
COMPILED BY LONDON SWAMINATHAN (News Editor, Gnanamayam)
Post No. 8942-b
Date uploaded in London – –17 NOVEMBER 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
நவம்பர் 16-ம் தேதி — திங்கட் கிழமை
உலக இந்து சமய செய்தி மடல்
தொகுத்து வழங்குபவர் வைஷ்ணவி ஆனந்த்
இது ‘ஆகாச த்வனி’ யின் உலக இந்து சமய செய்தி மடல் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்,
நமஸ்காரம் செய்திகள் வாசிப்பது VAISHNAVI ANAND

அனைவர்க்கும் ஞான மயக் குழுவினரின் ஸ்கந்த சஷ்டி வாழ்த்துக்கள்
நவம்பர் 20-ம் தேதி ஸ்கந்த சஷ்டி தினம் கொண்டாடப்படுகிறது.
எங்கள் நிகழ்ச்சிகளை திங்கட்கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல் 1 மணிக்கும், இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் நேரடியாகக் கேட்கலாம். உலக இந்து சமய செய்தித் தொகுப்புடன் நேயர்களின் கேள்விகளுக்கும் விடைகளும் அளிக்கப்படுகிறது.
உங்கள் பேட்டை, நகரத்தில் நடைபெறும் விழாக்கள், உற்சவங்கள் பற்றி எங்களுக்கு செய்தி அனுப்புங்கள்.
எங்களை எந்நேரமும் தொடர்பு கொள்ள Facebook.com / Gnana mayam முகவரியில் அணுகவும்
XXXX
முதலில் நீங்கள் ஆங்கிலத்தில் கேட்ட செய்திகளை சுருக்கமாகச் செப்பிவிட்டு தமிழ் நாட்டுச் செய்திகளை விரிவாக வழங்குகிறேன்.
ராணுவ வீரர்களுடன் கொண்டாடும் போது தான் எனக்கு தீபாவளி நிறைவடைகிறது: பிரதமர் மோடி உரை
தீபாவளி பண்டிகையையொட்டி, குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, ஆளுநர்கள், மாநில முதல்வர்கள், அரசியல் கட்சித்தலைவர்கள் உள்ளிட்டோர் மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி ராஜஸ்தானின் ஜெய்சால்மரில் உள்ள லோங்கேவாலாவில் இந்திய ராணுவத்தினருடன் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடி உரையாற்றினார்
மக்களுடைய அன்பை உங்களுக்காக நான் கொண்டுவந்துள்ளேன். நாட்டு மக்களின் ஆதரவும் ஆசிர்வாதமும் உங்களுக்கு எப்போதும் உண்டு என கூறினார். ராணுவ வீரர்களுடன் கொண்டாடும் போது தான் எனக்கு தீபாவளி நிறைவடைகிறது என கூறினார். பனிமலையோ, பாலைவனமோ ராணுவத்தினர் எங்கிருக்கிறார்களோ அங்கு தான் எனக்கு தீபாவளி என பேசினார்
பிரதமர் மோடி டிவிட்டரில் நேற்று வெளியிட்டுள்ள பதிவில், ‘அச்சமின்றி நம் நாட்டைப் பாதுகாத்து வரும் ராணுவ வீரர்களுக்காக தீபாவளியன்று தீபமேற்றுவோம். அவர்களின் தைரியத்தினைப் பாராட்டவும், நன்றி சொல்லவும் வார்த்தைகள் இல்லை. எல்லைகளில் போராடிக் கொண்டிருக்கும் வீரர்களின் குடும்பத்தினருக்கும் நாம் நன்றி சொல்லக் கடமைப்பட்டு உள்ளோம்,’ என கூறியுள்ளார்.
XXXXX

