வார்த்தை பழசு, அர்த்தம் புதுசு!! – 2 (Post No.8929)

COMPILED  BY KATTUKKUTY

Post No. 8929

Date uploaded in London – – 14 NOVEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

வார்த்தை பழசு, அர்த்தம் புதுசு!! – 2

Compiled by Kattukutty

மதம்

மனிதனுக்கும், யானைக்கும்,தவிர்க்க இயலாத பிரச்சினை!!!

தபால்

1)லகம் சுற்றும் வாலிபன்!!!

2)நலமறிய நாடிச்செல்லும் பறவைகள்

மறுவாழ்வு

வாழ்விழந்த சாலைகளுக்கு மறுவாழ்வு தர வந்தது தேர்தல்!!!

நெருப்பு

நீ  இல்லாமல் சோறும் வேகாது, உடலும் வேகாது!!!

டைரி

முடிந்த வாழ்க்கையின் முகவரி…….

காற்று

என் “உயிர்”தோழன்!!!

பேன்

தலைக்கு” மேலே வேலை இருக்கிறது……..

நாக்கு

உண்ணும் பொருளை சோதனை செய்யும் சோதனைச் சாவடி!!!

வியர்வை

உழைப்பாளியின் உதிரம் உப்பாகும் விந்தை!!!

பூங்கா

இங்கு ஜோடிகளைத் தவிர தாடிகள் தான் அதிகம்!!!

ஜாதி

1 )காதலுக்கு தேவை இல்லை, கல்யாணத்திற்கு மட்டும் தேவை.

2) கருவிலும், கல்லறையிலும் இல்லாத வார்த்தை!!!

முகப்பரு

பருவத்தோட்டத்தில், பதியம் போடாமல் பூத்த

மல்லிகை மொட்டுகள்!!!

காதல் தோல்வி

 ஓர விழியால் பார்த்து என்னை ஈர விழியாக்கி விட்டாயே……

பெண்

1) பிறந்த வீட்டில் சுமையும் அவளே, புகுந்த வீட்டின் சுமை தாங்கியும் அவளே!!!

2) ஆண்கள் என்னும் ஈக்கள் மொய்க்கும் பலாப்பழம்!!!

3) புரிந்தவர்களுக்கு புத்தகம் ,புரியாதவர்களுக்கு புதிர்!!!

தாவணி

1) ருவக்கட்டித்தின் அஸ்திவாரம்!!!

2) பருவத்திற்கு மட்டும்போடவில்லை,பாவிகளின் பார்வைக்கும் போட்ட வேலி!!!

காதல்

1 ) கற்பில் ஆரம்பித்து,தப்பில் முடிந்தது…….

2) கண்கள் மோதிக்கொண்டன, இதயம் விபத்திற்குள்ளானது!!!

அரசாங்க வேலை

கிடைக்கும் வரை துக்கம்,

கிடைத்த பின் தூக்கம்!!!

இலையுதிர் காலம்

கிளைகளுக்கும் இலைகளுக்கும் இடையே நிகழும் விவாக ரத்து!!

மழை

வந்தால் சகதி, வராவிட்டால் அவதி !!

பசி

தனது ஓலைக் குடிசை பற்றிக் கொள்ளுமோ என பயந்தான்

ஏழை, ஏனென்றால் வயிற்றில் பசித் தீ!!!

காலண்டர்

ஆறிரண்டு மாதம் ஆணியில் தொங்குவது யாரிட்ட சாபம்???

வாய்

 மின்சாரம் இல்லாத ஒலி பெருக்கி!!!

அரசியல்வாதிகள் 

 1) தேர்தல் நேரங்களில் உலா வரும் உஜாலா பொம்மைகள்!!!

 2) அன்று நாட்டுக்காக, இன்று வீட்டுக்காக !!!

சட்டம் இவர்கள் கைக்கு வரும்போது மட்டும் பட்டமாகிவிடுகிறது!!!

கண்கள் 

காதல் படிப்பிற்கு நுழைவுத் தேர்வு நடக்குமிடம்!!!

அம்மா 

திதி செய்ய மனமில்லை, இன்னும் வாழ்கிறாள்,

மனதில் அம்மா!!!!

முரண்பாடு

ண்டியாய் முருகன், கையில் தங்க வேல்!!!!

வர்க்கங்கள் 

பாடியில் தெம்பிருந்தால் , தொழிலாளி.

பர்ஸில் தெம்பிருந்தால் முதலாளி !!!

தொட்டில் – கட்டிலின் தம்பி !!!

தொட்டில் குழந்தை – லைசன்ஸ் பெறாத டிரைவரால் வந்த விபத்து!!!

கடன் – கடலில் மூழ்கினால் முத்து, கடனில் மூழ்கினால் பித்து…..

மூக்கு – ஒருவீடு, இரு வாசல்!!!

டீக்கடை – ஏழைகளின் மீட்டிங் பாயிண்ட்-தொடர்பு மையம் !!!

வண்டு – பூக்கள் பூப்பெய்தியதை கண்டு பிடிக்கும் விஞ்ஞானி!!!

திருப்பதி – எந்த நாட்டு மன்னரும் இங்கு முடி இழப்பர்……….

மேளம் – மனிதனின் இன்ப, துன்பங்களுக்கெல்லாம் அடி வாங்கும் அப்பாவி!!!

சொந்தம் – வசதியில் வருவது, வறுமையில் போவது !!!

விவசாயி 

சோற்றுப் பருக்கையில் கை வைக்க

சேற்றுப் படுகையில், காலை வைப்பவன்!!!

வறுமை. – ஏழைகளை வாட்டி வதக்கும் வில்லன்!!!

கலவரம் – சமூக விரோதிகள் மக்களுக்கு அருளும் “வரம்”!!!

ஓர் குலம் ஒரே கட்சி – லஞ்சம் கேட்பதில்!!!

லாட்டரி – 1) குலுக்கினார்கள் குலுங்கியது பலர் வாழ்வு…..

2) கோடிக்கு ஆசைப்பட்டு குடிசையை விற்றார்கள்……….

செருப்பு – ஆயுள் முழுவதும் ஆதாயம் தேடாத நண்பன்!!!

குழந்தை – இருவர் இருட்டில் எழுதிய புத்தகம், சிற்பம்!!!

ஸ்டவ் 

 1) மரு மகளுக்காக மாமியார் வைத்திருக்கும் சயனைடு குப்பி!!!

2) வீட்டுகுள் இருக்கும் சுடுகாடு……..

பிராந்தி – கவர்ச்சிகரமான மது பானம் !!!!

சிகரட் – இழுத்தேன் அன்று, இளைத்தேன் இன்று……..

லஞ்சம் – வாங்கினேன், கைது செய்தார்கள்,

கொடுத்தேன் விட்டு விட்டார்கள் !!!

சிலை கடத்தல் – செய்யும் தொழிலே தேய்வம்!!!

பிரச்சினை 

ஓட்டு கேட்ட தலைவருக்கு வருமான வரி பிரச்சினை!!!

ஓட்டுப் போட்ட எங்களுக்கோ வாழ்க்கையே பிரச்சினை!!!

வாக்காளர்கள் – அறியா “மை”க்கு விரல் நீட்டும் அறியாமைகள்!!!

ரேஷன் – நியாய விலைக் கடையில் அநியாய எடை……..

சகவாச தோஷம் – யானையும் பிச்சை கேட்டது கோவில் வாசலில்

எல்லாம் சகவாச தோஷம்!!!

மாணவர்கள் – எந்தப் பெண்ணும் எங்களுக்கு கிடைக்கவில்லை,

மதிப்’பெண்’ணும் தான்!!!#

 tags- வார்த்தை பழசு-2, அர்த்தம் புதுசு-2

****

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: