
Post No. 8916
Date uploaded in London – – 11 NOVEMBER 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
நவீன ஞான மொழிகள் – 7
Compiled by Kattukutty
ரேஷன் கார்டு போட்டோ 15 வருஷத்துக்கு முன்னாடி நாம
எப்படி இருந்தோம் என காட்டுது…….
ஆதார் கார்டு போட்டோ 15 வருஷத்திற்கு பின்னாடி நாம
எப்படி இருப்போம் என காட்டுது…….
Xxx
வார்த்தை ஒண்ணுதான் ஆனா
மருத்துவர் சொன்னா மகிழ்ச்சி,
ரேஷன் கடைக்காரர் சொன்னா வருத்தம்……
“சர்க்கரை இல்லை”
xxx
கணவர் சொன்னா மகிழ்ச்சி, மகள் சொன்னா வருத்தம்
“அரியேர்ஸ் வந்திருக்கு”
கணவன் சொன்னா மனைவிக்கு வருத்தம்,
மனைவி சொன்னா கணவனுக்கு மகிழ்ச்சி
“ஊருலேர்ந்து என தங்கச்சி வரா”
xxxx
தெரிந்து மிதித்தாலும் தெரியாம மிதித்தாலும்,
மிதி பட்ட எறும்புக்கு ரெண்டும் ஒண்ணு தான்!!!!
நினைப்பது போல எல்லோருக்கும் வாழ்க்கை
அமைந்து விடுவதில்லை…..
அழகாய் அமைந்த வாழ்க்கையைக் கூட சிலருக்கு
வாழத் தெரியவில்லை???
xxx

சந்தோஷமாக வாழறேன்னு காட்டிக் கொள்ளத் தான்
பணம் தேவைப்படுகிறது.
உண்மையில் சந்தோஷமாக வாழ பணம் ஒரு
பொருட்டே இல்லை!!!
Xxx
நோய் வரும் வரை உண்பவன், உடல் நலமாகும் வரை
உண்ணாதிருக்க நேரிடும்.
பணம் சம்பாதிப்பதென்பது, குண்டூசியால் பள்ளம்
தோண்டுவது போல…..
செலவழிப்பதென்பது குண்டூசியால் பலூனை
உடைப்பது போல……
xxxx
ஒரு வயிறு தானேன்னு ரொம்ப செல்லம் கொடுத்து
வளர்க்காதீங்க அப்புறம் தொப்பேன்னு பேர் வாங்கிண்டு
வந்து நிக்கும்……
எந்த உறவிலும் பிரிவின் வலி தீருவதற்குள் பேசி விடுங்கள்,
வலி பழகிடுச்சுன்னா உறவு முறிந்து விடும்
xxx
இரக்கமும், உறக்கமும் ஒன்றுதான்.
இரண்டையும் அளவோடு தான்
பயன் படுத்த வேண்டும்.
அதிகம் உறங்குபவன் சோம்பேறி ஆகிறான்,
அதிகம் இரக்கம் காட்டுகிறவன் ஏமாளி ஆகிறான்!!!

xxxxx
படுத்துக்கிட்டுருக்கும் போது மரணம் வந்தால், பரவாயில்லை,
மரணம் வரும் வரை படுத்துக்கிட்டிருக்கிறது
கொடுமையிலும் கொடுமை.
சொந்த கால்ல நிற்கும் போது தான் புது செருப்பு வாங்கக்கூட
யோசிப்போம்.
xxxx
பேசாமல் இருந்துவிட்டால்,
அழிந்து போவது மொழிகள் மட்டுமல்ல,
சில உறவுகளும் தான்………
xxxx
பொறந்தா எத்தன மணிக்கு பொறந்தான்னு கேப்பாங்க
செத்தா எத்தன மணிக்கு பாடிய எடுக்கப் போறாங்கன்னு
கேப்பாங்க……. எல்லாமே “டைமிங்”தான்……
சுமந்து செல்லும் அந்த நான்கு பேர் யாரென்று தெரிந்து விட்டால்
இப்பவே கைமாறு ஏதாவது செய்துவிடலாம்………
xxxx
வாகனம் ஓட்டும்போது மொபைலில் பேசுவதற்கு இணையானது
வாகனம் ஓட்டும் கணவரிடம் மனைவி பேசுவது!!!
வலிகளுக்கு வலிகள் இருந்திருந்தால்கண்ணீர் வரும் வரை
கதறி அழுதிருக்கும்!
xxxx
உனக்கு என்ன கொடுக்க வேண்டும்,
உன்னிடமிருந்து என்ன பறிக்க வேண்டும் என்பதை
இறைவனே முடிவு செய்கிறான்!!!

tags– ரேஷன் கார்டு, ஆதார் கார்டு , போட்டோ,
***