
Post No. 8903
Date uploaded in London – – 8 NOVEMBER 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
நவீன ஞான மொழிகள் – 6
Compiled by Kattukutty
குறைகளை தன்னிடம் தேடுகிறவன் தெளிவடைகிறான்
குறைகளை பிறரிடம் தேடுகிறவன் களங்கப்படுகிறான்
XXX
அறுந்து போன செருப்புக்குக் கூட வீட்டில் இடம் உண்டு
இறந்து போன மனித உடலுக்கு ஒரு இடமும் இல்லை……
XXXX
விழுதல் என்பது வேதனை.
விழுந்த இடத்தில் எழுதல் என்பது சாதனை!!!
XXXX
பேசிப் பேசி நம்மை ஏமாற்றுகிறார்கள் என்பதெல்லாம் “பொய்”
அவர்கள் பேச்சில் நாம் ஏமாந்து விடுகிறோம் எனபதுதான் “மெய்”
XXXX
விஸ்கி குடிச்சா நாம நாலு பேருக்கு முன்னாடி ஆடலாம், – அதுவே
அதிகமா குடிச்சா நமக்கு முன்னாடி நாலு பேரு ஆடுவாங்க……..
XXX
நீங்க எவ்வளவு பெரிய பருப்பா இருந்தாலும், உங்களை வைச்சு
சாம்பாரெல்லாம் பண்ண முடியாது!!!
XXX

டீ மாஸ்டர் எவ்வளவுதான் லைட்டா டீ போட்டாலும், அதிலிருந்து
கொஞ்சம் கூட ‘லைட்’ LIGHT வராது !!!
XXX
முட்டை இடாத பறவை எது ???
ஆண் பறவை !!!
XXX
ஊசி குத்தின இடத்தில் ஏன் ரத்தம் வருது ???
தன்னை குத்தினது யாருன்னு பார்க்க வருது!!!
XXX
என்னதான் ஊருக்கு கேட்கிற மாதிரி குறட்டை விட்டாலும்,
அத நம்ம காதால கேட்க முடியாது ……..
XXX
அதிர்ஷ்டம் அம்பாசிடர் கார்ல ஏறி வந்தா,
பிரச்சினை FLIGHT ப்ளைட்ல ஏறி வருது !???

XXX
கல்யாணம் ஆன பின்னால ஒண்ணு அடி விழும்,
இல்லே முடி விழும், அவ்ளோதாங்க வாழ்க்கை………
XXXX
என்னதான் வேல வெட்டி இல்லாமல் இருந்தாலும்,
நமக்கு நாமே போன் பண்ணும்போது பிஸியாத்தானே
இருப்போம்????
XXX
மூக்கும் முழியுமா இருக்கிற பொண்ண விட
நாக்குக்கு நயமா சமைக்கிற பொண்ணுதான்
ஆண்களுக்குத் தேவையாம்!!!
Xxx
கடன் கொடுத்துப் பார்…..உறவுகள் உன்னைப் போற்றும்!!!
கொடுத்த பணத்தை திருப்பி கேட்டுப் பார், மண்ணை வாரி தூற்றும்!!
XXXX
மாசத்துக்கு ஒரு நாள்தான் சம்பளம் தராங்க
ஆனா வேல மட்டும் தினமும் தராங்க???
XXX
பணத்தின் மதிப்பு தெரிய வேண்டுமா???
செலவழியுங்க…..
உங்க மதிப்பு தெரிய வேண்டுமா???
கடன் கேளுங்க…….
XXX
பிச்சை போடுவதும் சுய நலம்தான், புண்ணியம் கிடைக்கும்
என்று நினைத்தால்!!!
XXX
அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்,
பொண்டாட்டி சொல்லியே கொல்லும்……….
நவீன, ஞான மொழிகள் – 6,
***