
Post No. 8900
Date uploaded in London – – 7 NOVEMBER 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
தேர்தலும், ஊழலும், அரசியல்வாதியும்!!!
Compiled by Kattukutty

தேர்தல்
யாரோ வீடு கட்ட நாம் எடுத்து வைக்கும் செங்கல் !!! ஆர்.பாலு ,புதுவை-3
XXX
அடுத்த சுரண்டலுக்கு விடப்படும் டெண்டர்!!! டி. தேசிகன்,திருச்சி-6
XXX
ஆளும் கட்சி மருமகளும், எதிர்கட்சி மாமியாரும் சேர்ந்து
ஜன நாயக கணவன் கழுத்தை நெரிப்பது!!! புளியரை கணேசன்,சென்னை – 30
XXX
நரிகளுக்கு ஆடுகளே நாட்டாமை வழங்கும் நிகழ்ச்சி
செல்வ. தியாகராஜன், திருக்கடையூர்
XXX
அகவை அறுபதுக்கு மேலாகியும் மூளை வளர்ச்சியடையாத
புத்திரன் . வி.ஆர்.சந்திரன், சென்னை – 23
XXX
அரசியல்வாதிகளுக்கு “சீசன் டிக்கட்”, பொது மக்களுக்கு
“லாட்டரி டிக்கட் “!!! பி.எஸ் வசந்தா,சென்னை -4
XXX
ஒரு நாள் தவறுக்கு ஐந்து ஆண்டுகள் தண்டனை தரும்
நீதி மன்றம் !!! ஆர்.திலகவதி,சென்னை – 38.
XXX
இந்திய வாக்காளர்கள் விடை தேடிக் கொண்டிருக்கும் புதிர்!!!
எஸ். ரேணுகா தேவி, சென்னை -28
XXX
வோட்டுக்களை வாங்குவதற்கு நோட்டுக்களை நீட்டி, ஜனநாயகத்திற்கு வேட்டுக்களை வீசும் விசித்திர விழா !!!
ஜெ. பாலா, இடைப்பாடி
XXX
குடிசைப் பகுதியில் கார் மட்டுமல்ல, காசும் புரளும் திருநாள்!!!
மணி வண்ணன், சென்னை-43
XXX
ஐந்து ஆண்டுகளுக்கு அப்பா( வி) ம(க்) ளுக்கு நடத்தும்
காது “குத்தும்” திருவிழா!!! ரா. கோவிந்த ராஜு, கோனேரிராஜபுரம்
XXX
மக்களின் தலை எழுத்தை நிர்ணயிக்கும் பிரும்ம நேரம்!!!
கேசாந்தி, சோழன் மாளிகை
XXXX
ஓட்டுப் போட்டவன் தார் ரோட்டில், ஓட்டால்ஜெயித்தவன்
கார் சீட்டில்!!! போந்தூர் வே.ல.ஏழுமலை, மேல் மருவத்தூர்
XXXX
ஆண்டுக்கு ஒரு முறை வருவது ஏப்ரல் தினம்
ஐந்து ஆண்டுக்கு ஒரு முறை வருவது ஏமாளிகள் தினம் !!!
ஏ.உமா, சென்னை – 112
XXXX
இறந்தவர்கள் மீண்டும் உயிர் பெற்று எழும் தினம்!!! சரவணன், புவனகிரி
பிராந்தி கடையில் காந்தி ரூபாய் நோட்டாக, தேர்தல் தினத்தன்று
அர்ஜுன் பாபு, சென்னை – 73
XXX

அரசியல்வாதி
மக்களுக்கு தெரிந்த கொள்ளைக்காரர்கள்!!! ம.சாந்தி, மீன் சுருட்டி
அன்று நாட்டிற்காக உழைத்தார்கள், இன்று ” நோட்டு”க்காக
உழைக்கிறார்கள்!!! விருதை ஜெயராஜ், விருது நகர்
XXX
தாத்தாவின் தேசமல்ல பாப்பா
தாதாவின் தேசமடி பாப்பா ஜி.பழனி, ஊத்துக் கோட்டை
XXX
நாடு என்னும் நீரை, சேறாக்கும் எருமை. இ.கரிகாலன்,சென்னை- 23
XXXXX

ஊழல்
ஊழல் என்பது, முகவரி தொலைத்தவர்களைக் கூட சரித்திர
நாயகர்களாக்கும் அட்சய பாத்திரம்!!! இ.நாச்சி முத்து ஈரோடு-9
XXX
அரசியல்வாதியின் ஆனந்த பானமாய் மாறும் அறியா மக்களின்
வியர்வைத்துளிகள் தஞ்சை கலைவாணர்தாசன், கோட்டையூர்
XXXX
தனக்குத்தானே கட்டிக கொள்ளும். சமாதி விமலா சுகுமார் திருச்சி.
XXX
உண்மை உழைப்புக்கு சமாதி எழுப்பத் துடி துடிக்கும் குட்டிச்
சாத்தான் !!! எல்.சண்முக சுந்தர், இராமநாதபுரம்-
XXXX1
ஐந்து வருட ஆட்சியில் முன்னேற்றம் காணும் ஒரே துறை!!!
எஸ்.சுகந்தி, சென்னை -33
XXX
அடுத்தவர் புரிவது !!! ஆர்.ஸ்ரீனிவாசன், ஸ்ரீரங்கம்

tags — ஊழல், அரசியல்வாதி, தேர்தல்