குரு பகவான் (Post No.8961)

WRITTEN  BY KATTUKKUTY

Post No. 8961

Date uploaded in London – – 23 NOVEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

for Voice Recording of this talk on Gnanamayam, please go to

Facebook.com/gnanamayam

குரு பகவான்

Kattukutty

நவ கிரகங்களில், பெரியவரும், எப்பொழுதும், நல்லதே செய்பவரும்,

பெரிய ஞானியும்,ஆன குருவை வணங்கி ஆரம்பிக்கிறேன்.

பிரும்மா தனது படைப்புத்தொழிலைச் செய்ய தன் உதவிக்கு

9 பிரஜாபதிகளை நியமித்தார்.நவ பிரஜாபதிகள் எனப்படும் இவர்கள்

பிரும்மாவின், “மானஸ புத்திரர்கள்” எனப் படுவார்கள்.இவர்களில் மிகச் சிறந்தவரும் தபஸ்வியுமானவர் “ஆங்கிரஸர்” என்ற முனிவர்!!!

இவருக்கும் வசுதா என்ற இவரது மனைவிக்கும் பிறந்தவர் தான்

குரு பகவான். 64 கலைகளையும், நான்கு வேதங்களையும் கற்று கரை

கண்ட அவர் காசி சென்று 10,000 தேவ வருடங்கள் தவம் புரிந்தார்.

இவருடைய தவத்தை மெச்சி சிவ பெருமானே நேரில் காட்சி

தந்து, ‘நீ நித்ய ஜீவனாகி, இந்திரனுக்கு, குருவாகி, தேவர்களுக்கு

உதவி செய்வாய்’ என்று அருளினார்!

பிரும்மாவிற்கும் பிடித்தவனாகி,இவர்ஆலோசனைப்படி தேவர்கள்

நடந்து சிறப்பாக வாழ்ந்தனர்

குரு என்றால் என்ன அர்த்தம்???

கு – என்றால் இருள் என்று அர்த்தம்.

ரு -நீக்குவது எனப்பொருள் . இவர்அறியாமை, வறுமை, போன்ற

இருளை நீக்கி கல்வி செல்வம் , ஒழுக்கம் என்ற மூன்றையும்

கொடுக்கின்றார்.ஆகையினால் குரு பார்க்க கோடி குற்றம் நீங்கும்

என்ற பழமொழியும் உண்டு!!!

இவரைப்பற்றிய விவரங்கள்

இவர், நீண்ட நெடிய உருவத்தினர்.பொன்னிறமானவர்.

மஞ்சள் பட்டுடுத்தி புஷ்பராக மாலையையும், முல்லைப் பூவையும்

அணிந்தவர்.மந்தகாச புன்னகையுடன் எப்போதும் இருப்பவர்.

ஒரு கரத்தில் தண்டத்தையும், இரண்டாவது கரத்தில் கமண்டலத்தையும்,மூன்றாவதுகரத்தில்அட்சமாலையையும்,

நான்காவது கரம் அபயஹஸ்தத்துடனும் இருப்பவர்.இவரை

வைணவர்கள்,ஹயக்ரீவராகவும, சைவர்கள் தட்சிணாமூர்த்தியாகவும்

வழிபடுவதுண்டு.

புத்திர காரகனாகவும், ஜீவன காரகனாகவும் உள்ள இவர் மானிடர்

பிறக்கும் ஜாதகத்தில் குரு லக்னம், 5 அல்லது, 9 ல் இருந்தால்

போதும், அவர்கள மேதைகளாகவும்,ஞானிகளாகவும், ஆகிறார்கள்.

மற்றவர்களால் வணங்கப் படுவார்கள். மேலும் குருதிசை இளமையில்

வந்தால், கல்வியில் முதல் நிலையும், நடுவயதில் வந்தால் சகல

சௌபாக்கியங்களையம்,இறுதில் வந்தால்,செழிப்பான சந்ததிகளையும்,அந்தப்பகுக்குத்தலைவனாகும் தகுதியையும்

தருவார்!!!