RAJNIKANT DEEPAVALI
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரஜினிக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டின் முன்புகாலையிலேயே ஏராளமான ரசிகர்கள் திரண்டனர்.
பண்டிகை நாளான இன்று சந்திக்க வந்த ரசிகர்களை ஏமாற்றம் அடைய வைக்க ரஜினி விரும்பவில்லை. அதனால் அவர்களை சந்தித்து தீபாவளி வாழ்த்து தெரிவித்தார். மாஸ்க் MASK அணிந்தபடி, கேட்டிற்கு பின்னால் நின்று ரசிகர்களை பார்த்து கையசைத்து தீபாவளி வாழ்த்து தெரிவித்தார் ரஜினி. பின்னர் அனைவரையும் நோக்கி கைகளை கூப்பி வணக்கம் தெரிவித்தார். அப்போது ரசிகர்கள் ஆரவாரம் செய்து அவரை வாழ்த்தி கோஷமிட்டனர்.
XXX
அமெரிக்காவில் வசிக்கும் 40 லட்சத்துக்கும் அதிகமான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஹிந்துக்கள், சீக்கியர்கள் தீபாவளி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர். தீபாவளி பண்டிகையின் கலாசாரம் மற்றும் வரலாற்று முக்கியத்துவத்தை அங்கீகரிக்கும் வகையில் அமெரிக்க பார்லிமென்டின் பிரதிநிதிகள் சபையில் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த எம்.பி. ராஜா கிருஷ்ணமூர்த்தி இந்த தீர்மானத்தை தாக்கல் செய்துள்ளார்.

தீபாவளியை பண்டிகையை முன்னிட்டு நியூயார்க்கில் உள்ள 102 மாடிகள் அடங்கிய EMPIRE STATE ‘எம்பயர் ஸ்டேட்’ கட்டடம் ஆரஞ்ச் நிற மின் விளக்குகளால் ஜொலித்தது.
XXXX
பிரிட்டிஷ் பிரதமர் பாரிஸ் ஜான்சன், இளவரசர் சார்ல்ஸ் ஆகியோரும் தனித்தனியே தீபாவளி வாழ்த்துச் செய்திகளை வழங்கினார்கள்.
XXXX
இங்கிலாந்தின் சுலவ் SLOUGH தமிழ் சங்கமமும் , ஜப்பானின் டோக்யோ TOKYO தமிழ் சங்கமும் முதல் முறையாக இணையத்தில் உலக தமிழ் சங்கங்களுடன் இணைந்து கோலாகலத் தீபாவளிக் கொண்டாட்டம். நடத்தின .
48 மணி நேரம் இடைவிடாது நேரடி ஒளிபரப்பு நடந்தது
உலகத் தமிழ் சங்கங்கள் முன்னெடுப்பில் இந்த மெகா தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள் மூலம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நலிவடைந்த குடும்பம் தீபாவளி கொண்டாட நிதியுதவி வழங்கப்படுவதாக அவை அறிவித்துள்ளன
லண்டனில் உள்ள SOUTH INDIAN SOCIETY சவுத் இந்தியன் சொசைட்டி, HINDU FORUM OF BRITAIN ஹிந்து போரம் ஆப் பிரிட்டன் ஆகியனவும் இணையவளி தீபாவளி கொண்டாடின
XXXXXX
தீபாவளி விழாவுக்கு முத்தாய்ப்பு வைத்த நிகழ்ச்சி உத்தர பிரதேச மாநில அயோத்தி மாநகரில் ராம ஜென்ம பூமியில் நடந்தது . சுமார் ஆறு லட்சம் தீபங்களை வெள்ளிக்கிழமை இரவில் ஏற்றினர். மாநில முதலமைச்சர் ஆதித்ய நாத் யோகிஜியின் முயற்சியில் இது நடந்தது. சென்ற ஆண்டே 4 லட்சம் தீபம் ஏற்றி கின்னஸ் சாதனை நூலில் அயோத்தி இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது
இது ஒரு புறமிருக்க தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் சுவாமி விவேகானந்தரின் சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தது இந்துக்களுக்கு தீபாவளிப் பரிசாக வந்தது.

XXXXX
SKANDA SHASTI
ஆண்டுதோறும் தமிழ் நாட்டிலுள்ள எல்லா முருகன் கோவில்களிலும் ஸ்கந்த சஷ்டி உற்சவம் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் . அந்த விழாவும் விரதமும் நேற்று 15ம் தேதி துவங்கியது . நவம்பர் 20 ம் தேதி ஸ்கந்த சஷ்டி. அன்று சூர ஸம்ஹா ரத்துடன் விழா நிறைவு பெறும்.
முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பல்வேறு விழாக்களில் கந்தசஷ்டி திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும்.
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி 20-ந் தேதி அன்று சூரசம்ஹார நிகழ்ச்சியும், 21-ந் தேதி அன்று திருக்கல்யாண நிகழ்ச்சியும் மிக முக்கிய நிகழ்வுகள் ஆகும். சூரசம்ஹார நிகழ்ச்சி ஆண்டுதோறும் திருச்செந்தூர் கோவில் அருகில் உள்ள கடற்கரையில் நடைபெறும். இந்த ஆண்டு சூரசம்ஹார நிகழ்ச்சி கோவில் பிரகாரத்தில் நடைபெறும். இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
தொலைக்காட்சி மற்றும் உள்ளூர் தொலைக்காட்சி, யூடியுப் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்ய கோவில் நிர்வாகத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்படும். மேலும் சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாண நாட்களை தவிர மற்ற நாட்களில் தினசரி காலை 5 மணி முதல் இரவு 6 மணி வரை 10 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். பக்தர்கள் கண்டிப்பாக முககவசம் அணிந்து வர வேண்டும்.
திருப்பரங்குன்றம் கோயிலில் கந்தசஷ்டி விழா காப்பு கட்டுதலுடன் துவங்கியது. முக்கிய விழாவான சூரசம்ஹாரம் நவ.20ல் நடைபெறுகிறது. முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில்
19ம் தேதி நடைபெறும் வேல் வாங்குதல், 20ம் தேதி நடைபெறும் சூரசம்ஹாரம் ஆகிய நிகழ்வுகள் உள் விழாவாக கோயிலுக்குள் நடத்தப்படும். இதில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
XXXXX
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் விழாக்கள் ரத்து செய்யப்பட அ றிவிப்பு சிவ பக்தர்களுக்கு பெரிய ஏமாற்றத்தைத் தந்துள்ளது.
திருவண்ணாமலை தீப திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதியில்லை. தீப திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது. கார்த்திகை தீபத் திருநாளன்று பக்தர்கள் மலை ஏறவும், கிரிவலம் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கார்த்திகை தீபத்தன்று கோவிலுக்குள் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என்று கலெக்டர் வெளியிட்ட அறிவிப்பு கூறுகிறது.
XXXXXXX

கேரளத்திலுள்ள புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் பற்றிய செய்தி இதோ…………………
ஆண்டுதோறும் நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி ஆகிய 3 மாதங்கள், சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படுவது வழக்கம். அதன்படி, நேற்று மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. கொரோனா பாதிப்பு காரணமாக பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
பம்பை ஆற்றில் நீராட பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் மூலம் பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். தினமும் 1000 பக்தர்களுக்கும், சனி மற்றும் ஞாயிறு நாட்களில் 2,000 பக்தர்களுக்கும், மண்டல, மகர விளக்கு நாட்களில் 5,000 பக்தர்களும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்பதிவு செய்த பக்தர்கள் சபரிமலைக்கு வருவதற்கு 24 மணி நேரத்துக்கு முன்னதாக எடுத்த “கொரோனா இல்லை“ என்ற சான்றிதழ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.
இந்த சான்றிதழை நிலக்கல்லில் உள்ள முகாமில் சமர்ப்பித்தபின்பு தான் சபரிமலைக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
XXXXX

இத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன………………………….. செய்திகளை உங்களுக்கு வழங்கியவர் வைஷ்ணவி ஆனந்த்………………………… நன்றி, வணக்கம்
அனைவர்க்கும் ஞான மயக் குழுவினரின் ஸ்கந்த சஷ்டி வாழ்த்துக்கள்
tags–உலக , இந்து சமய, செய்தி மடல் 161120,
–subham–