduism for the sake of Joythi Basu’s unwanted laws. He wanted to uproot mutt. Now every Hindu should come forward to take this great tasl. the three books mentioned by you will definitely give valuable points.
  u may write the gist in at least 3 articles.

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: