
Post No. 8902
Date uploaded in London – – –8 NOVEMBER 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
ஆயுளை குறைத்துக் கொள்ளாதீர்கள்!
ச.நாகராஜன்
‘ஜீவேம சரத சதம்’ என்பது வேதம் நமக்கு இட்டிருக்கும் கட்டளை – நூறு வயது வாழ்வோமாக!
இப்படிச் சொல்லி விட்டு அது ஒதுங்கி விடவில்லை.
100 வயது வாழ்வதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும், எதையெல்லாம் செய்யக் கூடாது என்றும் வழி காட்டி இருக்கிறது.
இந்த வேத நெறிகளை பல்வேறு நூல்கள் எளிதாகப் புரியும் வண்ணம் கூறி உள்ளன.
சுபாஷித ஸ்லோகங்கள் இந்த வகையில் பெரும் வழிகாட்டி ஸ்லோகங்களாக அமைந்துள்ளன.

ஆயுள் விருத்தியைப் பற்றி சில சுபாஷிதங்களைப் பார்ப்போம்.
சர்வலக்ஷண ஹீனோபி ய: சதாசாரவாந்தர: |
ச்ரத்யானோனசூயச்ச சதம் வர்ஷாத் ஜீவதி ||
நல்ல குணங்கள் இல்லாவிட்டாலும் கூட தனது செயலில் புண்யமான செயல்களைச் செய்து சிரத்தையுடனும் பொறாமை இல்லாமலும் இருக்கும் ஒருவன் நூறு ஆண்டுகள் வாழ்வான்.
**
பாலார்கோ யக்ஞதூம்ரச்ச பாலஸ்த்ரீ நிர்ஜரோதகம் |
ஆயுஷ்யவர்தகம் நித்யம் ராத்ரௌ க்ஷீரான்னபோஜனம் ||
உதய சூரியன், யாகத்திலிருந்து எழும் புகை, இளம் பெண், ஊற்றிலிருந்து ஊறும் தெள்ளிய நீர் ஆகியவை ஆயுளை நீடிக்க உதவுபவை. அத்துடன் இரவில் பால் கலந்த உணவும் ஆயுளை நீடிக்கும்.
**
வ்ருத்தார்க: ப்ரேததூம்ரஸ்ச் வ்ருத்த ஸ்த்ரீ தில்லரோதகம் |
ஆயுஷ்ய நாசகம் நித்யம் ராத்ரௌ தத்யன்ன போஜனம் ||
நடுப்பகலில் உள்ள சூரியன், எரியும் சிதையிலிருந்து எழும் புகை, வயதான ஸ்த்ரீ, சேற்றிலிருந்து எடுக்கப்பட்ட நீர் ஆகிய அனைத்தும் ஆயுளைக் குறைப்பவையாகும். அத்துடன் இரவில் தயிர் சாதம் சாப்பிடுவதும் ஆயுளைக் குறைக்கும்.
**
தீபநிர்வாணகந்தம் ச சஹ்ருத்வாக்யமருந்ததீம் |
ந ஜிக்னந்தினி ந ச்ருண்வந்தி ந பச்யந்தி கதாயுஷ: ||
அணைக்கப்பட்ட தீபத்திருந்து எழும் நாற்றம், நண்பனின் புத்திமதி, அருந்ததி நட்சத்திரம் ஆகியவை முகரப்பட்டதில்லை, கேட்கப்பட்டதில்லை, பார்க்கப்பட்டதில்லை – குறைந்த ஆயுளை உடையவனால்!
**

வேதோக்த ஆசீர்வாதம் அனைவரையும் நல்ல முறையில் வாழ்த்துகிறது இப்படி:
சர்வே பவந்து சுகின: சர்வே சந்து நிராமயா: |
சர்வே பத்ராணி பச்யந்து மா கஸ்சித் துக்க பாக்பவேத் ||
அனைவரும் சந்தோஷத்துடன் இருக்கட்டும்.
அனைவரும் வியாதிகள் இல்லாமல் இருக்கட்டும்.
அனைவரும் தங்களைச் சுற்றி நல்லனவற்றையே பார்க்கட்டும்.
அனைவரும் ஒரு போதும் துக்கம் அடையாமல் இருக்கட்டும்.
வேத பிரார்த்தனையைச் செய்வோம்; அனைவரும் சுகமாக இருக்கட்டும்.
*
எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல்
வேறொன்றறியேன் பராபரமே – தாயுமானவர்
tags -ஆயுள்
***