இவரது வேறு பெயர்கள்

குரு, அந்தணன், அமைச்சன்,அரசன், ஆசான்,ஆண்டளப்பான்,

சிகண்டீசன், சீவன், சுரகுரு,தாராதிபதி, தெய்வ மந்திரி,நற்கோள்,

பிருஹஸ்பதி, பீதகன், பொன்னன்,மறையோன் வேதன்.

திரைலோக்கி, அல்லது ஏம நல்லூர்,என்ற இடத்தில், குரு பகவான்,

விரதம் இருந்து திரைலோக்கி அகிலாண்டேஸ்வரி அம்மனையும்,

சுந்தரேஸவர்ரையும், மல்லைப்பூவால் வழிபட்டு, தயிர்சாதம்

நிவேதனம் செய்து வழிபட்டார்,சிவ பெருயானே, ரிஷப வாஹனத்தில்

தரிசனம் கொடுத்து “ இப்பூவுலகில் வாழ்பவர்கள் திருமணம் செய்ய நல்ல காரியங்கள நடக்கவும் நீ காரணமாக இருப்பாயாக!!! என்று வரம் கொடுத்தார்.மன்மதனுக்கு உயிர் கொடுத்து ரதியுடன் சேர்த்து வைத்த இடமும் இதுவே!!! அன்று முதல் இப் பூவுலகில் யாரும்

திருமண வேளை வந்துவிட்டதா என்று  கேட்பதில்லை.

குரு பார்வை வந்து விட்டதா என்றே கேட்கிறார்கள்.

விஞ்ஞான விவரங்கள்

சூரியனிடமிருந்து வியாழன் என்ற குரு இருக்கும் தூரம் –

77கோடியே 83 லட்சத்து, 30 ஆயிரம் மைல்கள்

பூமியிலிருந்து தூரம்- 68, கோடியே,83 லட்சம் மைல்கள்

பூமிக்கு ஒரு சந்திரன் போல்  வியாழனுக்கு மொத்தம் – 16 சந்திரன்கள்

தன்னைத்தானே சுற்றிக்கொள்ள -10 மணி நேரமே ஆகிறது.

சூரியனைச் சுற்றி வர – 11 ஆண்டுகளும், 86 நாட்களும்

வியாழன் சூரியனின் வெப்பத்தை 51% எடுத்துக் கொள்கிறது !!!

வியாழன் பூமியை விட 318 மடங்கு பெரியது !!!

வியாழன் என்ற குருவைப் பற்றிய மற்ற விவரங்கள்

மனைவி. தாரை

மகன்கள். பரத்வாஜன், எம கண்டன், கசன்.

நிறம் – பொன்னிறம்

வஸ்திரம் மஞ்சள் பட்டு

ஜாதி – அந்தணர்

லிங்கம் – ஆண்

குணம் – சத்துவம்

உத்தியோகம் – மந்திரி

அதி தேவதை – இந்திரன்

ப்ரத்யதி தேவதை – பிரும்மா

திசை – வட கிழக்கு

பூதம் – ஆகாயம்

மொழி – ஸம்ஸ்கிருதம்

உடல் ஆதிக்கம்- சதை

அவஸ்தை யௌவனம்

அட்சரம்- ஒ

தேசம் – சிந்து தேசம்

வாகனம் – யானை

இஷ்ட காலம் – அதி காலை

ஸ்வபாவம் – ஸௌம்யம்

பிணி – வாதம்

ஆதி பத்யம் –  புத்திர காரகன்

பிறந்த தேசம் – அவந்தி

பிறந்த நட்சத்திரம் – அவிட்டம்

கோத்திரம் – ஆங்கிரச கோத்திரம்

உச்சம். கடகம்

நீசம் – மகரம்

சொந்த வீடுகள். தனுசு, மீனம்

பாரவை –  லக்னம், 5 7. 9.

நண்பர்கள் – சூரியன், சந்திரன், செவ்வாய்

விரோதிகள் –  புதன், சுக்கிரன்

சமம் –  சனி

குரு திசை – 16 வருடம்

நட்சத்திரங்கள். புனர்பூசம், விசாகம், பூரட்டாதி

தானியம் –  கொண்டக்கடலை என்ற மூக்குக் கடலை

நிவேதனம்-  தயிர் சாதம்

சமித்து – அரசு

மிருகம் – மான்

பறவை – கௌதாரி

புஷ்பம் – முல்லை

ரத்தினம் – புஷ்ப ராகம்

உலோகம் – தங்கம்

ஆசனம் – நீண்ட சதுரம்

இயற்கை –  சுபர்

தைலம் – பசு நெய்

ஸ்தலங்கள்  – திருச்செந்தூர், ஆலங்குடி, திட்டை

மதுரை அருகில் உள்ள குருவித்துறை

திருவலி தாயம் ( பாடி),

பரிகாரம் –  கொண்டக்கடலை சுண்டல் பசு நெய்,

தயிர் சாதம் ஆலங்குடி கோவிலில் 24 நெய் விளக்கேற்றி, 24 முறை பிரதட்சிணம்.

குரு காயத்ரி –  ஓம் குரு தேவாய வித்மஹே பரம குருப்யோ

தீமஹி தன்னோ குரு ப்ரசோதயாத்

குரு ஸ்லோகம். தேவானாம்ச்ச ரிஷினாம்ச்ச குரும் காஞ்சன

சன்னிபம் புத்தி பூதம் த்ரிலோகேசம்

தம் நமாமி ப்ருஹஸ்பதிம்!!!!

ரிக் வேதத்தில் குரு பகவானைப் பற்றிய வருணனை

குரு அக்னியைப் போல் சிவந்த அழகிய உருவம் படைத்தவர்.

பரிசுத்தமானவர். அவர் 7 வாய்களையும், மெல்லிய நாக்கையும்,

100 இறக்கைகளையும் உடையவர். கையில் இரும்பு கோடரியும்

உடையவர். “விஸ்வ ரூபா” என்னும் பசுவின் மீது ஆரோகணித்து

வருபவர் –  என இப்படி ரிக் வேதம் வருணிக்கிறது.

மகா மகம் – குரு ஒரு முறை சூரியனை சுற்றிவர 12 வருடங்கள் ஆகும்.அப்படி வரும்போது சிம்மத்தில் குரு மக நட்சத்திரத்தில்

வரும் காலத்தை “மகா மக காலம்” என்று சொல்லுவார்கள். அப்பொழுது உலகத்தில் ஆன்மீக மறுமலர்ச்சி உண்டாகும் .

அப்போது கும்ப கோணத்தில் உள்ள மகாமக குளத்தில் சகல

நதிகளும் இறங்கும்.அப்போது அந்தக் காலத்தில் அக்குளத்தில்

குளித்தால் சகல பாபங்களும், தோஷங்களும் விலகும். அந்தக்

காலத்தில் சுப காரியங்கள் நடத்தக் கூடாது.

குருவை வணங்கினால், குரு ஜாதகத்தில் நல்ல நிலைமையில்

இருந்தால் கிடைக்கும் நற்பலன்கள் :-

மந்திரி அல்லது அதற்கு சம மான பதவி,களங்கமற்ற களையான

முகம்,ஞானத்தை உணரும் தன்மை,சன்யாசி ஆகும் பாக்கியம்,

யானை மேல் போகும் கஜ கேசரி யோகம், விவேகம், வித்தைகளில்

வல்லுனத்தன்மை, சிம்மக் குரல், அனைவரையும் பணிய வைக்கும்

ஆற்றல்.

இதைக் கேட்ட அனைவரும் குருவை வணங்கி, கல்வி, நல்ல பதவி , பொன் பொருட்களையும் பெற்று பெரு வாழ்வு வாழ இறைவனை

வேண்டிக்கொண்டு விடை பெறுகிறேன்.

நன்றி வணக்கம்…….

tags – குரு பகவான், பிருஹஸ்பதி, jupiter 

****

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: