எனக்குப் பிடித்த கவிதைகள் -1 !!! (Post 8951)

WRITTEN BY KATTUKKUTY

Post No. 8951

Date uploaded in London – – 20 NOVEMBER 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

               Compiled by Kattukutty

தேவை ஒரு ராவணன்

காத்திருந்து, காத்திருந்து,

ஒரு முடிவுக்கு வந்து விட்டோம்,

வில்லை ஒடித்து எங்களை அடைய

ஒரு ராமனை எதிர் பார்க்கவில்லை,

எங்களை தூக்கிச் செல்ல

ஒரு ராவணனாவது வருவானா

எனக் காத்திருக்கிறோம்!!! – கவிஞர்,சாகா முகைதீன்

xxx

சுதந்திரம்

சுதந்திரம் என்பது இன்னும்

பூமாலையாய் தான் உள்ளது!!!

நாம் தான் குரங்குகளாய்

மாறிவிட்டோம்!!! – …………வன்மி

xxx

கைதியின் புலம்பல்

பெண்ணே என்னை

உன் மனச்சிறையில் தானே

வைக்கச் சொன்னேன்…..

ஆனால்……..நீ

உன் அண்ணனிடம் சொல்லி

என்னை மத்திய சிறையில்

அடைத்து விட்டாயே???? – நா. தேனருள், தேவனாங்குறிச்சி

Xxxx

பட்டம்

படித்துப் பட்டம் பெற்றேன்

ஒன்றே ஒன்று…..

அதன்பின்

படிக்காமல் பெற்ற

பட்டமோ ஏராளம்!!!

தண்டச் சோறு,

தடி மாடு,

தறு தலை……… – உமா பிரியன்,உடுமலை.

xxx

சினிமா

வெள்ளைத் திரையில்

ரத்த அபிஷேகம்,

பிணத்திற்கு அலங்காரம் செய்யும்

குருட்டுக் கதைகள்……..

முக்கலும், முனகலுமே,

சினிமா பாடல்கள்

ஆபாசத் தெறிப்பு இரட்டை

அர்த்தச்சிரிப்பு,

கால் தரையில் படாமல் சண்டையிடும்

கதாநாயகன்!!!,

அவிழ்த்துப் போடவே ஆடையுடுத்தும்

கதாநாயகி !!!

செத்துப்போகவே பிழைப்பு நடத்தும்

வில்லன் !!!

மழையில் நனையவே

கனவுக் காட்சிகள்,

கடைசியாகவே ஓடி வர

காவலர்கள்,

நிழல் சினிமா நிஜமாய்

வலம் வரட்டும்,

இருட்டு சினிமா இனியேனும்

சில மெழுகு வர்த்திகளை

ஏற்றி வைக்கட்டும்!!! – மு. முருகேஷ்,புதுக்கோட்டை

xxxx

நான் யார்???

அப்பா என்னை

உதவாக்கரை என்றார்!

ஆசிரியர் என்னை

மண்டு என்றார்!

அடுத்த வீட்டுக்காரன் என்னை

அயோக்கியன் என்றார்!

எதிரிகள் என்னை

திருடன் என்றனர்!

நண்பர்கள் என்னை

துரோகி என்றனர்!

நாடு என்னை

அரசியல்வாதி என்கிறது!!! – சிபிச்சக்ரவர்த்தி வாசு தேவ நல்லூர்

xxxx

கனவுகள்

களவு கொடுப்பதற்கென்றே கனிகளை

பிரசவிக்கின்றன செடிகள்!!!

களவு கொடுப்பதற்கென்றே மீன்களை

வளர்க்கின்றன குளங்கள்!!!

களவு கொடுப்பதற்கென்றே பட்டு

தயாரிக்கின்றன புழுக்கள்!!!

களவு கொடுப்பதற்கென்றே தேன்

சேகரிக்கின்றன தேனீக்கள்!!!

களவு கொடுப்பதற்கென்றே முத்துக்களை

பொத்தி வைத்திருக்கின்றன சிப்பிகள்!!!

உன்னிடம் களவு கொடுப்பதற்காகவே இதயத்தை

வளர்த்த என்னைப் போல!!! – வீ. விஷ்ணு குமார், கிருஷ்ண கிரி

xxxx

இந்தியர் எங்கே???

எங்கள் தேசீயக் கொடிக்கு

மூன்று நிறங்கள்

இந்துக்கள்,

முஸ்லீம்கள்,

கிறிஸ்தவர்கள். – க.ஜெய சங்கர்

xxxx

நிதர்சனம்

ஆலமரத்து ஜோதிடர்

அடித்துச் சொன்னார்

அதிர்ஷ்டம் உன வீட்டுக்

கதவை தட்டுமென்று……….

அகமகிழ்ந்த என் அறிவிற்கு

அப்போதுதான் உறைத்தது,

என் வீட்டிற்கு கதவே

இல்லை என்று !!! – பி.ராமச்சந்திரன், விருது நகர். 100

xxxx

திருமணம்

1) முழு சுதந்திரம் மூன்று முடிச்சில் அடங்கியது

பெ.கி. முருகானந்தம், பெருமலை.

2) அடிமையாய் வாழ்ந்த பெண்ணுக்கு சுதந்திரம்,

சுதந்திரமாய் வாழ்ந்த ஆணுக்கு அடிமை விலங்கு

மாசு. சவுந்திரராசன், தளவாய் புரம்.

3) நிச்சயிக்கப்பட்ட விபத்து – கோ.சந்தோஷ்குமார், நெய்யார்

4) ஆணின் சுதந்திரத்திற்கு முற்றுப் புள்ளி, பெண்ணுக்கு

பிள்ளையார் சுழி!!! – எஸ் பூங்கதிர், திருவெண்ணைநல்லூர்.

5)பெற்றோரால் நிச்சயிக்கப் பட்ட ஆயுள் தண்டனை!!!

இளைய கண்ணதாசன் விருது நகர்.

xxx

வாக்காளர்கள்

கண்களை விற்று சித்திரம்

வாங்கியவர்கள் இல்லை இவர்கள்,

கடனுக்கு சித்திரம் வாங்கி, கண்களை

ஜப்தி கொடுத்தவர்கள்………..பாலா மணி பாரதி, கீழாம்பூர்

xxxx

முட்டை

கோழி போட்டது, அவித்தேன்,

வாத்தியார் போட்டார், அழித்தேன்…….செ.மலர்விழி, அன்சாரி நகர்.

xxx

நவீன கால கண்ணகி

அதோ வருகிறாள் கண்ணகி, காற்சிலம்போடு,

மதுரையை எரிக்க அல்ல,

மார்வாடிக் கடையில் அடகு வைக்க !!! – என் புனிதா, திருச்சி-20

xxx

சேவல்

தினமும் “கொக்கரக்கோ”என்றேன்,

ஒரு நாள் “குக்கருக்குள்” வெந்தேன் !!! ஏ.ஜெமீல் சாகிபு, நாகூர்

xxx

இலையுதிர் காலம்

தாவரப் பெண்கள் ஆடை மாற்றும் நேரம்- ஏ.மாதேஸ்வரன், நெறிஞ்சி

tags– -பிடித்த , கவிதைகள் , 

                                  *****
Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: