
Post No. 8932
Date uploaded in London – – 15 NOVEMBER 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
என்ன உலகம்டா இது???
ஒருசிற்பி உளியால கல்லுல அடிச்சா அது கலை…..
நாம சிற்பிய (கல்லால) அடிச்சா அது கொலை !!!

xxxx
உம்மா இருக்கிறவன் சும்மா இல்லாம சும்மா இருக்கறவங்ஙகளை
சும்மா , சும்மா, கிண்டல் பண்ணினா, சும்மா இருக்கிறவன் சும்மா
விட மாட்டான்னு சும்மா சொல்றேன்…….
xxx
கம்பயூட்டருக்கும் கேன்டீனுக்கும் அடிக்கடி உண்டாகும்
PROBLEM, சர்வர் SERVER பிராப்ளம்தான்!!!
xxxx
என்னதான் நீ மாடா உழைச்சாலும் உனக்கு கொம்பு முளைக்காது!!!
என்னதான் அரசியல்வாதிங்க கட்சி கட்சி தாவினாலும்,
அவுங்களுக்கு வாலு முளைக்காதுப்பா !!!
xxx
ப்ளேன் என்னதான் உயர உயர பறந்தாலும் , பெட்ரோல் போட
கீழ வந்துதான் ஆகணும்!!!
என்னதான் ஒருத்தனுக்கு தலை கனம் இருந்தாலும் அது எத்தனை
கிலோன்னு எடை போட முடியாதுப்பா…….
xxxx
குச்சி மிட்டாயில குச்சி இருக்கும், பல்லி மிட்டாயில
பல்லி இருக்காது ……….
XXX

கோழிக்கு கோடிக்கணக்கா தீனி வாங்கி போட்டாலும் அது
முட்டைதான் போடும். 100/100 போடாது……
xxxx
வாழ்க்கைக்கும்,வழுக்கைக்கும் ஒரு வித்தியாசம்
வாழ்க்கை போரடிக்கும், வழுக்கை கிளார் அடிக்கும்!!!
XXXX
தினமும் சூரிய உதயத்திற்கு முன்பு எழுந்தால்,
சகல செலவங்களும் தேடி வரும்
அப்படி என்றால் நியூஸ் பேப்பர் போடறவன், B M W காரில்
அல்லவா சுற்ற வேண்டும்????
xxxx
தினந்தோறும் பசும்பால் அருந்தினால் உடல் வலிமை பெறும்.
அப்படியானால் பூனை ஏன் வலிமை பெறவில்லை????
தினமும் நீண்ட தூரம் நடந்தால் உடல் எடை குறைந்து
அழகாக இருக்கும்.
அப்படியானால்யானை எடை ஏன் குறையவில்லை???
xxx

தினந்தோறும் இரண்டுமணி நேரம் நீச்சலடித்தால்,உடல் எடை மெலிந்து SLIM ஆகும்.
அப்படி என்றால் திமிங்கிலம் ஏன் SLIM ஆக வில்லை???
xxxx
கொழுப்பு அதிகமுள்ள உணவுகளைச சாப்பிட்டால்,கொழுப்பு
அதிகமாகி அவதிப்படுவீர்கள்
அப்படி என்றால், புல் மட்டும் ஆட்டின் உடம்புக்குள்!! அவ்வளவு
கொழுப்பு எங்கிருந்து வந்தது???
எனவே நீங்கள் நீங்களாகவே இருந்து தினமும் எப்படி இருக்கிறீர்களோ அப்படி இருந்துகவலைப்படாமல் இருங்கோ!!!
xxxx

tags – கலையா? கொலையா?