
Post No. 8966
Date uploaded in London – – –25 NOVEMBER 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
ஹிந்துக் கோவில்களை இழிவு படுத்தும் சீரியல்கள், படங்கள்!
ச.நாகராஜன்
ஊடக சுதந்திரம் என்றால் எந்தப் பத்திரிகை வேண்டுமானாலும் எந்த படத் தயாரிப்பாளர் வேண்டுமானாலும் ஹிந்து மதத்தையும், ஹிந்துக் கோவில்களையும் ஒரு குறிப்பிட்ட ஜாதியினரையும் இழிவு படுத்தலாம் என்று அர்த்தமில்லை.
இப்படிப்பட்டவர்களை யாரும் சுட்டிக் காட்டுவதுமில்லை, தட்டிக் கேட்பதும் இல்லை.
ஓரிருவர் தட்டிக் கேட்டாலோ பத்திரிகை சுதந்திரம் என்ற பேரில் கம்யூனிஸ்டுகள், ஜிஹாதிகள், மிஷனரிகள் வருவார்கள். ஹ்யூமன் ரைட்ஸ் பேர்வழிகளும், சில எழுத்தாளினிகளும் எழுத்தாளர்களும் ‘தாங்கள் இதுவரை மறைந்திருக்கும் மர்மத்தை விடுவித்து’ உடனே ஓடோடி வந்து தட்டிக் கேட்போரை மட்டம் தட்ட ஆரம்பிப்பார்கள்.
இது ஜனநாயகம் தந்த ஒரு மோசமான கேலிக் கூத்து.
மூக்குத்தி அம்மன் என்று ஒரு படம். ஒரு குறிப்பிட்ட ஜாதியினரை இழிவு படுத்தும் வசனங்கள், ஒரு சிறு பெண் கிறிஸ்தவ மத சிலுவைக் குறியைப் போடுவதும் அவளை கர்த்தர் தேர்ந்தெடுத்துள்ளார் என்று ஒரு நன் வீர வசனம் பேசுவதும் என்ன ஒரு அநியாயம். அதே போல ஒரு முஸ்லீம் பெண்ணோ அல்லது ஒரு கிறிஸ்தவ பெண்ணோ கோவிலின் முன் சென்று கும்பிடுவது போல ஒரு காட்சியையாவது நீங்க்ள் பார்த்திருக்கிறீர்களா? அந்தப் பெண்ணை ஹிந்து தெய்வம் தேர்ந்தெடுத்து விட்டது என்று வீர வசனம் பேச விடுவார்களா?
‘எ சிடி ஆஃப் ட்ரீம்ஸ்’ என்று ஒரு டி.வி. சீரியல்! மோசமான காட்சிகள் ஒரு புறம் இருக்கட்டும், ஒரு இஸ்லாமியரை வீரனாகவும் தியாகியாகவும் காண்பிப்பது ஒரு புறம் இருக்கட்டும், ஒரு ஹிந்து குடும்பத்தில் அதிகார ஆசையினால் அண்ணன் தங்கை போட்டி ஏற்படுவது ஒரு புறம் இருக்கட்டும், கோவிலின் பிரகாரத்தில் பின் புறத்தில் உள்ள நீர்த்த்தொட்டியில் அண்ணனை தங்கை சாக அடிக்கும் காட்சி என்ன நியாயம்?
தட்டிக் கேட்க ஆளில்லை எனில் தம்பி சண்ட பிரசண்டன் தான்.
இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
ஜோதிகளும், பூமி நாயகர்களும் வெளி நாட்டில் கோடிக் கணக்கில் பணம் வாங்கிக் கொண்டு ஹிந்து மதத்தை இழிவு படுத்தி, வாங்கிய பணத்திற்கு சரிக் கட்டும் காட்சிகளை எடுப்பது நியாயமா? வசனங்களைப் பேசுவது சரிதானா?
ஹிந்து மதத்தில் ஆசாரியர்கள் முன் வருவதில்லை, ஓரிரண்டு அப்பாவிகள் இதை எடுத்துச் சொன்னால் அவர்களுக்கு வரும் விபத்துக்கள் ஏராளம்!
மோடிஜி அரசும் முன் வருவதில்லை, பாதுகாப்பிற்கு, என்பது இன்னும் ஒரு துக்ககரமான விஷயம்.
தமிழ் படங்களில் ஏராளமான படங்களில் சண்டைக் காட்சிகள் கோவிலுக்கு முன்னால் படம் பிடிக்கப்படுவதை இணைய தள் ஆர்வலர்கள் தங்கள் ப்ளாக்குகளில் சுட்டிக் காட்டி வருகின்றனர். வரவேற்கத்தக்க ஒரு அம்சம் இது.
அவர்கள் கேட்கும் கேள்வி ; “எந்த ஒரு இந்தியத் தயாரிப்பாளராவது இதே சண்டைக் காட்சிகளை ஒரு மசூதியின் முன்னாலோ அல்லது ஒரு சர்ச்சின் முன்னாலோ இதே போல எடுப்பாரா, எடுக்கத் தயாரா என்பது தான்!
ஹிந்துப் பெயர்களைக் கொண்டுள்ள தயாரிப்பாளர்கள் இப்படி எடுப்பது அவர்கள் பெரிய கோழைகள் என்பதைக் காட்டுகிறது என்கிறார் விலாஸ்னி என்னும் ஒரு ஆர்வலர்.
அன்பர்கள் ஒருங்கிணைந்து இப்படிப்பட்ட படங்கள், சீரியல்கள் வந்தவுடன் தகுந்த நடவடிக்கை எடுக்க ஒரு பெரும் நிறுவனம் வேண்டும்.
ஹிந்துக்களை இழிவுபடுத்தியும் ஹிந்துக் கோவில்களை இழிவு படுத்தியும் இப்படி காட்சி, வசனம் அமைப்போர், பத்திரிகை சுதந்திரம், மனித உரிமைகள், சமத்துவம் என்ற பெயரால் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள முன் வந்தால் அதை சட்ட ரீதியாகவும், சமூக ரீதியாகவும் எதிர்த்து அற நெறிகளைக் காப்பாற்ற ஒரு நிறுவனம் வேண்டும் என்பது தான் இன்றைய உண்மை.
இதில் அரசியல்வாதிகளும் போலி முதலைக் கண்ணீர் விடுபவர்களும் சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டியது மிக முக்கியம்!
சமீபத்தில் வந்த தமிழ் சீரியலில் ஒரு கற்பழிப்பு காட்சி மிக மோசமாக சித்தரிக்கப்பட்டதை நீதி மன்றமே கண்டித்து தயாரிப்பாளரை மன்னிப்புக் கேட்கச் சொன்னது ஒன்று தான் நமது அரசியல் அமைப்பின் மீதும் ஜனநாயகத்தின் மீதும் நீதி மன்றத்தின் மீதும் நமக்கு இருக்கும் கடைசி நம்பிக்கை சரி தான் என்பதை உறுதிப்படுத்துகிறது!
இந்தக் கட்டுரையில் உள்ளது ஓரிரு காட்சிகள் தான்! இன்னும் சுட்டிக் காட்டுவது என்று ஆரம்பித்தால்……?!
அன்பர்கள் தாங்கள் பார்த்த படங்களிலும் சீரியல்களிலும் வரும் ஹிந்து விரோத காட்சிகளைச் சுட்டிக் காட்டுவார்களா?
***

tags– மூக்குத்தி அம்மன், ‘எ சிடி ஆஃப் ட்ரீம்ஸ்’
***
R Nanjappa
/ November 25, 2020இது தமிழ் நாட்டிற்கு மட்டுமே வந்த சாபக்கேடு. பொதுவாக ஹிந்திப் படத்திலும் கிறிஸ்தவர்களையும் முஸ்லிம்களையும் உயர்வாகக் காட்டுவார்கள்; வில்லன்களை நெற்றியில் பெரிய குங்குமப்பொட்டு, கையில் பலவகை மோதிரங்கள், கழுத்தில் பலவித மாலைகள் என்றெல்லாம் வேஷம் போட்டுக் காட்டுவார்கள். அனாதைக் குழந்தை என்றால் அதை யாரோ ஒரு பாதிரியார் வளர்ப்பதுபோல் காட்டுவார்கள். “தீவார்” படத்தில் ஹீரோவை ‘786’ நம்பர் போட்ட ஒரு டோக்கன் வில்லை காப்பாற்றுவது போல் காட்டுவார்கள். இப்படி மறைமுகமாக பிற மதத்தை தூக்கிக் காட்டினாலும், நேரடியாக ஹிந்து மதத்தை இழிவு படுத்தும் காட்சிகளோ, வசனங்களோ வருவதில்லை.
