
Post No. 8936
Date uploaded in London – – 16 NOVEMBER 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
நவீன ஞான மொழிகள் – 9
Compiled by Kattukutty
ஆடி காரில் போவது வசதியான வாழ்க்கை இல்லை……
ஆஸ்பத்திரி போகாமல் வாழ்வதே வசதியான வாழ்க்கை !!!

xxx
சில நேரங்களில் குள்ள நரி புத்தி கொஞ்சமாவது வேண்டும்,
குழி பறிக்க அல்ல, குழியில் விழாமல் இருக்க !!!
xxx
உழைக்கும் வயதில் உறங்க நினைத்தால், உறங்கும் வயதில்
உழைக்க வேண்டியிருக்கும்……….
xxx
உயரப் போகும்போது உதவும் உறவை விட, விழும்போது
தாங்கும் உறவே சிறந்தது!!!
xxx
மனிதனுக்கு பிரச்சினை இல்லை என்றால்,
கடவுளுக்கு அர்ச்சனை இல்லை !!!

மனிதன் ஸ்மார்ட் போன் வாங்கும் அளவுக்கு பணக்காரனாகவும்,
கீரை வியாபாரியிடம் பேரம் பேசும் அளவுக்கு ஏழையாகவும்
இருக்கிறார்கள்…….
xxxx
பொறுமை ஒரு பொழுதும் தோற்றதில்லை,
பொறாமை ஒரு போதும் ஜெயிப்பதில்லை……….
பென்சிலுக்கு பின்னால் இருக்கும் ரப்பர் மாதிரி
பல பிரச்சினைகளுக்கும், தீர்வு அதிலேயே இருக்கும்போது
அதை விட்டு, நாம் எல்லா இடத்திலேயும் தேடிக்கொண்டிருக்கிறோம்….
xxxx……….
விக்கலுக்கு பயந்தால் வயிறு நிறையாது,
சிக்கலுக்கு பயந்தால், வாழ்க்கை நிறையாது !!!
முதியோர் இல்லத்திற்கு பணம்கொடு, பொருள் கொடு,
உடை கொடு, உணவு கொடு, உன் பெற்றோரை மட்டும்
கொடுக்காதே !!!
xxxx
உள்ளம் கண்டு பழகு, உருவம் கண்டு பழகாதே!!!
பண்பு கொண்டு பழகு, பருவம் கொண்டு பழகாதே!!!
அகம் கொணடு பழகு, முகம் கொண்டு பழகாதே !!!
xxx
ஒரு கார் இருந்தால் ஆடம்பரமாக வாழலாம், ஒரு மிதி வண்டி
இருந்தால் ஆரோக்கியமாக வாழலாம்!!!
xxxx
16 வயதுக்கு கீழ் உள்ள பிள்ளை வேலைக்கு சென்றால்
அப்பா சரியில்லை என்றுஅர்த்தம்…….
60 வயதுக்கு மேல் அப்பா வேலைக்கு சென்றால்
பிள்ளை சரியில்லை என்று அர்த்தம்…….
xxxx
கோபத்தை உப்பு போல் பயன் படுத்த வேண்டும்
குறைந்தால், மரியாதை போய்விடும்,
கூடினால்,மதிப்பு இல்லாமல் போய் விடும்!!!
xxx
ஆடம்பரம் எனபது ஆடும் பம்பரம் போல,
எப்பொது வேண்டுமானாலும் சரிந்து விடலாம்!!!

மாடு போலவே இருக்கும் ,ஆனா அது மாடுஇல்லே,
பின்ன எது ???
அது கன்னு குட்டி !!!
xxxx
மேடம், நாங்க சோப்பு கம்பேனிலேர்ந்து சர்வே எடுக்க வரோம்.
துணி துவைக்க நீங்க எதை உபயோகிக்கிறீங்க ???
என் கணவரை……!!!!
பணத்தில் மயங்குபவன் பண்பை இழக்கிறான்.
அழகில் மயங்குபவன் அறிவை இழக்கிறான்.
xxxx
முதியோர் – இழந்தது இதயம் மட்டுமல்ல, பேரன் பேத்திகளிடம்,
இதயத்தையும் தான்!!!
வயது செல்லச் செல்ல சருமம் சுருங்கும், மகிழ்ச்சியை இழந்து
விட்டால், வாழ்க்கையே சுருங்கும்
xxxx
எது நல்லது ??? எது கெட்டது ???
நல்லது போனால் தெரியும் !!!
கெட்டது வந்தால் தெரியும்!!!

புத்தகங்களை மேலிருந்து கீழே வாசிக்கிறோம்
புத்தகங்கள் நம்மை கீழுலிருந்து மேலே உயர்த்துகின்றன!!!
Xxxx subham xxxxx