
Post No. 8952
Date uploaded in London – –20 NOVEMBER 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
வான சாஸ்திரத்தில் இந்துக்கள் அடைந்த முன்னேற்றம் வியப்பானது. தமிழ், எபிரேயம் எனப்படும் ஹீப்ரு , சீ ன, பாரஸீக , கிரேக்க, லத்தின் மொழிகளில் இலக்கியங்கள் எழுதப்படுவதற்கு முன்னரே இந்துக்கள் சம்ஸ்க்ருதத்தில் நட்சத்திர பட்டியல், கிரஹப் பட்டியலை எழுதி வைத்துவிட்டனர். மேற்கூறிய மொழிகள் பட்டியலில் தமிழ்தான் சின்னப்பையன். அதாவது கடைசியில் இலக்கியம் படைத்த குட்டித்தம்பி .
பைபிளின் பழைய ஏற்பாடு OLD TESTAMENT OF BIBLE , பாரசீக செண்ட் அவஸ்தா ZEND AVESTA ஆகியன கி.மு 900 வாக்கில் உருவாயின. ஹோமர் கிரேக்க மொழியில் எழுதிய இலியட், ஆடிஸி /ஒடிஸி ILLIAD, ODYSSEY (இரண்டு உச்சரிப்புகளும் சரி) ஆகிய காவியங்கள் கி.மு 800-ல் உருவாயின. லத்தின் மொழி காவியங்கள் தமிழுக்கு கொஞ்ச்ம் முன்னால் தோன்றின. சங்க இலக்கியத்தில் உள்ள 18 மேல் கணக்கு நூல்களில் உள்ள 30,000 வரிகளும் கி.பி.முதல் 3 நூற்றாண்டுகளில் எழுதப்பட்டன. தொல்காப்பியத்தின் தேதி கி.மு.முதல் நூற்றாண்டு முதல் கி.பி 5-ம் நூற்றாண்டு வரை ஊசல் ஆடுகிறது. நிற்க.

இவற்றுக்கெல்லாம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய ரிக் வேதத்தில் நட்சத்திரங்கள், கிரஹங்கள் பற்றிய குறிப்புகள் உள . ஆனால் முழுப் பட்டியல் யஜுர் வேதத்தில்தான் காணக்கிடக்கிறது.
முதலில் வானத்தைப் பார்த்து அதிசயித்த ரிக் வேத கவிஞன் (1-24-7 ரிக் வேதம்) வியக்கிறான் –
அஜீ கர்த்தனின் புதல்வன் ரிஷி சுநஸ் சேபன் பாடுகிறான் —
“இந்த ஆகாயத்தின் ஆழம் மிகப்பெரியது. இதன் தரையைப் பார்க்க முடியாது இந்த அடி முடியற்ற ஆகாயத்தின் உச்சியில் தூய்மையான வருண பகவான் ஒரு ஒளிக்கற்றையை வைத்திருக்கிறான். அங்கிருந்து ஒளி கீழே பாய்கிறது “.
இந்தக் கவிதையில் ரிஷி பயன்படுத்தும் சொல் ‘வனஸ்ய ஸ்தூபம்’. இது ‘ஒளித் தூண்’ , ‘ஒளி மரம்’ என்று சொல்லலாம் . பிரபஞ்சத்தை ஒரு வட்ட வடிவத்தில் உள்ள கூடாரமாகக் கண்டு அதிலுள்ள நட்சத்திரங்களையும் பாடுகிறார் கவிஞர்…….
“உச்சத்தில் வைக்கப்பட்டுள்ள இந்த நட்சத்திரங்கள் இரவிலே தெரிகின்றன. பகல் நேரத்தில் மறைந்து விடுகின்றன. இவை வருணனின் தடைப்படாத செயல்கள். அவனது ஆணையின் கீழ்
சந்திரன் இரவில் பிரகாசித்துக் கொண்டு செல்கிறான்.”1-24-10
இதற்கு முந்தைய எட்டாவது மந்திரத்தில் பகலில் பிரகாசிக்கும் சூரியனையும் பாடுவதால் காலை முதல் இரவு வரை எல்லாம் வருணனின் நியதிப்படி நடப்பதைக் கண்டு வேத கால மக்கள் குறிப்பு எடுத்ததை அறிகிறோம்
ஆழம் காண முடியாத, அடி முடியற்ற வானம் (BOTTOMLESS) என்பது சுவைத்துப் படிக்க வேண்டிய வரிகள்.
“இரவு .நேரத் திருடர்களைப் போலத் தோன்றி , பகல் வந்தால் ஓடி விடுகின்றன விண்மீன்கள் என்கிறார் அதர்வண வேதக் கவிஞர் .அப்போது சூரியன் உல கைப் பராமரிக்கிறான் என்கிறார் சூரியனை போலீசாகவும் நட்சத்திரங்களை திருடர்களாகவும் வருணிக்கிறார் என்றே தோன்றுகிறது — அதர்வண வேதம் 13-12-17; 20-47-14
சந்திரனின் பாதையையும் சூரியனின் பாதையையும் திதிகள், சுக்ல, கிருஷண பக்ஷங்கள் , தக்ஷிணாயணம் உத்தராயணம் என்றெல்லாம் காரணத்தோடு இந்துக்கள் பிரித்தனர். இதனால் அவர்கள் அறிவியல் பார்வையுடையோர் என்பது தெளிவாகிறது.. இதை விட முக்கியமான விஷயம் கிரேக்க மக்கள் உலகில் எழுதத் துவங்குவதற்கு முன்னரே கிரஹங்கள் நட்சத்திரங்கள், ருதுக்கள் பட்டியலை இந்துக்கள் வெளியிட்டதாகும் .
வான சாஸ்திர புஸ்தகம் எதையும் அவர்கள் எழுதவில்லை. இறைவனைத் துதி பாடியபோது , போகிற போக்கில் நட்சத்திரங்களைக் குறிப்பிடுகின்றனர்.
கிரஹங்கள் இடம் விட்டு இடம் செல்வத்தையும் ஒளிராமல் இருப்பதையும் அவர்கள் உன்னிப்பாக கவனித்தனர் . ஆனால் நட்சத்திரங்கள் இருந்த இடத்திலேயே இருப்பதையும் கண் சிமிட்டுவதையும் TWINKLING கண்டு வேறுபடுத்தினர்.
‘ந சரதி இதி நக்ஷத்ரஹ’ – ‘எது நடப்பத்தில்லையோ அது நட்சத்திரம்’ என்று வியாசர் மஹாபாரதத்தில் சாந்தி பர்வத்தில் விளக்குகிறார் (290-36, சாந்தி பர்வம்)
தாரா என்ற சொல்லில் இருந்து STAR ஸ்டார் , மாச என்ற சொல்லிலிருந்து மந்த் MONTH என்னும் ஆங்கிலச் சொற்கள் வந்ததையும் அறிவது பொருத்தம்
மாச என்றால் நிலவு என்கிறது ரிக் வேதம்; அதாவது நிலவின் ஒரு சுற்று = 1 மாதம் . இதையே தமிழர்களும் பின்பற்றி ‘திங்கள்’ என்றால் சந்திரன், ஒரு மாதம் என்று பொருள் கொண்டனர்.
சந்திரன் செல்லும் பாதையில் உள்ள 27+1 நட்சத்திரங்களையும் இந்துக்கள் பட்டியலிட்டனர். பெளர்ணமி அன்று எந்த நட்சத்திரத்துக்கு அருகில் சந்திரன் நிற்கிறதோ அதை அந்த மாதத்துக்கு பெயராக சூட்டி , 12 பெரிய விழாக்களைக் கொண்டாடினர் . திரு ஞான சம்பந்தர் இந்த பெளர்ணமி விழாக்களைத் தொகுத்து ஒரு பதிகமாகவே பாடிவிட்டார் . காஞ்சி சங்கராசார்ய சுவாமிகள் (1894-1994) 12 மாதங்களின் பெயர்களையும் விளக்கி அற்புதமான சொற்பொழிவு ஆற்றியுள்ளார்.
XXX

ரிக் வேதம் பாடும் நட்சத்திரங்கள்
அகா /மகம், அர்ஜுனி — 10-85-13
ரேவதி, புனர்வசு — 10-19-1
ரேவதி – 5-11-14; 4-51-4
திஷ்ய – 5-54-13; 10-64-8
சித்ரா – – 4-51-2
நக்ஷத்ரம் என்ற சொல்லையும் மூன்று இடங்களில் பயன்படுத்துகிறது
XxxX
கிருஷ்ண யஜுர் வேதத்தின் தைத்ரீய ஸம்ஹிதையில் 28 நட்சத்திரப் பெயர்களும் அவற்றுக்கான அதிதேவதைகளும் கிடைக்கின்றன …….
கிருத்திகா – அக்னி
ரோஹிணி – பிரஜாபதி
மிருகசீர்ஷ -ஸோம
ஆருத்ரா – ருத்ர
புனர்வசு – அதிதி
திஷ்ய – ப்ருஹஸ்பதி
ஆஸ்லேஷா – ஸர்ப்ப
மகா – பித்ரு
பூர்வ பல்குனி – அர்யமா
உத்தர பல்குனி – பக
ஹஸ்த – ஸவித்ரு
சித்ரா – இந்திர
சுவாதி – வாயு
விசாகா – இந்திர/ அக்னி
அனுராதா – மித்ர
ஜேஷ்டா – விஷ்ணு
விச்ருதி – பித்ர்
பூர்வ ஆஷாட – ஆப
உத்தர ஆஷாட – விஸ்வே தேவா
ஸ்ரோண – விஷ்ணு
ஸ்வவிஷ்ட – வசு
சதபிஷஜ – இந்திர
பூர்வ ப்ரோஷ்டபத – அஜ ஏகபாத
உத்தர ப்ரோஷ்டபத — அஹிர் புதன்ய
ரேவதி – பூஷன்
அச்வா யுஜு – அஸ்வினவ்
அப பரணி – எமன்
இவை தவிர அபிஜித் என்னும் நட்சத்திரமும் சில கணக்குகளில் உண்டு
பஞ்சங்கமே தேவை இல்லை. வனத்தில் சந்திரன் உள்ள நிலையைக் கொண்டே பெரும்பாலான விஷயங்களைக் கணக்கிட்டு வந்தனர் .
FROM OUR OLD POSTS IN THIS BLOG……………………………..
- Ashwini –Alpha, Beta –Aries அஸ்வினி
2) Bharani – No 28,29,41 Taurus பரணி
3) Krittika – Pleiades கார்த்திகை
4) Rohini – Aldebaran Hyades, Alpha, Theta, Gama, Delta and Epsilon Taurus ரோஹிணி
5) Mrigashirsha – Lambda, Phi 1, Phi 2, Orion மிருகசீர்ஷம்
6) Aardraa –Betelgeaux – Alpha Orion திரு ஆதிரை
7) Punarvasu – Castor, Pollux with Procyon Alpha, Beta, Gemini-Alpha Canis Minor respectively புனர் பூசம்
8) Pushya – Gama, Delta and Theta of Cancer பூசம்
9) Ashlesha – Delta, Epsilon, Eta, Rho and Zeta Hydra ஆயில்யம்
10) Maagha – Alpha, Ela, Gama, Zeta My and Epsilon Leonis மகம்
11) Poorva Phalkuni – Delta and Theta Leo பூரம்
12) Utra Phalkuni – Beta and 93 Leo உத்தரம்
13) Hasta – Delta, Gama, Eta, Virgo ஹஸ்தம்
14) Chitraa – Spica, Alpha Virgo சித்திரை
15) Swaati – Arcturus – Alpha Bootes ஸ்வாதி
16) Vishaakha – Alpha, Beta etc Libra விசாகம்
17) Anuraadha – Beta, Delta, Pi –Scorpia அனுஷம்
18) Jyestha – Antares Alpha, Sigma Tau Scorpio கேட்டை
19) Mula – Scorpio, tail stars மூலம்
20) Poorvaashadaa – Delta and Epsilon Sagittarius பூராடம்
21) Uttaraashaada – Zeta and Omicron Sagittarius உத்திராடம்
22) Shraavanaa – Altair – Alpha Aquila திரு ஓணம்
23) Dhanishtha – Delphinus அவிட்டம்
24) Shatabhisak – Lambda Aquarius சதயம்
25) Poorva Bhaadrapada – Alpha and Beta Pegasus பூரட்டாதி
26) Uttara Bhaadrapada – Gama Pagasus and Alpha Andromeda உத்திரட்டாதி
27) Revathi – Zeta Piscum ரேவதி
Xxxxxxxxxxxx
Like we have Graha purusa and Vastu Purusa, Varahamihira gives us some information about Nakshatra Purusa:
The FEET of the stellar deity are represented by the star Mula
The LEGS by Rohini
The KNEES by Asvini
The THIGHS by two (Purva/Uttara) Asadas
The PRIVITIES by two Phalgunis (Purva/ Uttara)
The HIPS by Krittikas
The SIDES by Purva and Utthara) Bhadrapadas
The STOMACH by Revati
The BREAST by Anuradha
The BACK by Dhanista
The ARMS by Visakha
The HANDS by Hastha
The FINGERS by Punarvasu
The NAILS by Aslesa
The NECK by Jyeshata
The EARS by Sravana
The MOUTH by Pusya
The TEETH by Svati
LAUGHTER by Sathabishak
The NOSE by Magha
The EYES by Mrgasiras
The FOREHEAD by Chitra
The HEAD by Bharani and
The HAIR by Arudra
Hindus always describe Gods from Foot to Head and human beings from Head to Foot. It is seen in Sangam Tamil and more ancient Sanskrit literature.
12 signs of zodiac (12 Rasis) represent Kalapurusa (Time in the form of a Person). Likewise the 27 Nakshatras are distributed among the limbs of the Nakshatra purusa.
tags –வேத கால,, வானியல் ,, அதிசயங்கள்,
–SUBHAM–
R Nanjappa
/ November 20, 2020In recent years, Nilesh Nilkanth Oak has shared his findings of the astronomical data relating to the date of Ramayana, Mahabharata War and Bhishma Nirvana in three books. He has given precise data based on Voyager 4.5 NASA software. He uses the system of ‘archaeo astronomy’. Unlike ground-bound archaeology, which is subject to mutilation, and deterioration over time, the position of the stars and planets are definite and fixed and are beyond human intervention. He gives the upper and lower ends for his timings, and gives reasons why he has chosen a particular date as more likely. One feature of his books is that he deals with all the theories and dates ( about 120) that have been proposed so far and deals with them on the basis of astronomical data. There are others who disagree with his dates, even on the basis of the same data; but this is not more disturbing than two doctors disagreeing on the basis of the same clinical data, or two judges interpreting the same law differently. His views are more advanced than those of Tilak and Jacobi as they are based on more solid observed astronomical data which were not available in Tilak’s time. His views are well worth a study. Only a student of astronomy can judge the professional standing of the book. But Oak completely avoids astrology. His three books are:
– When Did The Mahabharata War Happen [ 5561 BC]
– The Historic Rama (12240 BC)
– Bhishma Nirvana: As Astronomy Poison Pill