1975ல் “ஜய் ஸந்தோஷி மா” என்று ஒரு படம் வந்தது. முழுதும் கற்பனைக் கதை. இதில் சந்தோஷி மாதா என்ற ஒரு அம்மனை முழுமையாக கற்பனை செய்து காட்டினார்கள். அவர் அருளால் நடக்கும் அற்புத நிகழ்ச்சிகளையும் அவரை வணங்கிப் பயன்பெற்றவர்களின் வாழ்க்கையையும் சித்தரித்துக் காட்டினார்கள்.இதில் பெரிய ஸ்டார் நடிக நடிகைகள் இல்லை. லதாமங்கேஷ்கர் பாடவில்லை; உஷா மங்கேஷ்கர் பாடிய ஆரதிப்பாட்டு வட இந்தியா முழுவதும் மிகப்பிரபலமானது. இந்த சமயத்தில் வந்த ஸ்டார் மயமான ‘ஷோலே” வசூல் குவித்துக்கொண் டிருந்தது. ஆனாலும் ஜய் சந்தோஷிமா அதற்கிணையாக சக்கைப்போடு போட்டது.
இதில் ஒரு சாரமான அம்சம், சந்தோஷி மா ஒரு தெய்வமாக பாமரர், பண்டிதர் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டார். அவருக்குப் புதிய கோவில்கள் உருவாயின. பெண்கள் அதிக அளவில் சந்தோஷிமா விரதங்கள், பூஜைகள் அனுஷ்டிக்கத் தொடங்கினர்! பின், இதற்கு நமது புராணங்களில் ஏதோ ஆதாரம் தேடி, ஒரு புதிய சந்தோஷிமா கதை, புராணமும் உருவாக்கினர்!
இப்படி வட இந்தியாவில் இருக்கும் ஆக்கத்திறன், ஆஸ்திக நம்பிக்கை இங்கு தமிழ் நாட்டில் இல்லை! இதற்குப் பல காரணங்கள்:
– 60 வருஷங்களுக்கு மேலாக இங்கு சினிமாத்துறை அசல் நாத்தீகவாதிகளின் கையில் இருக்கிறது
-இங்கு நாஸ்தீக வாதம் அரசியலின் ஜீவ நாடியாக இருக்கிறது.
-இந்த நாஸ்தீக வாதமும் பிராமண வெறுப்பு என்னும் அடிப்படையில் எழுந்தது.
-பிராமண எதிர்ப்பு என்றவுடன் தமிழ் நாட்டில் ஆஸ்திக-நாஸ்திக வேற்றுமை மறைந்துவிடும்.
-ஹிந்து மதம் ஏதோ பிராமணர்கள் மதம் என்பது போலவும், தமிழர்கள் தனி என்பது போலவும் ஒரு பிரமை பரப்பப்பட்டு விட்டது. இது இளைஞர்களிடையே பரவிவிட்டது. This is the default position.
-முருகனே ஹிந்துக் கடவுள் இல்லை, திருவள்ளுவர் செயின்ட் தாமஸின் சிஷ்யர் என்பது போலெல்லாம் கட்டுக்கதைகள் பரவிவிட்டன. ஆராய்ச்சி என்ற பெயரில் இதெல்லாம் பல்கலைக்கழகத்தில் புகுந்து விட்டது.
– மத விஷயத்தில் தமிழ் நாட்டில் ஒற்றுமை இல்லை. திருஞான சம்பந்தர் பத்தாயிரம் பெண்களைக் கெடுத்தார் என்று ஒரு அவதூறு கிளப்பினர். தமிழ் நாட்டில் என்ன பெரிய எதிர்ப்பு எழுந்தது? துக்ளக் பத்திரிகைதான் துணிந்து எழுதியது! [ சம்பந்தர் பிராமணர் என்பதாலோ, என்னவோ தமிழ் மடங்கள் அவ்வளவு தீவிரமாக எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை! சென்ற வருடம் ஆண்டாள் விஷயத்தில் கிளர்ந்த எதிர்ப்பு அசாதாரணமானது.]
– தமிழ் நாட்டில் மத மாற்றப் பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கு வெளி நாடுகளிலிருந்து பணம் வந்து குவிகிறது. இன்றைய மீடியா பிரபலங்கள் இதில் சம்பந்தப்பட்டிருப்பதாக பேசப்படுகிறது.
– தமிழ் சிறுவர் சிறுமியர் அதிக எண்ணிக்கையில் கிறிஸ்துவப் பள்ளிகளிலேயே படிக்கின்றனர். இவர்கள் சிறிது சிறிதாக மன மாற்றத்திற்கு உள்ளாகின்றனர். மத மாற்றம் பின் தொடரலாம்!
இந்தப் பின்னணியில் பார்த்தால், இந்த மூக்குத்தி அம்மன் விவகாரம் ஒரு தொடர்கதையின் சமீபத்திய அத்தியாயம் தான்! இதைத் தடுக்கும் சக்தி தமிழ் நாட்டில் இல்லை!
வேல் யாத்திரையைத் தடுக்கும் அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சர் பாராட்டு தெரிவிக்கிறார். இவர்கள் நமது மதத்தைக் காக்க என்ன செய்துவிடப் போகிறார்கள்! ஓட்டுக்காக எங்கும் போவார்கள்.
இதெல்லாம் இருக்கட்டும். ஒரு குறிப்பிட்ட மதத்தை இப்படி இழிவாகக் காட்டும் படத்தை எப்படி தணிக்கையில் அனுமதித்தனர்? இதற்கு யார் பொறுப்பு?
இப்படிப் பாருங்கள். வடக்கு வாழ்கிறது, தமிழ் நாடு சரிகிறது என்பது புரியும்!
santhanam nagarajan
/ November 25, 2020நூற்றுக்கு நூறு தாங்கள் சொல்வது உண்மை! ஒவ்வொரு தமிழ் படமாக ஆராய ஆரம்பித்தால் கதைக்குச் சம்பந்தமே இல்லாத காட்சிகள் மற்றும் வசனங்கள் வலிய புகுத்தப்பட்டிருப்பது தெரிய வரும்! இது செய்ய வேண்டிய ஒரு ஆராய்ச்சி. எந்த முனைவர் பட்டம் பெற்றவரின் ஆய்வுரையை எடுத்தாலும் பக்தி, பிராமணர் சம்பந்தப்பட்ட ஆய்வுகள் வரும் போது வேறு வழியில்லாமல் பாடல்களைக் குறிப்பிடுப்படுபவர் , ‘இது இன்னும் சற்று ஆராயப்பட வேண்டிய விஷயம்’ என்று எழுதி தன் பட்டம் வாங்கும் வைபவத்தை உறுதி செய்து கொள்கிறார். ஒரு முனைவரின் ஆராய்ச்சி பட்ட நூல். நால்வரின் ஏன் திருஞானசம்பந்தரின் பெயர் முதலில் குறிப்பிடப்படுகிறது என்று வலிய தானே ஒரு கேள்வியைக் கேட்டுக் கொண்டு அவர் ஒரு அந்தணர் என்பதால் என்கிறார்! என்னத்தைச் சொல்வது! ஏராளமான பணத்தை – கோடி கோடியாகக் -கொடுத்து திரைப்பட உலகம் நாசமாகி விட்டது; கல்வி நாசமாகி விட்டது! இனி ஒரு மஹாபுருஷர் தோன்றி இவர்களை முறியடித்தால் தான் விமோசனம்!
தங்கள் பதிவுக்கு நன்றி! எத்தனை பேர் இப்படி பதிவு செய்வார்கள்?!! நாகராஜன்
santhanam nagarajan
/ November 25, 2020கட்டுரையில் ஒரு சிறு திருத்தம். அண்னனை தங்கை சாக அடிக்கவில்லை. அக்காளே தம்பியை சாக அடிக்கிறாள். சுத்தமான ஹிந்து குடும்பங்களைச் சேர்ந்த மஹராஷ்டிர பெயர்கள்சீரியல் முழுவதும். மனம் நோகிறது! மஹராஷ்டிரத்தில் இதை யாராவது கண்டித்தார்களா? தெரியவில்லை!